உள்ளடக்கத்துக்குச் செல்

மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி
Malayan Peoples' Socialist Front
Barisan Sosialis Rakyat Malaya
சோசலிச முன்னணி
சுருக்கக்குறிPEKEMAS
நிறுவனர்அகமது போசுதமாம்
தொடக்கம்31 ஆகத்து 1957
சட்ட அனுமதி29 சூலை1958[1]
கலைப்பு10 சனவரி 1966
பின்னர்மலேசிய ஐக்கிய முன்னணி
(1966–1969/70)
தலைமையகம்கோலாலம்பூர்
உறுப்பினர்மலேசிய மக்கள் கட்சி (PRM)
மலாயா தொழிலாளர் கட்சி (LPM)
தேசிய மரபுக் கட்சி (NCP)
கொள்கைமக்களாட்சி சமூகவுடைமை
இடதுசாரி தேசியவாதம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
நிறங்கள்சிவப்பு

மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி அல்லது சோசலிச முன்னணி (ஆங்கிலம்: Malayan Peoples' Socialist Front அல்லது Socialist Front (SF); மலாய்: Barisan Sosialis Rakyat Malaya; (Barisan Sosialis); சீனம்: 马来亚人民社会主义阵线) என்பது மலேசிய சோசலிசக் கட்சிகளின் இடதுசாரி கூட்டணி ஆகும். மலேசிய பொதுத் தேர்தல் வரலாற்றில் மிக நீண்ட காலம் நிலைத்திருந்த எதிர்க்கட்சி கூட்டணிகளில் இதுவும் ஒன்றாகும்.

1957-ஆம் ஆண்டில் மலாயா விடுதலை நாள் அன்று, மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia); மற்றும் மலாயா தொழிலாளர் கட்சி (Labour Party of Malaya) ஆகியவற்றால் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது.[2][3] 1964-ஆம் ஆண்டில், தேசிய மரபுக் கட்சி (NCP) கூட்டணியில் இணைந்தது.[4]

1965-ஆம் ஆண்டில் மலேசிய மக்கள் கட்சி (PRM) சோசலிச முன்னணிக் கூட்டணியை விட்டு வெளியேறியது. இதன் பின்னர் தேசிய மரபுக் கட்சி (NCP) செயலற்றதாக மாறியது. மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணியில் (SF) எஞ்சியிருந்த ஒரே கட்சியான மலாயா தொழிலாளர் கட்சி (LPM), சனவரி 10, 1966 அன்று மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணியைக் கைவிட்டு அதன் சொந்தக் கொடிக்குத் திரும்பியது.

வரலாறு

[தொகு]

இந்தக் கூட்டணி, மலாயா விடுதலை நாளில் இரு பல இனக் கட்சிகளால் உருவாக்கப்பட்டது. ஒரு கட்சி, மலாய் இடதுசாரித் தலைமையைக் கொண்ட மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia); மற்றொரு கட்சி மலாயாவின் சீனர் சிறுபான்மையினரால் பெருமளவில் ஆதரிக்கப்பட்ட மலாயா தொழிலாளர் கட்சி. (Labour Party of Malaya) ஆகும். இந்தக் கூட்டணியின் முதல் தலைவர் மலேசிய மக்கள் கட்சியின் தலைவர் அகமது போசுதமாம் ஆவார்.

1959 பொதுத் தேர்தலில், சோசலிச முன்னணி (SF) சிலாங்கூர், ஜொகூர் மற்றும் பினாங்கு தொகுதிகளில் 8 இடங்களைப் பெற முடிந்தது. தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 34.6%-ஐ பெற்றது.[5]

மலேசிய நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடம்

[தொகு]

மலாயா தொழிலாளர் கட்சி ஆறு இடங்களில் வெற்றி பெற்றது. அவை:

மலேசிய மக்கள் கட்சி இரு இடங்களில் வெற்றி பெற்றது. அவை:

1959 பொதுத் தேர்தலில் சோசலிச முன்னணி நாடளாவிய நிலையில் 13% வாக்குகளைப் பெற்றது. இதனால் மலேசிய கூட்டணி கட்சி மற்றும் மலேசிய இசுலாமிய கட்சிக்குப் அடுத்த நிலையில் மலேசிய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருமாற்றம் பெற்றது.[7]

1961 சட்டமன்றத் தேர்தலகள்

[தொகு]

1961-ஆம் ஆண்டு பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் பினாங்கின் ஜார்ஜ் டவுனில் உள்ள 14 இடங்களில் 13 இடங்களை சோசலிச முன்னணி கைப்பற்ற முடிந்தது.[5] முன்னாள் வேளாண்துறை அமைச்சர் அசீஸ் இசாக், தனது தேசிய மரபுக் கட்சியை கூட்டணியில் சேர்த்தபோது, மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி மேலும் வலுப்பெற்றது.[8] மலேசிய மக்கள் கட்சியை (PRM) வழிநடத்துவதில் கவனம் செலுத்துவதற்காக 1961-ஆம் ஆண்டு அகமது போசுதமாம் மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணியின் தலைவர் பதவியைத் துறப்பு செய்தார்.[9]

1963-ஆம் ஆண்டில், இந்தோனேசியா - மலேசியா மோதல் நிகழ்வுகளுக்குப் பிறகு, அரசாங்கம் பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்களின் மீது நடவடிக்கை எடுத்தது. மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணியின் தலைவர்கள் இந்தோனேசியா மற்றும் சீனாவுக்கு ஆதரவானவர்களாகக் காணப்பட்டார்.[10] இதனால் சோசலிச முன்னணித் தலைவரும்; மற்றும் பலரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PEOPLE'S SOCIALISI FRONT IS BORN" (in en). The Straits Times: pp. 5. 1958-07-30. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitstimes19580730-1.2.64.
  2. Penang Story: Facing Up to Storm Clouds : The Labour Party of Malaya, Penang Division, 1963 – 1969 பரணிடப்பட்டது 22 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. R.K Vasil, (1971) Politics in a Plural Society: A Study of Non-Communal Political Parties in West Malaysia, p 185 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-638127-5
  4. Rahman, (1997) Pemikiran Islam di Malaysia: sejarah dan aliran, p130 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9795614302
  5. 1 2 "CHARLES HECTOR: Labour Party of Malaya – the Socialist Front – the threat removed through ISA and DWT laws, and ..." 2 September 2009. Retrieved 3 October 2015.
  6. TindakMalaysia. "HISTORICAL-ELECTION-RESULTS/1959-ELECTION-RESULTS/MALAYA_1959_PARLIAMENT_RESULTS.csv at main · TindakMalaysia/HISTORICAL-ELECTION-RESULTS". GitHub (in ஆங்கிலம்). Retrieved 2025-08-25.
  7. "HISTORICAL-ELECTION-RESULTS/1959-ELECTION-RESULTS/MALAYA_1959_PARLIAMENT_RESULTS.csv at main · TindakMalaysia/HISTORICAL-ELECTION-RESULTS". GitHub (in ஆங்கிலம்). Archived from the original on 2025-04-18. Retrieved 2025-08-25.
  8. Weiss, Meredith Leigh (2005). Protest and Possibilities: Civil Society and Coalitions for Political Change in Malaysia. Palo Alto: Stanford University Press. pp. 324. ISBN 0-8047-5295-8.
  9. Philip Mathews (28 February 2014). Chronicle of Malaysia: Fifty Years of Headline News, 1963-2013. Editions Didier Millet. pp. 164–. ISBN 978-967-10617-4-9.
  10. Maidin, (2004), The Unsung Heroes, p120 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9676115827

வெளி இணைப்புகள்

[தொகு]