மலகாசி மீன்கொத்தி
மலகாசி மீன்கொத்தி | |
---|---|
C. v. vintsioides, Parc de Tsarasotra | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கோரிதோர்னிசு
|
இனம்: | கோ. விண்ட்சையோடெசு
|
இருசொற் பெயரீடு | |
கோரிதோர்னிசு விண்ட்சையோடெசு (ஐடெளவுக்சு & ஜெர்வைசு, 1836) | |
வேறு பெயர்கள் [2] | |
|
மலகாசி மீன்கொத்தி (Malagasy kingfisher) அல்லது மடகாசுகர் மீன்கொத்தி (கோரிதோர்னிசு விண்ட்சையோடெசு) என்பது அல்செடினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது மடகாசுகர், மயோட்டே மற்றும் கொமொரோசு ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல சதுப்பு நிலக் காடுகள் ஆகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]1836ஆம் ஆண்டில் பிரான்சு இயற்கை ஆர்வலர்கள் ஜோசப் ஐடோக்சு மற்றும் பால் கெர்வாய்சு ஆகியோரால் மலகாசி மீன்கொத்தி முறையாக விவரிக்கப்பட்டு இருசொற் பெயர் அல்செடோ வின்ட்சியோயிட்சு என வழங்கப்பட்டது.[3] இது ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் பரவலாகப் பரவியிருக்கும் மலக்கைற்று மீன்கொத்தியுடன் (கோரிதோர்னிசு கிறிசுடடசு) நெருக்கமாகத் தொடர்புடையது. மடகாசுகரில் காணப்படும் இரண்டு மீன்கொத்திகளில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று மடகாசுகர் குள்ள மீன்கொத்தி ஆகும்.
இச்சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் உள்ளன.[4]
- கோ. வி. ஜோகன்னே மைனர்ட்சாகன், ஆர்., 1924-கொமொரோ தீவுகள்
- கோ. வி. வின்ட்சியோயிட்சு (ஐடோக்சு & கெர்வைசு, 1836-மடகாசுகர்
விளக்கம்
[தொகு]மலகாசி மீன்கொத்தியின் உடல் நீளம் 13 முதல் 16.5 செ. மீட்டரும், எடை 22 கிராமும் உள்ளது. இது அடர் நீல நிற மேல் பாகங்கள், செம்பழுப்பு கீழ்ப் பகுதியினையும் நீல மற்றும் பச்சை நிறத் தலைப்பகுதியினையும் கொண்டுள்ளது. அலகு கருமை நிறமுடையது. பாலினங்கள் ஒரே மாதிரியானவை. கோ. வி. ஜோகன்னே சிற்றினத்தின் நீல நிற இறகுகள் வெளிர் மற்றும் பசுமையானவை.
படங்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Corythornis vintsioides". IUCN Red List of Threatened Species 2016: e.T22683093A92975614. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683093A92975614.en. https://www.iucnredlist.org/species/22683093/92975614. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ "Madagascar Kingfisher (Alcedo vintsioides) Eydoux & Gervais, 1836". பார்க்கப்பட்ட நாள் December 21, 2012.
- ↑ Eydoux; Gervais, Paul (1836). "Alcedo vintsioides". Magasin de Zoologie 6 (Classe II): 30, Plate 74 "Voyage de la Favorite". https://biodiversitylibrary.org/page/37086081.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 3 December 2017.