மலேசியாவில் 200 ஆண்டுத் தமிழ்க்கல்வி வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவின் முதல் தமிழ்க்கல்வி 1816-ஆம் ஆண்டு தொடங்கியது. 2016-ஆம் ஆண்டுடன் 200 ஆண்டுகள் வரலாற்றைப் பதிவு செய்கிறது.[1] அன்று தொடங்கி இன்று வரையிலும் மலேசியத் தமிழ்க்கல்வி பற்பல மாறுதல்களையும் பற்பல மேம்பாடுகளையும் கண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து 1800-களில் மலாயாவுக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இந்தப் புலம் பெயர்வு மூன்றாம் கட்டப் புலம்பெயர்வாகும். 1870-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியர்கள் பணியாற்றிய பல இடங்களில் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள் தோன்றின. குறிப்பாக புரோவின்ஸ் வெல்லஸ்லி, ஜொகூர், மலாக்கா போன்ற இடங்களில் ஒவ்வொரு ரப்பர் தோட்டத்திலும் ஒரு தமிழ்ப்பள்ளி உருவாக்கப் பட்டது.

1800 - 1900 காலகட்டத்தில் கிறிஸ்துவச் சமய அமைப்புகள் தோற்றுவித்த ஆங்கில-தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்துத் தனிப்பட்டவர்களும் தமிழ்ப்பள்ளிகளை அமைத்தனர். பொதுவாக இந்தப் பள்ளிகள் யாவும் சிறியவை. ஓர் அறை, ஓராசிரியர் வகுப்பு என்ற நிலையிலேயே அவை இயங்கின.

தவிர நிதி வளம் இல்லாமலும் முறையான பராமரிப்புகள் இல்லாமலும் இந்தப் பள்ளிகள் செயல் பட்டன.

  1. மலேசியத் திருமண்ணில் தமிழ்க்கல்வி தோன்றி 200 ஆண்டுகள் ஆகின்றன. பிரித்தானிய ஆட்சியில் முதன் முதலாக பினாங்கு ஃபிரீ பள்ளியில் தமிழ்க்கல்வி தோற்றுவிக்கப்பட்டதாக வரலாற்றுச் சுவடுகள் கூறுகின்றன.[தொடர்பிழந்த இணைப்பு]