மலேசியா–சிங்கப்பூர் எல்லை
| மலேசியா–சிங்கப்பூர் எல்லை Malaysia–Singapore Border | |
|---|---|
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் | |
| சிறப்பியல்புகள் | |
| நிலப்பகுதிகள் | |
| நீளம் | 528.45 கி.மீ. |
| வரலாறு | |
| அமைக்கப்பட்டது | 9 ஆகத்து 1965 |
| சிங்கப்பூர் விடுதலை உடன்படிக்கை 1965 (Proclamation of Singapore) | |
| தற்போதைய வடிவமைப்பு | 23 மே 2008 |
| உடன்பாடுகள் | சிங்கப்பூர் உடன்படிக்கை 1819 ஜொகூர் நீர் உடன்படிக்கை 1995 சிங்கப்பூர்–மலேசியா கடல்சார் உடன்படிக்கை பெட்ரா பிராங்கா தகராறு |
மலேசியா–சிங்கப்பூர் எல்லை (ஆங்கிலம்: Malaysia–Singapore Border; மலாய்: Sempadan Malaysia–Singapore; என்பது தென்கிழக்காசிய நாடுகளான மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான ஒரு பன்னாட்டுக் கடல் எல்லையாகும். இந்த எல்லை ஜொகூர் நீரிணையின் கடல்சார் புவியியல் ஆயத்தொலைவுகளுக்கு இடையிலான நேர் கோடுகளால் உருவாகிறது.[1][2]
1995-ஆம் ஆண்டு உடன்படிக்கையால் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் உள்ள மேற்குப் பகுதி, சிங்கப்பூர் நீரிணையின் மேற்குப் பகுதிக்குள் செல்கிறது; அதே கட்டத்தில் வரையறுக்கப்பட்ட எல்லையின் கிழக்குப் பகுதி சிங்கப்பூர் நீரிணையின் கிழக்குப் பகுதிக்குள் தொடர்கிறது. 1995-ஆம் ஆண்டு உடன்படிக்கையால் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு வெளியே, இரு நாடுகளுக்கும் இடையே அவற்றின் பொதுவான எல்லைகளை வரையறுப்பது குறித்து இன்னும் முறையான தீர்வு காணப்படவில்லை. இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே உரிமைகோரல்கள் தொடர்கின்றன.
வரையறுக்கப்பட்ட எல்லை
[தொகு]மலேசியா-சிங்கப்பூர் எல்லையானது மலேசிய அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான ஓர் உடன்படிக்கையால் வரையறுக்கப்படுகிறது. 1927-ஆம் ஆண்டு நீரிணைக் குடியேற்றங்கள்–ஜொகூர் நீர் உடன்படிக்கை எனும் உடன்படிக்கையின்படி பிராந்திய நீர் எல்லை துல்லியமாக வரையறுக்கப்படுகிறது.
பிராந்திய நீர் எல்லை என்பது 72 புவியியல் ஆயத்தொலைவுகளின் தொடராகும். அவை ஜொகூர் நீரிணையின் மேற்கு மற்றும் கிழக்கு நுழைவாயில்களில் சுமார் 50 கடல் மைல்கள் (93 கிமீ) வரை செல்கின்றன. இந்த எல்லையை இரு அரசாங்கங்களும் கூட்டாக ஒப்புக் கொண்டுள்ளன. இதன் விளைவாக ஆகத்து 7, 1995 அன்று 1927-ஆம் ஆண்டு நீரிணைக் குடியேற்றங்கள்–ஜொகூர் நீர் உடன்படிக்கை எனும் உடன்படிக்கை கையெழுத்தானது.[3]
ஆயத் தொலைவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
| புள்ளி | அட்சரேகை | தீர்க்கரேகை | புள்ளி | அட்சரேகை | தீர்க்கரேகை | புள்ளி | அட்சரேகை | தீர்க்கரேகை | |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஜொகூர்-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் கிழக்குப் பகுதி | |||||||||
| E1 | 01° 27' 10.0" | 103° 46' 16.0" | E17 | 01° 25' 49.5" | 103° 56' 00.3" | E33 | 01° 26' 38.0" | 104° 02' 27.0" | |
| E2 | 01° 27' 54.5" | 103° 47' 25.7" | E18 | 01° 25' 49.7" | 103° 56' 15.7" | E34 | 01° 26' 23.5" | 104° 03' 26.9" | |
| E3 | 01° 28' 35.4" | 103° 48' 13.2" | E19 | 01° 25' 40.2" | 103° 56' 33.1" | E35 | 01° 26' 04.7" | 104° 04' 16.3" | |
| E4 | 01° 28' 42.5" | 103° 48' 45.6" | E20 | 01° 25' 31.3" | 103° 57' 09.1" | E36 | 01° 25' 51.3" | 104° 04' 35.3" | |
| E5 | 01° 28' 36.1" | 103° 49' 19.8" | E21 | 01° 25' 27.9" | 103° 57' 27.2" | E37 | 01° 25' 03.3" | 104° 05' 18.5" | |
| E6 | 01° 28' 22.8" | 103° 50' 03.0" | E22 | 01° 25' 29.1" | 103° 57' 38.4" | E38 | 01° 24' 55.8" | 104° 05' 22.6" | |
| E7 | 01° 27' 58.2" | 103° 51' 07.2" | E23 | 01° 25' 19.8" | 103° 58' 00.5" | E39 | 01° 24' 44.8" | 104° 05' 26.7" | |
| E8 | 01° 27' 46.6" | 103° 51' 31.2" | E24 | 01° 25' 19.0" | 103° 58' 20.7" | E40 | 01° 24' 21.4" | 104° 05' 33.6" | |
| E9 | 01° 27' 31.9" | 103° 51' 53.9" | E25 | 01° 25' 27.9" | 103° 58' 47.7" | E41 | 01° 23' 59.3" | 104° 05' 34.9" | |
| E10 | 01° 27' 23.5" | 103° 52' 05.4" | E26 | 01° 25' 27.4" | 103° 59' 00.9" | E42 | 01° 23' 39.3" | 104° 05' 32.9" | |
| E11 | 01° 26' 56.3" | 103° 52' 30.1" | E27 | 01° 25' 29.7" | 103° 59' 10.2" | E43 | 01° 23' 04.9" | 104° 05' 22.4" | |
| E12 | 01° 26' 06.5" | 103° 53' 10.1" | E28 | 01° 25' 29.2" | 103° 59' 20.5" | E44 | 01° 22' 07.5" | 104° 05' 00.9" | |
| E13 | 01° 25' 40.6" | 103° 53' 52.3" | E29 | 01° 25' 30.0" | 103° 59' 34.5" | E45 | 01° 21' 27.0" | 104° 04' 47.0" | |
| E14 | 01° 25' 39.1" | 103° 54' 45.9" | E30 | 01° 25' 25.3" | 103° 59' 42.9" | E46 | 01° 20' 48.0" | 104° 05' 07.0" | |
| E15 | 01° 25' 36.0" | 103° 55' 00.6" | E31 | 01° 25' 14.2" | 104° 00' 10.3" | E47 | 01° 17' 21.3" | 104° 07' 34.0" | |
| E16 | 01° 25' 41.7" | 103° 55' 24.0" | E32 | 01° 26' 20.9" | 104° 01' 23.9" | ||||
| ஜொகூர்-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் மேற்குப் பகுதி | |||||||||
| W1 | 01° 27' 09.8" | 103° 46' 15.7" | W10 | 01° 26' 14.1" | 103° 41' 00.0" | W19 | 01° 21' 26.6" | 103° 38' 15.5" | |
| W2 | 01° 26' 54.2" | 103° 45' 38.5" | W11 | 01° 25' 41.3" | 103° 40' 26.0" | W20 | 01° 21' 07.3" | 103° 38' 08.0" | |
| W3 | 01° 27' 01.4" | 103° 44' 48.4" | W12 | 01° 24' 56.7" | 103° 40' 10.0" | W21 | 01° 20' 27.8" | 103° 37' 48.2" | |
| W4 | 01° 27' 16.6" | 103° 44' 23.3" | W13 | 01° 24' 37.7" | 103° 39' 50.1" | W22 | 01° 19' 17.8" | 103° 37' 04.2" | |
| W5 | 01° 27' 36.5" | 103° 43' 42.0" | W14 | 01° 24' 01.5" | 103° 39' 25.8" | W23 | 01° 18' 55.5" | 103° 37' 01.5" | |
| W6 | 01° 27' 26.9" | 103° 42' 50.8" | W15 | 01° 23' 28.6" | 103° 39' 12.6" | W24 | 01° 18' 51.5" | 103° 36' 58.2" | |
| W7 | 01° 27' 02.8" | 103° 42' 13.5" | W16 | 01° 23' 13.5" | 103° 39' 10.7" | W25 | 01° 15' 51.0" | 103° 36' 10.3" | |
| W8 | 01° 26' 35.9" | 103° 41' 55.9" | W17 | 01° 22' 47.7" | 103° 38' 57.1" | ||||
| W9 | 01° 26' 23.6" | 103° 41' 38.6" | W18 | 01° 21' 46.7" | 103° 38' 27.2" | ||||
கடல் எல்லை கோரிக்கை
[தொகு]
சிங்கப்பூர் தன்னுடைய தரப்பில், 12 கடல் மைல்கள் வரை நீட்டிக்கப்பட்ட ஒரு கடல் எல்லையையும்; ஒரு பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியையும் (Exclusive Economic Zone) கோருகிறது. அதே வேளையில் மலேசியா அதன் தரப்பில் 12 கடல் மைல்கள் கொண்ட கடல் எல்லையைக் கோருகிறது. இதில் பெத்ரா பிராங்கா தீவு என்பது இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினைக்குரிய இடமாக இருந்தது.
இதற்கிடையில், பெத்ரா பிராங்கா தீவு என்பது சிங்கப்பூரின் இறையாண்மைக்குள் அமைந்த இடம் என்று பன்னாட்டு நீதிமன்றம் (International Court of Justice) தீர்ப்பு அளித்தது. அதைத் தொடர்ந்து, பெத்ரா பிராங்கா தீவைச் சுற்றியுள்ள மலேசியா-சிங்கப்பூர் கடல்சார் கிழக்கு எல்லையின் புதிய பகுதியைத் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டது.[4][5][6]
பெத்ரா பிராங்கா தீவு, சிங்கப்பூரின் 24 கடல் மைல்கள் (44 கிமீ) தொலைவிலும், மலேசியக் கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 7.7 கடல் மைல்கள் (14.3 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள எல்லைப் பகுதியியில் இரண்டு கட்டமைப்பு கடப்பு வழிகள் உள்ளன. அவை மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம்; மற்றும் மலேசியா–சிங்கப்பூர் இரண்டாவது இணைப்புப் பாலம் ஆகும். இந்த இரண்டாவது பாலம் சிங்கப்பூரில் துவாஸ் இரண்டாவது இணைப்பு (Tuas Second Link) என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]
மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எல்லை அமைவு, 1824-ஆம் ஆண்டு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு சிங்கப்பூர் தீவு ஜொகூர் சுல்தானகத்தால் வழங்கப்பட்டபோது நடைமுறைக்கு வந்தது.[7]:65 1914-ஆம் ஆண்டில் ஜொகூர் ஒரு முறையான பிரித்தானிய பாதுகாவல் நிலப்பகுதியாக (British Protectorate) மாறியது. இருப்பினும் சிங்கப்பூர் மட்டும் நீரிணைக் குடியேற்றங்களின் ஒரு பகுதியாக தனியாக இருந்தது.
அக்டோபர் 19, 1927 அன்று நீரிணைக் குடியேற்றங்களின் ஆளுநர் இயூ கிளிபோர்டு (Hugh Clifford); மற்றும் ஜொகூர் சுல்தான் இபுராகிம் அல் மசூர் ஆகிய இருவரும் கடல் எல்லையை வரையறுக்கும் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.[7]:66 இதுவே 1928-ஆம் ஆண்டு நீரிணைக் குடியேற்றங்கள்–ஜொகூர் பிராந்திய நீர் (ஒப்பந்தம்) சட்டத்திற்கு வழிவகுத்தது.[7]:68
எல்லைக் கடப்புகள்
[தொகு]ஜொகூர் நீரிணையின் குறுக்கே உள்ள இரண்டு தரைவழிக் கடவைகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் 450,000-க்கும் மேற்பட்ட மக்கள் மலேசியா-சிங்கப்பூர் எல்லையைக் கடக்கின்றனர்.[8] இதுவே உலகின் மிகவும் பரபரப்பான நில எல்லைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.[9]
| திகதி | பயணிகள் | குறிப்பு | #@ |
|---|---|---|---|
| 20 சூன் 2025 | 578,000 | சூன் பள்ளி விடுமுறைகள் (சி) | [10] |
| 20 திசம்பர் 2024 | 562,000 | திசம்பர் பள்ளி விடுமுறைகள் (சி) | [11] |
| 13 திசம்பர் 2024 | 553,000 | திசம்பர் பள்ளி விடுமுறைகள் (சி) | [12] |
| 6 செப்டம்பர் 2024 | 543,000 | செப்டம்பர் பள்ளி விடுமுறைகள் (சி) | [13] |
| 8 ஆகத்து 2024 | 540,000 | தேசிய நாள் விடுமுறை (சி) | [14] |
| 14 சூன் 2024 | 530,000 | செப்டம்பர் பள்ளி விடுமுறைகள் (சி) - அஜி விடுமுறை (சி)(ம) | [15] |
| 13 சூன் 2024 | 510,000 | சூன் பள்ளி விடுமுறைகள் (சி)(ம) | [16] |
| 28 மார்ச் 2024 | 510,000 | பெரிய வெள்ளி விடுமுறை (சி) | [17] |
| 15 மார்ச் 2024 | 500,000 | மார்ச் பள்ளி விடுமுறைகள் (சி) | [18] |
| 8 மார்ச் 2024 | 495,000 | மார்ச் பள்ளி விடுமுறைகள் (சி) | [19] |
| 8 ஆகத்து 2019 | 485,000 | தேசிய நாள் விடுமுறை (சி) | [19] |
- (சி) - சிங்கப்பூர்
- (ம) - மலேசியா
மேலும் காண்க
[தொகு]- பெத்ரா பிராங்கா
- சிங்கப்பூரின் வரலாறு
- மலேசியாவின் வரலாறு
- நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர்கள் பட்டியல்
- மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Agreement between the Government of Malaysia and the Government of the Republic of Singapore to delimit precisely the territorial waters boundary in accordance with the Straits Settlement and Johor Territorial Waters Agreement 1927, signed on 7 August 1995.
- ↑ Charney, Jonathan I (2005). International Maritime Boundaries. Martinus Nijhoff Publishers. pp. 2345–56. ISBN 90-411-0345-7.
- ↑ Charney, Jonathan I (2005). International Maritime Boundaries. Martinus Nijhoff Publishers. pp. 2345–56. ISBN 90-411-0345-7.
- ↑ Case Concerning Sovereignty over Pedra Branca/Pulau Batu Puteh, Middle Rocks and South Ledge (Malaysia/Singapore) (PDF), International Court of Justice, 23 மே 2008, archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2016, retrieved 26 மே 2008, para. 16.
- ↑ May Wong (6 November 2007), Background on Pedra Branca, Channel NewsAsia, archived from the original on 7 November 2007, retrieved 8 November 2007.
- ↑ By the Protected Places (No. 4) Order 2002 (S 305/2002), which came into effect on 27 June 2002, Pedra Branca was declared a "protected area" within the meaning of the Protected Areas and Protected Places Act (Cap. 256, 1985 Rev. Ed.). In the Schedule to the Order, it was described as "[t]he island occupied by 'PORT OF SINGAPORE (HORSBURGH LIGHTHOUSE)' containing an area of approximately 8,650 square metres. The easternmost point is approximately along the bearing 73° 51′ for 97 metres from the centre of the lighthouse, Latitude 1° 19′ 48.8″ N and Longitude 104° 21′ 20.6″ E (WGS 84 datum) approximately".
- ↑ 7.0 7.1 7.2 Kevin Y. L. Tan (2019). International Law, History & Policy: Singapore in the Early Years (PDF). NUS Centre for International Law. ISBN 9789811416163.
- ↑ "Amid cross border tensions, Malaysians working in Singapore hope rice bowls unaffected". Today Online. December 17, 2018. Archived from the original on 23 March 2020.
- ↑ Seow, Bei Yi (11 July 2017). "New tech to keep Singapore-Malaysia border - the world's busiest - safe". The Straits Times இம் மூலத்தில் இருந்து 19 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181019001632/https://www.straitstimes.com/singapore/tech-boost-for-singapores-border-security.
- ↑ "Continuous Heavy Traffic Expected at Land Checkpoints for Upcoming Lunar New Year". ICA Singapore. 5 August 2025.
- ↑ "Continuous Heavy Traffic Expected at Land Checkpoints for Upcoming Lunar New Year". ICA Singapore. 20 January 2025.
- ↑ "Continuous Heavy Traffic Expected at Land Checkpoints for Upcoming Festive Holidays – Record Numbers Travelled on 13 December". ICA Singapore. 19 December 2024.
- ↑ "Continuous Heavy Traffic Expected at Land Checkpoints for Upcoming Year End School Holidays". ICA Singapore. 11 November 2024.
- ↑ "Continuous Heavy Traffic Expected at Land Checkpoints for Upcoming September School Holiday". ICA Singapore. 26 August 2024.
- ↑ "More Than 2.4 Million Travellers Cleared via the Land Checkpoints during Hari Raya Haji Long Weekend". ICA Singapore. 18 June 2024.
- ↑ "Number of Travellers Cleared at the Land Checkpoints on 13 June 2024". ICA Singapore. 14 June 2024.
- ↑ "More Than Half a Million Travellers Cleared Via The Land Checkpoints Ahead of The Good Friday Long Weekend". ICA Singapore. 29 March 2024.
- ↑ "Continuous Heavy Traffic Expected at Land Checkpoints with the Upcoming Public Holidays and Festivals". ICA Singapore. 25 March 2024.
- ↑ 19.0 19.1 "Update of Traffic Situation at Land Checkpoints". ICA Singapore. 12 March 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]- Horsburgh light, Lighthouse Depot, retrieved 31 August 2008.