மலேசியர் ஐக்கிய உரிமை கட்சி
| மலேசியர் ஐக்கிய உரிமை கட்சி United for the Rights of Malaysians Party | |
|---|---|
| சுருக்கக்குறி | உரிமை - URIMAI |
| தலைவர் | இராமசாமி பழனிச்சாமி (இடைக்காலம்) |
| செயலாளர் நாயகம் | சத்தீஸ் முனியாண்டி |
| குறிக்கோளுரை | குரலற்றவர்களின் குரல் Political Force Of The Voiceless |
| தொடக்கம் | 26 நவம்பர் 2023 |
| பிரிவு | ஜனநாயக செயல் கட்சி |
| கொள்கை | மலேசிய இந்தியர்களின் நலன்கள் சிறுபான்மை உரிமைகள் பல்லினப்பண்பாடு |
| தேசியக் கூட்டணி | மக்கள் நல கூட்டணி (2025 தொடக்கம்) |
| நிறங்கள் | சிவப்பு வெள்ளை |
| மலேசிய மேலவை: | 0 / 70 |
| மலேசிய மக்களவை: | 0 / 222 |
| இணையதளம் | |
| www | |
மலேசியர் ஐக்கிய உரிமை கட்சி அல்லது உரிமை (ஆங்கிலம்: United for the Rights of Malaysians Party (URIMAI); மலாய்: Parti Bersepakat Untuk Hak Rakyat Malaysia; சீனம்: 马来西亚民权共识党) என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி, முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி பழனிச்சாமி அவர்கள்; ஜனநாயக செயல் கட்சியில் (DAP) இருந்து விலகிய பிறகு நிறுவப்பட்டது. இந்தக் கட்சி மலேசிய சங்கப் பதிவாளரால் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.[1]
இந்தக் கட்சி சட்டப்பூர்வமாக்கப் படுவது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவர் இராமசாமி பழனிச்சாமி, இந்தக் கட்சியை "மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் என்றும்; குறிப்பாக மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.[2] மலேசிய இந்தியர்களை மையமாகக் கொண்டிருந்தாலும், இந்தக்கட்சி அனைத்து இனக் குழுக்களுக்கும் திறந்திருக்கும் என்று இராமசாமி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.[2] ஆனாலும் இந்தக் கட்சியை "மற்ற அரசியல் கட்சிகளைப் போல பல இனத்துக் கட்சி" என்று குறிப்பிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.[1]
இராமசாமி பழனிச்சாமியின் கூற்றுப்படி, இந்தக் கட்சி நிறுவப்பட்டதற்குக் காரணம், நாடு அதன் இந்திய மக்களைப் புறக்கணித்ததே ஆகும்.[3] ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜனநாயக செயல் கட்சி மற்றும் அதன் நட்புக் கட்சியான மக்கள் நீதிக் கட்சி (PKR) இரண்டும், பல இனத்தவர் கட்சிகள் என்று கூறிக்கொண்டாலும், அதிகாரத்தில் இருந்தபோது இந்திய மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறிவிட்டன என்றும் அவர் வலியுறுத்தினார்.[3]
வரலாறு
[தொகு]2025-ஆம் ஆண்டு நடைபெற்ற பேராக், ஆயர் கூனிங் இடைத்தேர்தலின் போது மலேசிய சமூகக் கட்சிக்கு (Socialist Party of Malaysia) (PSM) பரப்புரை செய்ய இந்தக் கட்சி உதவியது.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "After DAP, "Urimai" (rights) is Ramasamy's new political party to uphold non-Malay interests". focusmalaysia.my (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-11-20. Retrieved 2023-12-06.
- ↑ 2.0 2.1 Mok, Opalyn (2023-11-27). "Former Penang deputy chief minister P. Ramasamy forms Indian-based party Urimai". Malay Mail (in ஆங்கிலம்). Retrieved 2023-12-06.
- ↑ 3.0 3.1 ROSLI, SYAJARATULHUDA MOHD (2023-11-27). "Ramasamy tubuh parti Urimai". Sinar Harian (in மலாய்). Retrieved 2023-12-06.
- ↑ Dineskumar, R. (2025-04-24). "Time for third force: PSM enters Ayer Kuning to disrupt BN grip, PN rhetoric". Scoop (in ஆங்கிலம்). Retrieved 2025-04-24.