மலரினும் மெல்லிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலரினும் மெல்லிய
இயக்கம்பி. எஸ். செல்வராஜ்
தயாரிப்புசுகுமாரி ராஜமனோகரன்
கதைபி. எஸ். செல்வராஜ்
இசைசௌந்தர்யன்
நடிப்புவிக்னேஷ்
வர்ஷினி
ஒளிப்பதிவுகே. வி. மணி
படத்தொகுப்புஆர். கே. உதயகுமார்
கலையகம்திவ்யதர்ஷினி புரொடக்சன்ஸ்
வெளியீடுமே 9, 2008 (2008-05-09)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மலரினும் மெல்லிய (malarinum melliya) 2008 இல் வெளியான தமிழ் காதல் திரைப்படம். பி. எஸ். செல்வராஜ் இயக்கத்தில் விக்னேஷ், வர்ஷினி, பெரியார்தாசன், மற்றும் சிவசக்ரவர்த்தி ஆகியோர் நடித்தனர். சுகுமாரி ராஜமனோகரன் தயாரிப்பில் சௌந்தர்யன் இசையமைப்பில் 9 மே 2008 இல் வெளியானது. விக்னேஷிற்கு பின்னணி குரல் வழங்கிய கே. பி. சேகர் தமிழக அரசு திரைப்பட விருதுகள் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) விருது பெற்றார்.[1][2]

கதைச்சுருக்கம்[தொகு]

கிராமத்திற்கு வரும் பள்ளி ஆசிரியர் ஒரு பெரிய வீட்டின் முன் மக்கள் கூடிநிற்பதைப் பார்த்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியவரிடம் (பெரியார்தாசன்) அதற்கானக் காரணத்தைக் கேட்கிறார். அந்த கிராமத்தின் தலைவர் இளங்கோ (விக்னேஷ்) மரணப்படுக்கையில் இருப்பதாகச் சொல்லி, இளங்கோவின் வாழ்க்கைப் பற்றிக் கூறுகிறார்.

பணக்காரரான சுந்தரவதனம் (சிவ சக்கரவர்த்தி) அந்த கிராமத்தினர் உயர்வாக மதிக்கும் பெரிய மனிதர். அவருடைய மூத்த மகன் இளங்கோ (விக்னேஷ்) தந்தையின் வழிநடப்பவர். சுந்தரவதனம் காதல் திருமணத்தை எதிர்ப்பவர். அந்த ஊர்க் கோயிலின் அர்ச்சகர் பெண் சந்தியாவும் (வர்ஷினி) இளங்கோவும் காதலிக்கிறார்கள். அந்த ஊரில் காதலிப்பவர்களுக்குத் தண்டனை வழங்கி அவர்களைப் பிரிக்கும் சுந்தரவதனம் மகனின் காதலைக் கேள்விப்பட்டு, சந்தியாவின் தந்தையை அவமானப்படுத்துகிறார். இதனால் இளங்கோ தந்தையை எதிர்த்துப் பேசுகிறான். அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுந்தரவதனமும் அவர் மனைவியும் இறக்கின்றனர். இதற்கு சந்தியாவும் அவள் தந்தையும்தான் காரணம் என்று அவர்களை ஊரைவிட்டுத் துரத்துகின்றனர். போகும் முன் சந்தியா தன் காதல் உண்மையானது என்று இளங்கோவிடம் சொல்லிவிட்டுச் செல்கிறாள். இளங்கோ அவனது தந்தையின் பொறுப்புகளை ஏற்று அந்தக் கிராமத்தின் தலைவராகிறான். அவன் திருமணம் செய்துகொள்ளாமல் அந்த கிராமத்திற்காக வாழ்கிறான், என்று கதையைக் கூறி முடிக்கிறார்.

திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் சந்தியா இறக்கும்தருவாயில் இருக்கும் வயதான தன் காதலன் இளங்கோவைக் காண வருகிறாள். வாழ்க்கையில் இணைய முடியாத சந்தியாவும் இளங்கோவும் தங்கள் மரணத்தில் ஒன்றாக இணைகின்றனர்.

நடிகர்கள்[தொகு]

  • விக்னேஷ் - இளங்கோ
  • வர்ஷினி - சந்தியா
  • சிவசக்ரவர்த்தி - சுந்தரவதனம்
  • பெரியார்தாசன்
  • பி. எஸ். செல்வராஜ்
  • ஜாய்
  • தாதா முத்துக்குமார் - அர்ச்சகர்
  • முத்துக்காளை
  • நெல்லை சிவா
  • கோபி
  • விஜயபாஸ்கர்
  • வீரா
  • புதுகை மணிமாறன்
  • சுந்தர்
  • லதா - இளங்கோ சகோதரி
  • ஷர்மிளா - இளங்கோ சகோதரி
  • மகேஸ்வரி
  • கற்பகம்
  • நாகலட்சுமி

தயாரிப்பு[தொகு]

இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, கொடைக்கானல், அறந்தாங்கி, நாட்டரசன்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் நடந்தது.[3] மலரினும் மெல்லிய படத்தில் விக்னேஷ், வர்ஷினிக்குக் கொடுத்த முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது.[4][5][6]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் சவுந்தர்யன். பாடலாசிரியர்கள் முத்து விஜயன், கவிமுகில், சீர்காழி சிற்பி மற்றும் பாலமுருகன் ஆகியோர். ராம நாராயணன், கலைப்புலி ஜி. சேகர் பங்கேற்ற பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்தி பாடல்களை வெளியிட்டார்.[7]

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 கண்ணுகொட்ட ரஞ்சித், ரோஷிணி 4:46
2 நிஜமாய் நிஜமாய் முகேஷ், வினயா 4:27
3 அடடா அடடா முகேஷ் 4:45
4 விழியோரமாய் முகேஷ் 4:51
5 காதல் சம்மதம் வினயா 4:28

வெளியீடு[தொகு]

இப்படம் வணிகரீதியில் தோல்விப்படமானது .[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக அரசின் சிறந்த பின்னணி குரல் விருது".
  2. "சிறந்த பின்னணி குரல் விருது".
  3. "80 வயது கிழவனாக விக்னேஷ்". http://tamil.webdunia.com/article/movie-preview-in-tamil/80-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-107090100006_1.htm. 
  4. "பரபரப்புக்குள்ளான முத்தக்காட்சி". https://tamil.filmibeat.com/shooting-spot/directors-070817.html. 
  5. "விக்னேஷ் கொடுத்த முத்தம்".
  6. "தில் வர்ஷினி".
  7. "கார்த்தி - பாடல் வெளியீடு". https://www.indiaglitz.com/karthi-releases-malarinum-melliya-audio-tamil-event-13147. 
  8. "படம் வெற்றியா? தோல்வியா?". https://tamil.filmibeat.com/specials/11-vignesh-on-kissing-spree.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலரினும்_மெல்லிய&oldid=3660622" இலிருந்து மீள்விக்கப்பட்டது