மலபார் மத்தி மீன் கறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலபார் மத்தி மீன் கறி
கேரளா பாணி மீன் கறி
மாற்றுப் பெயர்கள்மீன் கறி
வகைகறி
தொடங்கிய இடம்இந்தியா
தொடர்புடைய சமையல் வகைகள்இந்தியா, இலங்கை
முக்கிய சேர்பொருட்கள்மத்தி மீன், கறி, காய்கறிகள், வெண்டைக்காய் அல்லது வெங்காயம்); அரிசி, நான் ரொட்டி, ரொட்டி, மரவள்ளிக் கிழங்கு

மலபார் மத்தி மீன் கறி (Malabar Matthi Curry), மீன் குழம்பு என்றும் அழைக்கப்படும் துணைக்கறி உணவு வகையாகும். இந்தியாவின் கோவா பகுதி உணவாகும். இது வெண்டைக்காய் அல்லது வெங்காயம் போன்ற பலவகையான காய்கறிகளுடன் சேர்த்து கேரளா பாணியில் சமைக்கப்படும் கறியில், அரை சுண்டவைத்த பதத்தில் மத்தி மீன் (Sardine fish) சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக அரிசி, நாண், ரொட்டி அல்லது மரவள்ளிக்கிழங்குடன் பரிமாறப்படுகிறது. அரிசி மற்றும் மீன் மிகுதியாக உண்ணப்படும் கேரளா, கோவா மற்றும் இலங்கையில் இந்த உணவு மிகவும் பிரபலமானது. புதுமையை விரும்புவோர் சுவைக்காக புளி சாறு அல்லது தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கலாம்.

வரலாறு[தொகு]

நவீன உணவு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது.[1]

சமையல்[தொகு]

கேரளா காரமான மீன் குழம்பு
புளி ஆந்திரா மீன் குழம்பு

இலங்கை[2] மற்றும் பிற நாடுகளிலும் மீன் குழம்புகள் உண்ணப்படுகின்றன. இந்தக் குழம்பு பெருமளவில் சமைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கேன்களில் அடைத்தோ அல்லது நுகர்வோர் வாங்குவதற்கு ஏற்ப நெகிழ்வான பைகளில் நிரப்பப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.[3][4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jacob, Hena; Pushpanath, Salim (2005). Flavours of Kerala. Dee Bee Info Publications. பக். 40–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788188000074. https://books.google.com/books?id=JLUnwHZKl0wC&dq=Malabar+matthi+curry&pg=PA41. பார்த்த நாள்: February 21, 2012.  ISBN 8188000078
  2. Solomon, Charmaine (1976). The Complete Asian Cookbook. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780804837576. https://www.google.com/books/edition/The_Complete_Asian_Cookbook/qbTFwAEACAAJ?hl=en. பார்த்த நாள்: February 21, 2012.  ISBN 0070596360
  3. Gopal, T.K.Srinivasa; Vijayan, P.K; Balachandran, K.K; Madhavan, P.; Iyer, T.S.G (2001). "Traditional Kerala style fish curry in indigenous retort pouch". Food Control 12 (8): 523–527. doi:10.1016/S0956-7135(01)00058-5. 
  4. Shankar, C. N. Ravi (January–February 2002). "Studies on heat processing and storage of seer fish curry in retort pouches". Packaging Technology and Science 15: 3–7. doi:10.1002/pts.560. 

கூடுதல் ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_மத்தி_மீன்_கறி&oldid=3773463" இலிருந்து மீள்விக்கப்பட்டது