உள்ளடக்கத்துக்குச் செல்

மலாயா மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாயா மன்றம் (ஆங்கிலம்: NMalayan Forum; மலாய்: Forum Malaya) என்பது 1949-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலாயாவைச் சேர்ந்த சீனர் மற்றும் மலாய் இன பல்கலைக்கழக மாணவர்களால் இலண்டனில் நிறுவப்பட்ட ஓர் அரசியல் கருத்துரைக் குழுவாகும்.[1] இந்த மன்றம் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் நவீன அரசியல் தடங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நிலப்பகுதிகளில், தொடர்ச்சியான பிரித்தானிய பேரரசின் ஆளுமை குறித்த கருத்துகளால் இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. இது ஓர் உண்மையான அரசியல் கட்சி அல்ல என்றாலும், அதன் உறுப்பினர்கள் பல்வேறு சித்தாந்தக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர்; மற்றும் அவர்கள் ஒரு பொதுவான குடியேற்றவாத எதிர்ப்பு நிலைப்பாட்டால் ஒன்றுபட்டு இருந்தனர்.[2]

பொது

[தொகு]

அதன் நிறுவனர்களில், பிற்காலத்தில் மலேசியாவின் பிரதமரான அப்துல் ரசாக் உசேன்; சிங்கப்பூரின் நிறுவனத் தந்தையாக அறியப்பட்ட கோ கெங் சுவீ (Goh Keng Swee); மற்றும் இந்தியா, நேபாளம், மலேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளுக்கான சிங்கப்பூரின் தூதராகப் பணியாற்றிய மாரிஸ் பேக்கர் (Maurice Baker) ஆகியோர் அடங்குவர்.

சிங்கப்பூர் குடியரசு மலேசியாவிலிருந்து பிரிந்த பிறகு (Independence of Singapore Agreement 1965), சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியின் (PAP) எச்சங்கள், மலேசியாவில் ஜனநாயக செயல் கட்சி (DAP) உருவாக்கத்திற்கு இந்த மலாயா மன்றம் பங்களித்ததாக அறியப்படுகிறது. மேலும், சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சிக்கும்; மற்றும் மறைமுகமாக மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சிக்கும் ஒரு முறைசாரா முன்னோடியாக விளங்கியதாகவும் கருதப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hill, M & K.F. Lian (1995). The Politics of Nation Building and Citizenship in Singapore. Routledge.
  2. Ahamad Jama' Amin Yang (2019). "Malayan Forum, 1939–1953: Suatu Perjuangan Sivil atau Polemik Aliran?" (in Malay). Universiti Kebangsaan Malaysia: 48-63. பன்னாட்டுத் தர தொடர் எண்:2682-8839. https://ejournal.ukm.my/mihr/article/view/41760/10826.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாயா_மன்றம்&oldid=4604509" இலிருந்து மீள்விக்கப்பட்டது