மலேசிய இலக்கவியல் அமைச்சர்
மலேசிய இலக்கவியல் அமைச்சர் Minister of Digital Malaysia Menteri Digital Malaysia | |
---|---|
இலக்கவியல் அமைச்சு | |
சுருக்கம் | KDM |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 |
முதலாமவர் | ஓங் யோக் லின் (தகவல் தொடர்பு, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சர்) |
இணையதளம் | www |
மலேசிய இலக்கவியல் அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Digital of Malaysia; மலாய்: Menteri Digital Malaysia) என்பவர் மலேசிய இலக்கவியல் அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.
முன்பு இந்த அமைச்சு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, அவரின் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையை அமைத்தபோது மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் பெயரில் ஓர் அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
அன்வார் இப்ராகிம் இரண்டாம் அமைச்சரவை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 12 டிசம்பர் 2023-இல், இலக்கவிவல் துறைக்கு மலேசிய இலக்கவியல் அமைச்சு என ஒரு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டது.
அமைப்பு
[தொகு]- தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
- தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர்
- பொது செயலாளர்
- துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
- மூத்த துணைச் செயலாளர் (மேலாண்மை)
- பொது செயலாளர்
- தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர்
இலக்கவியல் அமைச்சர்களின் பட்டியல்
[தொகு]இலக்கவியல் அமைச்சராகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.[1]
அரசியல் கட்சிகள்:
தோற்றம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
கட்சி | பதவி | பதவியேற்பு | பதவி விடுதல் | பிரதமர் (அமைச்சரவை) | |
---|---|---|---|---|---|---|---|
பாமி பட்சில் Fahmi Fadzil (பிறப்பு.1981) |
பாக்காத்தான் (பிகேஆர்) | மலேசிய தகவல் தொடர்புதுறை இலக்கவியல் அமைச்சர் | 3 டிசம்பர் 2022 | 12 டிசம்பர் 2023 | அன்வார் இப்ராகிம் (I) | ||
கோவிந்த் சிங் தியோ Gobind Singh Deo (பிறப்பு. 1973) |
பாக்காத்தான் (ஜசெக) | இலக்கவியல் அமைச்சர் | 12 டிசம்பர் 2023 | பதவியில் உள்ளார் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "[Full list] Anwar's new cabinet line-up". www.nst.com.my. 12 December 2023.