மலாய் வணிகம் மற்றும் கிரியோல் மொழிகள்
| மலாய் வணிகம் மற்றும் கிரியோல் மொழிகள் Malay trade and creole languages | |
|---|---|
| Bahasa-bahasa Melayu dagang dan kreol بهاس٢ ملايو داݢڠ دان کريول | |
| நாடு(கள்) | தென்கிழக்காசியா, தெற்கு ஆசியா மற்றும் ஆத்திரேலியா |
| இனம் | பல்வேறு |
பிட்யின்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-2 | msi |
| ISO 639-3 | – |
| மொழிக் குறிப்பு | crp-035[1] |
மலாய் வணிக மொழி அல்லது மலாய் கிரியோல் மொழிகள் (ஆங்கிலம்: Malay trade and creole languages) என்பது நவீன இலக்கிய வடிவமான மலாய் மொழிகளைக் குறிப்பிடுவதாகும். இந்தோனேசியாவின் சுமாத்திராவில் சிறீவிஜயப் பேரரசு எழுச்சி பெற்ற பிறகு பல்வேறு வட்டார வழக்குகள் நிறுவப்பட்டன. அவற்றுள் மலாய் கிரியோல் மொழிகளும் அடங்கும்.
இனங்களுக்கிடையே ஏற்பட்ட தொடர்பு மற்றும் வணிகத்தின் மூலம், மலாய் மொழி தென்கிழக்கு ஆசியத் தீவுக்கூட்டம் மற்றும் பிலிப்பீன்சு வரை பரவியது. அந்தத் தொடர்பின் விளைவாக, பசார் மலாய் (Bazaar Malay) அல்லது தாழ்நிலை மலாய் என்றும்; மலாய் மொழியில் மெலாயு பசார் என்றும் அழைக்கப்பட்ட ஒரு பொது மொழி (வணிக மொழி) உருவானது. மலாய் மக்கள், ஆக்கியன் மக்கள், போர்த்துகீசிய டச்சு வணிகர்களுக்கு இடையிலான தொடர்புகளால் ஏற்பட்ட தாக்கங்களினால் ஒரு கலப்பு மொழியான பசார் மலாய் உருவானது என பொதுவாக நம்பப்படுகிறது.
சபா மலாய் மொழி
[தொகு]| சபா மலாய் மொழி Sabah Malay | |
|---|---|
| பிராந்தியம் | சபா, சூலு தீவுக்கூட்டம், லபுவான், வடக்கு கலிமந்தான், சம்பொவாங்கா தீபகற்பம், பலவான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | "growing" (date missing) 3 மில்லியன் (2013) |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | msi |
| மொழிக் குறிப்பு | saba1263[2] |
சபா மலாய் மொழி (மலாய்: Bahasa Melayu Sabah; ஆங்கிலம்: Sabah Malay Language); என்பது மலாய் மொழியின் கலப்பு வடிவத்தில் உருவான மற்றும் ஒரு மலாய் மொழி ஆகும். உள்ளூர் வணிக மொழி அல்லது மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிரியோல்[3] (கலப்பு) மொழி என அறியப்படும் இந்த மொழி; மலேசியா, சபா மாநிலத்தில் பேசப்படுகிறது.
சபா மாநிலத்தின் நகர்ப்புறங்களில், இந்த மொழியைப் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக சிறு பிள்ளைகள், இந்த மொழியைத் தங்களின் முதல் அல்லது இரண்டாவது பாரம்பரிய மொழியாகக் கொண்டுள்ளனர்.
பிலிப்பீன்சின் தென்கோடிப் பகுதிகளிலும், குறிப்பாக சுலு தீவுக்கூட்டத்திலும், இந்த மொழியை ஒரு வணிக மொழியாகப் பேசுபவர்கள் சிலர் உள்ளனர். மேலும் பலவான் தீவின் தென்பகுதியிலும், சம்பொவாங்கா தீபகற்பத்திலும் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Malay". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Brunei-Sabah Malay". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Hoogervorst, Tom G. (2011). "Some introductory notes on the development and characteristics of Sabah Malay". Wacana, Journal of the Humanities of Indonesia 13 (1): 50–77. doi:10.17510/wjhi.v13i1.9.