உள்ளடக்கத்துக்குச் செல்

மலாலை ஜோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாலை ஜோயா
மார்ச் 2007-ல் ஆஸ்திரேலியாவில் ஜோயா பேசுகிறார்
பிறப்பு25 ஏப்ரல் 1978 (1978-04-25) (அகவை 46)
ஃபாரா மாகாணம், ஆப்கானித்தான்
இருப்பிடம்காபுல் [1]
பணிஅரசியல் விழிப்புணர்வாளர்
அறியப்படுவதுஆப்கானித்தான் அரசாங்கம் , மற்றும் ஆப்கானிதானில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்-வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ராணுவத்தின் முகாம் குறித்த விமர்சனம்.[2]

மலாலை ஜோயா (Malalai Joya, பஷ்தூ மொழி: ملالۍ جویا, பிறப்பு: ஏப்ரல் 25, 1978) என்பவர் ஆப்கானித்தானைச் சேர்ந்த ஒரு விழிப்புணர்வாளர், எழுத்தாளர், மற்றும் பெண் அரசியல்வாதி.[3] இவர் ஆப்கானித்தானின் தேசிய பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினராக 2005 முதல் 2007ன் ஆரம்பகாலம்வரை சேவையாற்றினார். ஆப்கான் நாடாளுமன்றத்தில் போர்த் தலைவர்களும், போர்க் குற்றவாளிகளும் இருப்பதாகப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்த காரணத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஹமித் கர்சாய் நிர்வாகம் மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்கள், குறிப்பாக அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்.[4][5]

மே 2007-ல், அவரது பதவி நீக்கம் உலகளாவிய எதிர்ப்பைக் கிளப்பியது. ஜோயாவிற்கு ஆதரவாக அவரது மறுநியமனத்தைக்கோரி நோவாம் சோம்ஸ்கி போன்ற அறிஞர்களும் மிகப்பிரபலமான எழுத்தாளர்களும் கையெழுத்திட்டனர். மற்றும் கனடா, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், இத்தாலி, மற்றும்வ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை மலாலை ஜோயாவிற்குத் தெரிவித்தனர்.[6] பிபிசி அவரை "ஆஃப்கானிஸ்தானின் வீரமிக்க பெண்மணி" என்று அழைத்தது.[7]

2010-ல், டைம் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் மிகுந்த செல்வாக்குள்ள 100 பிரபலங்களின் பட்டியலில் மலாலை ஜோயாவையும் இணைத்திருந்தது.[2] ஃபாரின் பாலிசி பத்திரிக்கை முதல் 100 உலகளாவிய சிந்தனையாளர்களுள் ஒருவராக மலாலை ஜோயாவைத் தங்களது ஆண்டுப் பட்டியலில் சேர்த்திருந்தது.[8] மார்ச் 8, 2011-ல், தி கார்டியன் வெளியிட்ட உலகின் "முதல் 100 பெண்மணிகள்: விழிப்புணர்வாளர்கள் மற்றும் பிரசாரம் செய்பவர்கள்" பட்டியலில் மலாலையின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.[9]

ஆரம்பகால மற்றும் சொந்த வாழ்க்கை

[தொகு]

ஏப்ரல் 25, 1978-ல், மேற்கு ஆஃப்கானிஸ்தானிலுள்ள ஃபாரா மாகானத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவ மாணவர். ஆஃப்கானிஸ்தானில் நடந்த சோவியத் போரில் கலந்துகொண்டபோது சண்டையில் தன் ஒரு காலை இழந்தவர். 1982-ல், மலாலைக்கு 4 வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் ஆஃப்கானிஸ்தானை விட்டு அருகிலிருந்த ஈரானில் அகதிகளாக வாழத் தஞ்சம் புகுந்தனர். தனது எட்டாம் வகுப்பிலிருந்து அவர் மனிதநேய வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.

"நான் எனது மிக இளம் பிராயத்திலிருந்தே அதாவது எட்டாவது நிலையில் இருந்தபோதே விழிப்புணர்வாளராக பணி செய்ய ஆரம்பித்து விட்டேன். எங்கள் மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பணியாற்றியபோது நான் மகிழ்ச்சிகரமாக உணர்ந்தேன். அவர்கள் படிக்காத பாமரர்களாக இருந்தபோதும் நான் அவர்களிடமிருந்து நிறைய கற்றேன். தொடங்குவதற்கு முன், எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்பதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். படிக்காத மக்களிடமிருந்தும், அரசியல் சூழ்நிலையைச் சார்ந்த ஆனால், அரசியல் கலப்பில்லாத மக்களிடமிருந்துமே நான் கற்றுக்கொண்டேன். அகதிகள் முகாம்களிலிருந்த பல்வேறு செயற்குழுக்களுடன் நான் பணியாற்றினேன். நான் சென்ற ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவரிடமிருந்தும் வெவ்வேறான துன்பக் கதைகளைக் கேட்டதை நினைவு கூர்கிறேன். நாங்கள் சந்தித்த ஒரு குடும்பத்தை நினைக்கிறேன். அவர்கள் குழந்தை வெறும் எலும்பும் தோலுமாக இருந்தது. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவர்களுக்கு வசதியில்லாத காரணத்தால், தங்கள் குழந்தையின் இறப்பிற்காகக் காத்திருந்தார்கள். நாங்கள் அனுபவித்த துயரங்களை எழுத எழுத்தாளர்களாலோ, திரைப்படம் தயாரிப்பவர்களாலோ முடியாது என்று நம்புகிறேன். ஆஃப்கானிஸ்தானில் மட்டுமல்ல, பாலஸ்தீனம், ஈராக்கிலும்கூட…ஆஃப்கானிஸ்தானின் குழந்தைகள் பாலஸ்தீனத்தின் குழந்தைகளைப்போல. அவர்கள் தங்கள் எதிரிகளை வெறும் கற்களைக் கொண்டு தாக்கி சண்டையிடுகிறார்கள். இத்தகைய குழந்தைகளே எனது கதாநாயகர்களும் நாயகிகளுமாவர்."[10]

— மலாலை ஜோயா, நவம்பர் 5, 2007

சோவியத் தன் படைகளை விலக்கிக்கொண்டபிறகு, 1998-ல் தாலிபான்களின் ஆட்சியின்போது, ஜோயா ஆஃப்கானிஸ்தான் திரும்பினார். ஒரு இளம்பெண்ணாக, சமூக விழிப்புணர்வாளராக பணியாற்றினார். ஹீராட் மற்றும் ஃபாராவின் மேற்கு மாகாணங்களில் செயல்பட்ட ஆஃப்கான் பெண்களின் திறமைகளை மேம்படுத்தும் அமைப்பு -(OPAWC) என்ற அரசாங்கம் அல்லாத அமைப்பின் இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.[11] அவருக்குத் திருமணமாகிவிட்டது. ஆனால் தன் கணவரின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலுக்கு பயந்து அவர் தன் கணவரின் பெயரை வெளியிடாமல் உள்ளார்.[12]

2003 லோயா ஜிர்காவில் மலாலையின் பேச்சு

[தொகு]

டிசம்பர் 17, 2003 அன்று ஆஃப்கானிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியளிப்பதற்காகக் கூட்டப்பட்ட லோயா ஜிர்கா-வில் (லோயா ஜிர்கா என்பது ஆஃப்கானின் மிகப்பெரிய பேரவை) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான மலாலை ஜோயா பேசியபோது அகில உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது. அவர் மிக வெளிப்படையாக போர்த்தலைவர்களுக்கு எதிராகவும், போர்க் குற்றவாளிகளுக்கு எதிராகவும் குரலெழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.[13][14]

இதற்கு மறுமொழி தந்த லோயா ஜிர்காவின் அவைத்தலைவர் சிப்கத்துல்லா மொஜாதேதி, மலாலை ஜோயாவை "மதநம்பிக்கையற்ற ஒழுக்கமில்லாதவர்" மற்றும் "கம்யூனிஸ்ட்" என்றும் சாடினார். அன்று முதல் ஜோயா மீது நான்கு காெலை முயற்சிகள் தொடுக்கப்பட்டு நான்கு முறையும் அவர் உயிர் தப்பினார். பர்கா அணிந்து கொண்டு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களின் துணையுடன் ஜோயா ஆஃப்கானிஸ்தானில் பயணித்து வருகிறார்.[16]

வோர்ல்டு பல்ஸ் பத்திரிக்கை (இதழ் 1, 2005) எழுதியது:

தனது வார்த்தைகளால், லோயா ஜிர்காவைப் பொறிகலங்க வைத்தார். போர்த்தலைவர்கள் லோயா ஜிர்காவை கட்டுப்படுத்துவதாக மிகக்கடுமையாக தனது 3-நிமிட பேச்சில் தன் கருத்தைக் கூறியபோது பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்தனர். லோயா ஜிர்காவின் பிற உறுப்பினர்களுக்கெதிரான அவருடைய சர்ச்சைக்குரிய நிலைப்பாடு அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்ததோடல்லாமல், அவருடைய அரசியல் எதிரிகளின் கடும் விமர்சனத்தையும் சம்பாதித்துத் தந்தது.

அரசியல் நியமனங்கள் மற்றும் பிரசாரங்கள்

[தொகு]

நாடாளுமன்ற அறிக்கைகள், தாக்குதல் மற்றும் இடைநீக்கம்

[தொகு]

அரசியல் மறுபிரவேசத்தின் அறிவிப்பு

[தொகு]

சர்ச்சையும் விமர்சனமும்

[தொகு]
  • மிகச்சமீப காலமாக ஜோயா, ஆஃப்கானிஸ்தான் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். சோவியத்தை எதிர்த்துப் போரிட்ட ஆஃப்கானிஸ்தானின் அரசியல்வாதிகளைக் குறித்து ஜோயா பேசியது ஆதரமில்லாத குற்றத்திற்குட்பட்டதாகும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.[18] எப்படியிருந்தாலும், ஜோயாவின் ஆதரவாளர்கள், ஜோயா ஆஃப்கானிஸ்தானின் சுதந்திரத்திற்காகப் போராடிய "உண்மையான முஜாஹீதீன்களை" போர் குற்றம் புரிந்த போர்த்தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பேசியதாக ஜோயாவிற்கு ஆதரவாக வாதிடுகின்றனர்.

சுயசரிதை

[தொகு]

விருதுகளும் கெளரவங்களும்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Militarism, Mutilation, and Minerals: Understanding the Occupation of Afghanistan". culturesofresistance.org. January 29, 2011. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-04-04.
  2. 2.0 2.1 Hirsi Ali, Ayaan (2010-04-29). "The 2010 TIME 100: Heroes: Malalai Joya". Time இம் மூலத்தில் இருந்து 2013-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817115005/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1984685_1984949_1985238,00.html. பார்த்த நாள்: 2010-04-29. 
  3. "Profile: Malalai Joya". BBC News. November 12, 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4420832.stm. பார்த்த நாள்: 2011-03-26. 
  4. "The NS Interview: Malalai Joya". Newstatesman.com. January 25, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02. "Obama is a warmonger, no different from Bush"
  5. "Malalai Joya - extended interview". Newstatesman.com. January 29, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
  6. "International appeal at Znet". Zmag.org. 2008-04-24. Archived from the original on 2009-08-03. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
  7. "'The Bravest Woman in Afghanistan': Malalai Joya Speaks Out Against the Warlord-Controlled Afghan Government & U.S. Military Presence". Democracy Now!. 2007-06-19. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.
  8. "The FP Top 100 Global Thinkers". Foreign Policy. 2010-12-01. http://www.foreignpolicy.com/articles/2010/11/29/the_fp_top_100_global_thinkers?page=0,47. பார்த்த நாள்: 2010-11-28. 
  9. Saner, Emine (2011-03-08). "Malalai Joya: Afghan politician and human rights campaigner who has shown phenomenal courage". தி கார்டியன். http://www.guardian.co.uk/world/2011/mar/08/malalai-joya-100-women. பார்த்த நாள்: 2011-03-08. 
  10. Whitfield, Gina (2007-11-05). "Malalai Joya: "truth has a very strong voice"". Rabble News. http://www.malalaijoya.com/rabble2.htm. பார்த்த நாள்: 2008-12-08. 
  11. Satterlee, Saundra (2008-12-01). "A brave woman in Afghanistan". The Guardian Weekly. http://www.guardianweekly.co.uk/?page=editorial&id=836&catID=1. பார்த்த நாள்: 2008-08-21. 
  12. "Malalai Joya: Afghan politician and human rights campaigner who has shown phenomenal courage", Emine Saner, தி கார்டியன், 7 March 2011
  13. Waldman, Amy (2003-12-18). "A Young Afghan Dares to Mention the Unmentionable". Nytimes.com இம் மூலத்தில் இருந்து 2012-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110020623/http://www.nytimes.com/2003/12/18/international/asia/18AFGH.html. பார்த்த நாள்: 2010-05-23. 
  14. "Toward a New Afghanistan". Nytimes.com. 2003-12-29. http://www.nytimes.com/2003/12/29/opinion/toward-a-new-afghanistan.html. பார்த்த நாள்: 2010-05-23. 
  15. "The brave and historical speech of Malalai Joya in the LJ". YouTube. 2003-12-17. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
  16. "UN guarding loya jirga delegate". BBC News. 2003-12-18. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3331751.stm. பார்த்த நாள்: 2008-12-08. 
  17. Pulse, World (2007-11-05). "Leader of Our Time: The woman who defies warlords". World Pulse Magazine. http://www.malalaijoya.com/wpulse.htm. பார்த்த நாள்: 2008-12-08. 
  18. "Jehaddi Shakila Hashemi slogans against Malalai Joya". YouTube. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மலாலை ஜோயா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாலை_ஜோயா&oldid=3781058" இலிருந்து மீள்விக்கப்பட்டது