மலபார் தமிழ்
மலபார் தமிழ் (Lingua Malabar Tamul or simply Malabar Tamil) என்பது தமிழின் ஒரு மாறுபட்ட வடிவமாகும். [1] ஐரோப்பிய மறைபணியாளர்கள் கேரள மாநிலத்தின் தெற்கு பகுதிகளான கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் புதிதாக சமயம் மாறிய கிறித்தவர்களிடையே மலையாள மொழியை ஊக்குவிக்கத் தொடங்குவதற்கு முன் இந்தத் தமிழ் ஊக்குவிக்கப்பட்டது. [2] மலபார் தமிழ் அதன் சொற்களஞ்சியத்தைத் தேர்ந்தெடுப்பதில் பொதுத் தமிழிலிருந்து கணிசமாக வேறுபட்டது. துவக்கத்தில் மலபார் தமிழ் உரோமானிய எழுத்துக்களைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டது. [3] பிற்காலத்தில் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி அச்சிடும் முறை பரவலாகியது. [4]
சொற்பிறப்பியல்
[தொகு]மலபார் என்ற சொல் "மலா-பார்" என்ற சொற்களிலிருந்து உருவானது. தமிழ்ச் சொல்லான மலை மற்றும் பாரசீக / அரபு மொழிச் சொல்லான பார் ( "நாடு" அல்லது "தேசம்") என்ற இரு சொற்களின் சேர்கையாகும்.
காட்சியகம்
[தொகு]-
தம்பிரான் வணக்கம் (1578 இல் அச்சிடப்பட்டது)
-
கிரிசித்தியானி வணக்கம் (1579 இல் அச்சிடப்பட்டது)
-
கார்டில்ஹா, ஜெர்மானோ கல்ஹாட்ரோ லிஸ்பனில் 11 பிப்ரவரி 1554 அன்று அச்சிடப்பட்டது
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Xavier S. Thani Nayagam (1957). Tamil Culture. Academy of Tamil Culture. p. 246.
- ↑ S. Jeyaseela Stephen (1998). Portuguese in the Tamil coast: historical explorations in commerce and culture, 1507-1749. Navajothi Pub. House. pp. 328–329. ISBN 9788187382003.
- ↑ Stuart H. Blackburn (2006). Print, Folklore, and Nationalism in Colonial South India. Orient Blackswan. p. 33. ISBN 978-81-7824-149-4.
- ↑ Bellary Shamanna Kesavan (1984). History of Printing and Publishing in India: South Indian origins of printing. National Book Trust, India. p. 28.