மலாயத் தொடருந்து நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலாயத் தொடருந்து நிறுவனம்
கெரெடாபி தனா மெலாயு
كريتاڤي تانه ملايو
Ktmb logo.svg.png
குறியீடுகேடிஎம்
இடம்மலேசியத் தீபகற்பம்
இயக்கப்படும் நாள்1885–நடப்பில்
இரயில் பாதை1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
நீளம்1,677 கிமீ
தலைமையகம்கோலாலம்பூர்
கேடிஎம் நிறுவனத்தின் நகரிடை தொடருந்து ஒன்று பகாங் மாநில கோலா லிப்பிஸ் நகர தொடருந்து நிலையத்தில் நிற்கும் காட்சி.

வரையறுக்கப்பட்ட மலாயத் தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad,கரேத்தாப்பி தனாஹ் மலாயு பெர்ஹாட்) பரவலாக கேடிஎம் (KTM) (Jawi: كريتاڤي تانه ملايو برحد) அல்லது மலாயா தொடருந்து நிறுவனம் மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் ஆகும். இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காக கட்டமைக்கப்பட்டது. முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து (FMSR) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம் (MRA) எனவும் அழைக்கப்பட்டது. 1962 முதல் தற்போதைய பெயரான கெரெடாபி தனா மெலாயு என்று (சுருக்கமாக கேடிஎம்) அழைக்கப்படுகின்றது.[1] 1992இல் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசுடைமையான தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]