மறைநிலை ஒளிப்படவியல்
Appearance

மறைநிலை ஒளிப்படவியல் அல்லது இரகசிய ஒளிப்படம் எடுத்தல் (Secret photography) என்பது ஒரு படம் அல்லது நிகழ்படப் பதிவு சாதனத்தைப் பயன்படுத்தி, வேண்டுமென்றே ஒளிப்படம் எடுக்கப்படுகிறது அல்லது படமாக்கப்படுகிறது என்பதை அறியாத ஒருவரை ஒளிப்படம் எடுப்பது அல்லது படம் பிடிப்பது ஆகும். இது சில நேரங்களில் புதைவாக, அதாவது திருட்டுத்தனமான ஒளிப்படவியல் (covert photography) என்றும் அழைக்கப்படுகிறது.[1]
பயன்கள்
[தொகு]ஒரு நபர் பல்வேறு சூழ்நிலைகளில் ஒளிப்படம் எடுக்கப்படுவதை அறிந்திருக்காமல் இருக்கலாம், அவை:
- பொது மற்றும் தனியார் பகுதிகளில் நிலையான அல்லது இடப்பெயர்ச்சித் தன்மையுள்ள மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி கண்காணிப்பு.
- பிரபலங்களை ஒளிப்படக் கலைஞர்களால் பின்தொடர்தல், (பப்பராத்சி போன்று).
- புலனாய்வு பத்திரிகையில் மறைக்கப்பட்ட ஒளிப்படக்கருவியை பயன்படுத்துதல்.
- தொழில்துறைகளை உளவு பார்க்கும்போது.
- காவல்துறை அல்லது தனியார் புலனாய்வாளர்களால் உளவுத்துறை சேகரிக்கும் போது.
- தொழிலாளியின் இழப்பீட்டு கோரிக்கை தீர்ப்பின் விசாரணை கட்டத்தின் போது.
- கண்காணிப்பாளர்களால்.
- அரசியல் எதிர்ப்பாளர்கள் அல்லது ஆர்வலர்களால்.
- இனவியல் ஆய்வாளர்கள் அல்லது பங்கேற்பாளர் பார்வையாளர் சமூகவியலாளர்கள் போன்ற கல்வியாளர்களால்.
- ஒரு குறும்புத்தனமாக, எ.கா. ஒரு நண்பரின் திறன்பேசியிலிருந்து.
- பாலியல் அல்லது பிற நோக்கங்களுக்காக பார்வை மோகம் கொண்டவர்களால் 1900 களில் வாக்குரிமை இயக்கம் குறித்த உளவுத்துறை சேகரிப்பிலிருந்து ஐக்கிய இராச்சியம் காவல்துறையினரால் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Street Shootings: Covert Photography and Public Privacy". scholarship.law.vanderbilt.edu - © 2025 (ஆங்கிலம்). Retrieved 2025-03-16.
- ↑ "Chapter 1 Introduction: Espionage as the Loss of Agency page: 8" (PDF). deepblue.lib.umich.edu - © 2025 (ஆங்கிலம்). Retrieved 2025-03-16.