உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய கூட்டரசு சாலை 1 (சபா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டரசு சாலை 1
மலேசிய கூட்டரசு சாலை 1 (சபா)
Malaysia Federal Route 1 (Sabah)
Laluan Persekutuan Malaysia 1 (Sabah)
வழித்தடத் தகவல்கள்
AH150 இன் பகுதி
நீளம்:428 km (266 mi)
முக்கிய சந்திப்புகள்
வடகிழக்கு முடிவு:கூடாட்
 சாப்பி-நங்கோ நெடுஞ்சாலை
FT 503 கூட்டரசு சாலை 503
FT 22 கூட்டரசு சாலை 22
FT 500 கூட்டரசு சாலை 500
பாப்பார் சுபுர் சாலை
FT 501 கூட்டரசு சாலை 501
கிமானிஸ்-கெனிங்காவ் நெடுஞ்சாலை
FT 502 கூட்டரசு சாலை 502
SA3 தெனோம்-சிபத்தாங் நெடுஞ்சாலை
தென்மேற்கு முடிவு:சிந்துமின், மலேசிய கூட்டரசு சாலை 1 (சரவாக்))
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கோத்தா பெலுட்; தம்பாருலி; கோத்தா கினபாலு; பாப்பார்; கிமானிஸ்; பியூபோர்ட்; சிபித்தாங்
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசிய கூட்டரசு சாலை 1 (சபா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 1 (Sabah); மலாய்; Laluan Persekutuan Malaysia 1 (Sabah)) என்பது போர்னியோ, மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை ஆகும். 428 கி.மீ நீளமுள்ள இந்தக் கூட்டரசு சாலை, ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் (AH 150) சபா பிரிவில் ஒரு துணைப் பிரிவாகவும்; பான் போர்னியோ நெடுஞ்சாலை வலையமைப்பில் (Pan Borneo Highway) மற்றும் ஒரு துணைப் பிரிவாகவும் உள்ளது.[1][2]

1996-ஆம் ஆண்டில், A1 கோத்தா கினபாலுவில் இருந்து கூடாட் வரையிலான வடக்கு வழித்தடம்); மற்றும் (கோத்தா கினபாலுவில் இருந்து சபா-சரவாக் எல்லைக்கு அருகிலுள்ள சிந்துமின் வரையிலான தெற்கு வழித்தடம்) A2 ஆகிய இரண்டு முன்னாள் வழித்தடங்கள் இணைக்கப்பட்டபோது இந்த மலேசிய கூட்டரசு சாலை 1 (சபா) வழித்தடம் உருவாக்கப்பட்டது. அந்த இரண்டு வழித்தடங்களும் இணைந்ததன் மூலம், கோத்தா கினபாலு நகருக்குள் ஒரு மாற்றுப் பாதையும் உருவானது. இருப்பினும், பெரும்பாலான வரைபடங்கள் வடக்குப் பகுதியை A1 என்றும் தெற்குப் பகுதியை A2 என்றும் குறிப்பிடும் பழைய வழித்தட எண் முறையையே இன்னும் பயன்படுத்துகின்றன.

பொது

[தொகு]

இந்த கூட்டரசு நெடுஞ்சாலையின் ஒரு சிறப்பு என்னவென்றால், அண்டை மாநிலங்களான சபா மற்றும் சரவாக் மலேசியக் கூட்டமைப்பில் மாநிலத் தகுதியைப் பெற்றிருந்த போதிலும், மலேசிய கூட்டரசு FT 1 நெடுஞ்சாலை வழியாக சபா-சரவாக் எல்லையைக் கடக்கும் வாகன ஓட்டிகள் சிந்துமின் நகரில் உள்ள குடிவரவு சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Senarai Jalan Persekutuan Utama Malaysia பரணிடப்பட்டது 2011-07-28 at the வந்தவழி இயந்திரம் Malaysian Public Works Department. Accessed 2011-5-14.
  2. ↑ Mody, Ashoka (August 1997). Infrastructure Strategies in East Asia: The Untold Story. Washington, D.C.: Economic Development Institute of the World Bank. p. 35. ISBN 9780821340271.

வெளி இணைப்புகள்

[தொகு]