மலிகா அமர் ஷேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலிகா அமர் ஷேக் அல்லது மலிகா நம்தியோ தேசாய் (பிறப்பு 16 பிப்ரவரி 1957) இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மராத்தி மொழி எழுத்தாளரும், அரசியல் தலைவருமாவார். [1] இவர் மஹாராஷ்டிராவில் இயங்கி வரும் தலித் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமாவார்.

வரலாறு[தொகு]

மலிகா அமர் ஷேக், 1957 ம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று ஷாஹிர் அமர் ஷேக்கிற்கு பிறந்தார். [2] இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலித் கவிஞரும், தலித் சிறுத்தைகள் கட்சியின் இணை நிறுவனருமான நாம்தேவ் தேசாயை இவர் மணந்துள்ளார். [3] [4] அவரது கணவரின் இறப்பிற்கு பின்பாக, அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5] மேலும் 2017 ம் ஆண்டில் நடைபெற்றமகாராஷ்டிரா உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களின் போது அக்கட்சியை வழிநடத்தியுள்ளார். [6]

புத்தகங்கள்[தொகு]

  • வலுசா பிரியகர் (மணலால் செய்யப்பட்ட காதலன்)
  • மகாநகர் (பெருநகரம்)
  • டெஹாருது (உடலின் பருவம்)
  • மாலா உத்வஸ்தா வைச்சே (நான் அழிக்கப்பட விரும்புகிறேன்) (சுயசரிதை) [7]
  • கவனத்துடன் கையாளவும்
  • ஏக் ஹோதா உந்திர் (ஒரு எலியின் கதை)
  • கோஹாம் கோஹாம் (நான் யார்? )

தொகுப்புகள்[தொகு]

  • நேரடி புதுப்பிப்பு: சமீபத்திய மராத்தி கவிதைகளின் தொகுப்பு, சச்சின் கேட்கர், மும்பை: பொயட்ரிவாலா, 2005, திருத்தி மொழிபெயர்த்தார்.ISBN 81-89621-00-9
  • தி ட்ரீ ஆஃப் டங்குஸ் — நவீன இந்தியக் கவிதைகளின் தொகுப்பு, ஈ.வி.ராமகிருஷ்ணன் அவர்களால் திருத்தப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், சிம்லா. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poetry International Web - Malika Amar Sheikh". India.poetryinternationalweb.org. Archived from the original on 2014-05-08. பார்க்கப்பட்ட நாள் 2012-04-24.
  2. "परखड आणि स्पष्टवक्ती मल्लिका". 2013-05-24. http://divyamarathi.bhaskar.com/news/MAG-article-on-mallika-amar-shaikh-marathi-poet-4272280-NOR.html. பார்த்த நாள்: 2016-10-18. 
  3. "The Norman Cutler Conference on South Asian Literature". cosal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  4. "Dhasal's times of irony and anger". 11 September 2007. http://www.indianexpress.com/news/dhasals-times-of-irony-and-anger/215603/. 
  5. "Interview: Malika Amar Shaikh". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-07-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
  6. "The Heart is a Lonely Woman - Life of Malika Amar Sheikh". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  7. "I Want to Destroy Myself: Review". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
  8. "tribuneindia...Book Reviews". Tribuneindia.com. 1999-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-04-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலிகா_அமர்_ஷேக்&oldid=3673412" இலிருந்து மீள்விக்கப்பட்டது