மலாலாய் மைவந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலாலாய் மைவாந்த் இவர் ஓர் ஆப்கானிஸ்தானின் தேசிய நாட்டுப்புற வீராங்கனையாவார். இவர் 1880இல் நடந்த மைவாந்த் போரில் பிரித்தன் துருப்புக்களுக்கு எதிராக உள்ளூர் போராளிகளை அணிதிரட்டினார். இவர் அயூப்கான் என்பவருடன் இணைந்து போராடினார். [1] 1880 சூலை 27 அன்று நடந்த இரண்டாவது ஆங்கிலோ-ஆப்கானியப் போரின்போது மைவாந்த் போரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு பொறுப்பானவராக இருந்தார். இவர் ஆப்கானிஸ்தானின் "ஜோன் ஆப் ஆர்க்" [2] என்றும் ஆப்கானிஸ்தான் "மோலி பிட்சர்" [3] என்றும் அழைக்கப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் இவரது பெயரில் பல பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவரது கதை ஆப்கான் பள்ளிகளின் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. பாக்கித்தான் பெண்கள் உரிமை ஆர்வலர் மலாலா யூசப்சையி மற்றும் ஆப்கானிஸ்தான் ஆர்வலரும் அரசியல்வாதியுமான மலாலை ஜோயா ஆகியோருக்கு மைவாந்தின் மலாலை என்ற பெயரிடப்பட்டது.

சுயசரிதை[தொகு]

மலாலாய் 1861 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் தெற்கு காந்தகார் மாகாணத்தில் மைவாந்திற்கு தென்மேற்கே 3 மைல் தொலைவில் உள்ள கிக் என்ற கிராமத்தில் பிறந்தார். [4]

மைவாந்த் போர்க்களத்தின் விளிம்பில் உள்ள ஒரு சிறிய கிராமமான கிக் நகரைச் சேர்ந்த மலாலாய், ஒரு மேய்ப்பனின் மகளாவார். இதைப் பார்த்த மலாலாய் தன் முகத்திரையை கழற்றி கூச்சலிட்டார்:

1880 களின் பிற்பகுதியில், இரண்டாவது முறையாக, பிரித்தானிய-இந்தியப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, இப்பகுதியில் குடியேற முயற்சித்தன. பின்னர் பிரித்தானிய இந்தியாவுடன் (இப்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியா) இணைந்தன. ஆங்கிலேயர்களின் பிரதான பாதுகாப்பு அரண் மைவாந்த் நகருக்கு மிக அருகில் உள்ள காந்தகாரில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இராணுவத்தை ஆப்கானிஸ்தான் அமிர் ஷெர் அலிகானின் மகன் தளபதி அயூப் கான் பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். 1880 சூலையில் பிரித்தானிய-இந்தியப் படைகள் மீதான பெரிய தாக்குதலில் ஒரு மேய்ப்பராக இருந்த மலாலாயின் தந்தையும் அவரது வருங்கால மனைவியும் அயூப் கானின் இராணுவத்துடன் இணைந்தனர். பல ஆப்கானிய பெண்களைப் போலவே, காயமடைந்தவர்களுக்கும், தண்ணீர் மற்றும் உதிரி ஆயுதங்களையும் வழங்க மலாலாய் இருந்தார். 1880 சூலை 27, அன்று ஆங்கிலேயர்கள் மீதான தாக்குதலில் பல பெண்களைப் போலவே, காயமடைந்தவர்களுக்கும், தண்ணீர் மற்றும் உதிரி ஆயுதங்களையும் வழங்க மலாலாய் போர்க்களத்தில் இருந்தார். ஆப்கானிய இராணுவம், அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், மன உறுதியை இழக்கத் தொடங்கியது. போர்ச்சூழல் பிரித்தானியர்களுக்கு ஆதரவாக மாறுவதாகத் தோன்றியது.

ஒரு முன்னணி கொடி ஏந்தியவர் கொல்லப்பட்டபோது, இது பல ஆப்கானிய போராளிகள் மற்றும் காஜிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. மேலும் அவர்கள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கினர். அந்த நேரத்தில் ஒரு முன்னணி கொடி ஏந்தியவர் பிரிட்டிஷ் தோட்டாவிலிருந்து விழுந்தார், மலாலாய் முன்னோக்கி சென்று கொடியை உயர்த்திப் பிடித்தார். மலாலாய் ஆப்கான் கொடியை எடுத்து கூச்சலிட்டார். [5] (சில பதிப்புகள் இவர் தனது முக்காட்டை ஒரு கொடியாகப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றன [6] இரண்டாம் ஆப்கானிய போரில் ஆங்கிலோ-இந்திய இராணுவத்திற்கு மிகப்பெரிய தோல்விக்கு வழிவகுத்தது.).

மலாலாய் பிரித்தன் துருப்புக்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். [7] இருப்பினும், இவருடைய வார்த்தைகள் நாட்டு மக்களின் வெற்றியைத் தூண்டின. போருக்குப் பிறகு, மலாலாய் தனது முயற்சிகளுக்காக கௌரவிக்கப்பட்டு, இவரது சொந்த கிராமமான கிக் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். அயூப் கான் மலாலாய்க்கு ஒரு சிறப்பு மரியாதை அளித்தார். மேலும் அவர் தனது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டார், அங்கு அவரது கல்லறை இன்னும் காணப்படுகிறது.அங்கு இவரது கல்லறை இன்றும் உள்ளது. இவர் இறக்கும் போது வயது 18-19 க்கு இடையில் இருந்தார். [6] உள்ளூர்வாசிகள் இவரது கல்லறையை ஒரு சன்னதியாக கருதுகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Abdullah Qazi. "Afghan Women's History". Afghanistan Online.
  2. "Ehrungen". Katachel.de. மூல முகவரியிலிருந்து 2011-09-12 அன்று பரணிடப்பட்டது.
  3. Garen Ewing. "Maiwand Day: Wargaming the Afghan War". garenewing.co.uk.
  4. Wahid Momand. "Malalai of Maiwand". Afghanland.com.
  5. Siba Shakib. "Battle of Maiwand". tricycle.co.uk.
  6. 6.0 6.1 Okkenhaug. Gender, religion and change in the Middle East: two hundred years of history. Berg Publishers. https://books.google.com/books?id=OhodgErwSWwC&lpg=PA191&dq=Malalai%20Maiwand&pg=PA191#v=onepage&q=Malalai%20Maiwand&f=false. பார்த்த நாள்: 2010-08-22. 
  7. Afghanistan Declassified: A Guide to America's Longest War By Brian Glyn Williams p 109
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாலாய்_மைவந்த்&oldid=2913810" இருந்து மீள்விக்கப்பட்டது