மலபார் மரத்தேரை
மலபார் மரத்தேரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | நீர்நில வாழ்வன |
வரிசை: | தவளை |
குடும்பம்: | Bufonidae |
பேரினம்: | Pedostibes |
இனம்: | P. tuberculosus |
இருசொற் பெயரீடு | |
Pedostibes tuberculosus Günther, 1876 | |
வேறு பெயர்கள் | |
Nectophryne tuberculosus |
மலபார் மரத்தேரை (Malabar tree toad) என்பது ஒரு தேரை ஆகும். இது இந்தியாவின் கோவா மாநிலத்துக்கு தெற்கில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள காடுகளில், ஈரமான மரப் பொந்துகள், நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள செடிகளின் இலைகளில் காணப்படுகிறது.
விளக்கம்[தொகு]
இந்த நடுத்தர அளவிலான தேரையாகும். இதற்கு கரு நிற கணுக்கணுவான உடலும், தோலிழை கொண்ட விரல்களும் கொண்டிருக்கும்.பொதுவாக, பெண் தேரைகள் ஆண் தேரைகளைவிட பெரியதாக இருக்கும். வளர்ந்த தேரைகள் 3.6-3.85 செ நீளம்வரை வளரும்.
பழக்கவழக்கம்[தொகு]
இந்த வகை இனங்கள் மரத்தை வாழ்விடங்களாக கொண்ட வாழ்வதாக அறியப்படுகிறது, பெரியவை இலைக் குப்பைகளில் காணப்படும். ஆனால் இரவில் மரங்களில் ஏறும். இவை மேற்கு தொடர்ச்சி மலையின் காடுகளில் 250 - 1000 மீட்டர் உயரத்தில் நீரோடைகள் உள்ள இடங்களில் காணப்படும். [1]
குறிப்புகள்[தொகு]
- ↑ Daniels, R.J. 2005. Amphibians of Peninsular India. City:Hyderabad. 116-117p.