மறைபுற நோக்கி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

மறைபுற நோக்கி அல்லது பெரிஸ்கோப் கருவி (Periscope) என்பது மறைந்திருந்தபடி சூழலை கண்காணிக்க தகுந்த ஒர் ஒளியியல் கருவியாகும். அதன் மிகக் குறைந்த வடிவமைப்பில், இக்கருவி ஒரு குழலின் இருமுனைகளிலும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடிகளை 45 பாகையில் கொண்டது. மேம்பட்ட வடிவத்தில், கண்ணாடிக்கு மாறாக, பல்வேறு வில்லைகளும், பட்டகங்களும் காட்சியை தெளிவாக, விரிவாக காண பயன்படுத்தப் படுகிறது. இத்தகைய கருவி மூலம் ஒரு முனையில், கண்ணாடியில் விழும் பிம்பங்களை, குழலின் அடுத்த முனையில் உள்ள கண்ணாடியில் காணலாம். இக்கருவி, இரண்டாம் உலகப் போரின் போது பகைவர் நிலைகளை பதுங்கு குழிகளின் உள்ளே இருந்த படியே கண்காணிக்க உதவியது. மறைபுற நோக்கி பல்வேறு கவச வாகனங்களிலும், நீர்மூழ்கிக் கப்பகளிலும் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.
படங்கள்[தொகு]
பிரித்தானியாவின் பதுங்கு குழி மறைபுற நோக்கி, கேப் ஹேல்லஸ்v 1915
ஆஸ்திரேலிய குதிரை பட வீரன் மறைபுற நோக்கி பொருத்தப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தும் காட்சி, கல்லிபோளி 1915