மலேசிய அஞ்சல் நிறுவனம்
| வகை | அரசு சார்ந்த நிறுவனம் |
|---|---|
| முதன்மை நபர்கள் | சார்லஸ் புருவுசர் (தலைமை நிர்வாகி) |
| தொழில்துறை | குழுமம் (நிறுவனம்) |
| உற்பத்திகள் | அஞ்சல்; வசதிக் கடைகள்; வானூர்தி சரக்கு; பெயர்ச்சியியல் |
| வருமானம் | ▼ RM 1.85 பில்லியன் (2024) |
| இயக்க வருமானம் | ▼ RM 386.9 மில்லியன் (2024) |
| நிகர வருமானம் | ▼ RM −201.6 மில்லியன் (2024) |
| மொத்தச் சொத்துகள் | ▼ RM 2.0 பில்லியன் (2024) |
| மொத்த பங்குத்தொகை | ▼ RM −297.6 மில்லியன் (2024) |
| பணியாளர் | 16,307 (2024) |
| தாய் நிறுவனம் | ஐகோம் |
| நிதி விவரங்கள் ஆண்டு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. | |
மலேசிய அஞ்சல் நிறுவனம் அல்லது போஸ் மலேசியா (மலாய்: Pos Malaysia Berhad (Pos Malaysia); ஆங்கிலம்: Malaysian Post) (MYX: 4634) என்பது மலேசியா கோலாலம்பூர், டாயாபூமி வளாகத்தில்[1] தலைமையிடமாகக் கொண்ட ஒரு மலேசிய தேசிய அஞ்சல் மற்றும் தனியார் விரைவு அஞ்சல் நிறுவனம் ஆகும்.[2][3][4]
இந்த நிறுவனம், அஞ்சல் மற்றும் தனியார் விரைவு அஞ்சல் சேவையில் முதன்மையாக ஈடுபட்டிருந்தாலும், வானூர்திப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு பன்முகப்படுத்தப்பட்ட குழுவாகச் செயல்படுகிறது.[5][6][7][8] இந்த நிறுவனம் 1800-களின் முற்பகுதியில் ஓர் அரசு துறையாக நிறுவப்பட்டு, பின்னர் 1992-இல் ஒரு பெருநிறுவனமாக மாற்றப்பட்டது.[9][10][11]
வரலாறு
[தொகு]தொடக்ககால அஞ்சல் சேவைகள்
[தொகு]மலேசிய அஞ்சல் நிறுவனத்தின் வரலாறு, 1800-களின் முற்பகுதியில் நீரிணைக் குடியேற்றப் பகுதிகளான பினாங்கு, மலாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் அஞ்சல் சேவைகள் நிறுவப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. அதன் பிறகு, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அது பிரித்தானிய மலாயா முழுவதும் விரிவடைந்தது.[10][11]
அதன்பிறகு, அஞ்சல் தூதுவர்கள் அல்லது சிறப்புத் தூதர்கள் மூலமாகக் கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டன. அஞ்சல் தலைகளுக்குப் பதிலாக, அஞ்சலகத்தில் கடிதங்களை ஒப்படைக்கும்போது கட்டணம் வசூலிக்கப்பட்டது. அஞ்சலில் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.[12] மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் அஞ்சல் மற்றும் தந்தித் துறை 1905-ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் தேதி முறையாக நிறுவப்பட்டது. இதற்குப் பிறகு பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் ஆகிய பகுதிகளின் அஞ்சல் மற்றும் தந்திச் சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டன.[13]
மலாயா கூட்டமைப்பில் சேரா மலாய் மாநிலங்களான ஜொகூர் (1876), கெடா, கிளாந்தான், பெர்லிஸ் மற்றும் திராங்கானு ஆகிய மாநிலங்களில் அஞ்சல் சேவைகள் 1876 முதல் 1910 வரை தனித்தனியாக நிறுவப்பட்டன.[14] 1935-இல் நிறுவப்பட்ட மலாயா அஞ்சல் ஒன்றியம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் மற்றும் நீரிணைக் குடியேற்றங்கள் பகுதிகளில் ஒரே வகையான அஞ்சல் கட்டண முறைப்பாட்டை அறிமுகப்படுத்தியது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delivering a collaboration at KL post office to foster reading habit". The Star. 2025-07-30. Retrieved 2026-02-16.
- ↑ "Pos Malaysia delivers on brand trust". The Star. 2025-11-24. Retrieved 2026-02-16.
- ↑ "Malaysia's Green Logistics Leader: Pos Malaysia Delivers Triple Sustainability Awards | TRP". The Rakyat Post. 2025-10-15. Retrieved 2026-02-16.
- ↑ "About Us". Pos Malaysia. Retrieved 2026-02-16.
- ↑ "Pos Aviation's expanding role a critical enabler in Malaysia's aviation ecosystem". The Malaysian Reserve. 2026-01-26. Retrieved 2026-02-18.
- ↑ "Discover POS Logistics: Our Journey and Vision | POS Logistics Malaysia". Pos Logistics. Retrieved 2026-02-17.
- ↑ "Pos Digicert Sdn Bhd | Corporate Profile". www.posdigicert.com.my. Retrieved 2026-02-18.
- ↑ "PMB ANNUAL REPORT 2024". Bursa Malaysia. 25 Apr 2025.
- ↑ "Pos Malaysia Annual Report 2015" (PDF). NUS Libraries.
- 1 2 "Industri Pos: Dulu, kini dan selamanya". Berita Harian. 2021-10-09. Retrieved 2026-02-16.
- 1 2 Amirul (2021-03-17). "POS Malaysia: Driving Supply Chain Services Through Technology". MIDA | Malaysian Investment Development Authority (in மலாய்). Retrieved 2026-02-16.
- ↑ "Evolusi 200 tahun industri pos di Malaysia | Awani". www.astroawani.com (in மலாய்). 2015-10-09. Retrieved 2026-02-16.
- ↑ Report on the Post and Telegraphs Department for the Year 1924,Supplement to the FMS Government Gazette, 26 June 1925. http://commonrepo.um.edu.my/432/1/FMS%20GOV%201925_24.pdf
- ↑ "World Bank Document Case Study" (PDF).