உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்
Minister of Housing and Local Government of Malaysia
Menteri Pembangunan dan Kerajaan Tempatan Malaysia
منتري ڤرومهن دان كراجأن تمڤتن
தற்போது
நிகா கோர் மிங் [1]

திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல்
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு
சுருக்கம்KPKT
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர் (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்1955 (1955)
முதலாமவர்சுலைமான் அப்துல் ரகுமான்
(Suleiman Abdul Rahman)
இணையதளம்www.kpkt.gov.my

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Housing and Local Government of Malaysia; மலாய்: Menteri Pembangunan dan Kerajaan Tempatan Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு என்பது மலேசியாவின் உள்ளூராட்சி மேம்பாட்டுத் துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well-being); வீட்டுவசதி (Housing); உள்ளூர் அரசாங்கம் (Local Government); தீயணைப்பு மீட்பு (Fire and Rescue) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது.

அமைப்பு

[தொகு]
  • உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்
    • உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
          • சட்டப் பிரிவு (Legal Advisor Office)
          • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
          • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
          • சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
          • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை மற்றும் மேம்பாடு)
          • திட்ட மேம்பாடு மற்றும் செயல்படுத்தல் பிரிவு (Project Development and Implementation Division)
          • கொள்கை மற்றும் ஆய்வாளர் பிரிவு (Policy and Inspectorate Division)
          • கொள்கை மற்றும் பன்னாட்டு உறவுகள் பிரிவு (Policy and International Relations Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (நகர்ப்புற நல்வாழ்வு) (Urban Wellbeing)
          • நகர்ப்புற நல்வாழ்வு பிரிவு (Urban Wellbeing Division)
          • நகரமயமாக்கல் சேவை பிரிவு (Urbanization Service Division)
          • பணம் கொடுப்பவர்கள் மற்றும் அடகு வைப்பவர்கள் பிரிவு (Moneylenders and Pawnbrokers Division)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) (Management)
          • நிதி மற்றும் கொள்முதல் பிரிவு (Finance and Procurement Division)
          • தகவல் தொழில்நுட்ப பிரிவு (Information Technology Division)
          • மேலாண்மை சேவைகள் பிரிவு (Management Services Division)
          • மனிதவளப் பிரிவு (Human Resources Division)
          • கணக்கு பிரிவு (Account Division)

அமைச்சர்களின் பட்டியல்

[தொகு]

உள்துறை அமைச்சர்கள்

[தொகு]

மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

# பெயர் பதவி காலம்
1 காவ் காய் போ
(Khaw Kai Boh)
2 மே 1964 - 3 ஜூன் 1968
2 ஓங் கீ குய்
(Ong Kee Hui)
9 பிப்ரவரி 1971 - 4 மார்ச் 1976
3 துன் மைக்கல் சென்
(Tun Michael Chen Wing Sum)
9 ஏப்ரல் 1974 - 1 நவம்பர் 1975
4 அசான் அட்ச்லி முகமட் அர்சாட்
(Hassan Adli Mohd Arshad)
5 மார்ச் 1976 - 27 சூலை 1978
5 நியோ இ பான்
(Neo Yee Pan)
15 செப்டம்பர் 1979 - 15 ஆகஸ்டு 1985
6 சான் சியாங் சன்
(Chan Siang Sun)
7 சனவரி 1986 - 10 ஆகஸ்டு 1986
7 டத்தோ ஸ்ரீ நிங் செங் கியாட்
(Dato' Ng Cheng Kiat)
27 அக்டோபர் 1986 - 13 சூன் 1989
8 டான் ஸ்ரீ லீ கிம் சாய்
(Tan Sri Lee Kim Sai)
14 ஆகஸ்டு 1989 - 26 அக்டோபர் 1990
9 டான் ஸ்ரீ திங் சிவு போ
(Tan Sri Dr. Ting Chew Peh)
27 அக்டோபர் 1990 - 14 டிசம்பர் 1999
10 டான் ஸ்ரீ ஓங் கா திங்
(Tan Sri Ong Ka Ting)
15 டிசம்பர் 1999 - 8 மார்ச் 2008
11 டத்தோ ஸ்ரீ ஓங் கா சுவான்
(Dato' Seri Ong Ka Chuan)
9 மார்ச் 2008 - 10 ஏப்ரல் 2009
12 டான் ஸ்ரீ கோங் சோ கா
(Tan Sri Kong Cho Ha)
10 ஏப்ரல் 2009 - சூன் 2009
13 டான் ஸ்ரீ சோர் சி ஹியூங்
(Tan Sri Chor Chee Heung)
சூன் 2010 - மே 2013
14 டத்தோ அப்துல் ரகுமான் டாலான்
(Datuk Abdul Rahman Dahlan)
மே 2013 - 2016
15 டான் ஸ்ரீ நோ ஒமார்
(Tan Sri Noh Omar)
2016 - 10 மே 2018
16 சுரைடா கமாருதீன்
(Zuraida Kamaruddin)
21 மே 2018 - 16 ஆகஸ்டு 2021
17 ரிசால் மெரிக்கான் நைனா முகமது
(Reezal Merican Bin Naina Merican)
30 ஆகஸ்டு 2021 - 19 நவம்பர் 2022
18 நிகா கோர் மிங்
(Nga Kor Ming)
3 திசம்பர் 2022 - தற்போது வரையில்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reporters, F. M. T. (2020-02-24). "All 26 ministerial appointments revoked". Free Malaysia Today (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.

வெளி இணைப்புகள்

[தொகு]