உள்ளடக்கத்துக்குச் செல்

மலர் ஆராய்ச்சி நிலையம், தோவாளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலர் ஆராய்ச்சி நிலையம் தோவாளை

மலர் ஆராய்ச்சி நிலையம் (FRS), கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், தேசிய நெடுஞ்சாலையில் 47B இல் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி இயக்கத்தின் கீழ் உள்ள ஒரு நிலையம் ஆகும். மலர்ச் சாகுபடி ஆராய்ச்சிக்கென்றே சிறப்பாக ஏற்படுத்தப்பட்ட இந்நிறுவனம் 2008 ஆம் ஆண்டி 4.43 எக்டரில் தொடங்கப்பட்டது[1].

ஆராய்ச்சிமலர்கள்

[தொகு]

தோவாளை பகுதி முழுவதும் 'பூ’ சாகுபடி நடக்கிறது. பாரம்பர்யம் மிக்க பூ சந்தையும் இங்கு செயல்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் நெடுநாளைய கோரிக்கையை ஏற்று 2008 ஆம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இங்கு மலரியல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையத்தில் பாரம்பரிய ரகங்கள் மல்லிகை, சம்பங்கி, அரளி, வாசனை ரோஜா, கனகாம்பரம், செண்டுமல்லி, செலொசியா, செவ்வந்தி, சாமந்தி, வாடாமல்லி ஆகியவற்றில் உயர்தரமான இரகங்கள் மற்றும் புதிய ரகங்களைக் கண்டுபிடித்தல், உற்பத்திப் பெருக்கம், தொழில்நுட்பங்கள், பராமரிப்பு முறைகள், பூச்சி, நோய் மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், தென்னை, வாழைக்கிடையில் பூக்களை ஊடுபயிராக பயிரிடுதல் போன்றவை குறித்த தொடர் ஆராய்ச்சிகளும், விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்தலும் நடைபெறுகிறது. இங்கு 'ஹெலிகோனியா' ரகங்கள் ஆய்வுக்காக நடவு செய்யப்பட்டுள்ளன. பூக்களுக்காக தமிழகத்தில் இயங்கும் ஒரே ஆராய்ச்சி மையம் இதுவாகும்.[2]

நிலையத்தில் உள்ள வசதிகள்

[தொகு]

மலர்களைச் சேமிக்க குளிர் பதனக் கிடங்கு இங்கு அமைக்கப்படவுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]