உள்ளடக்கத்துக்குச் செல்

மறைக்கும் முகவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறைக்கும் முகவர் (Masking agent) என்பது வேதியியல் பகுப்பாய்வில், பகுப்பாய்வுக்கு இடையூறு செய்யும் வேதிப் பொருள்களுடன் வினைபுரிந்து மறைக்கின்ற முகவரைக் குறிக்கிறது. வளர்மாற்ற சிடீராய்டுகள் அல்லது கிளர்வூட்டிகள் போன்ற சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ள மருந்துகள் [[விளையாட்டுத்துறையினரால் பயன்படுத்தும்போது அவற்றை மறைக்க அல்லது பாதுகாத்துக் கொள்ள மறைக்கும் முகவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுநீர்ப் பெருக்கிகள் மறைக்கும் முகவருக்கு ஓர் எளிய உதாரணமாகும். இவை உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவை பெருக்கி விடுவதால் சிறுநீரின் அடர்த்தி குறைகிறது. இதனால் உட்கொண்ட தடைசெய்யப்பட்ட மருந்தின் அடர்த்தியும் குறைகிறது. தடை செய்யப்பட்ட பொருளின் அடர்த்தி குறைந்து விடுவதால் ஆய்வகத்தில் பகுப்பய்வின்போது அவற்றை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
  • "Masking agent (chemistry) - Britannica Online Encyclopedia". பார்க்கப்பட்ட நாள் 2007-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைக்கும்_முகவர்&oldid=3384224" இலிருந்து மீள்விக்கப்பட்டது