மறுமலர்ச்சி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறுமலர்ச்சி இதழ்

மறுமலர்ச்சி ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு சஞ்சிகை. 1946 ஆம் ஆண்டு பங்குனியில் முதல் இதழ் வெளியானது. தி. ச. வரதராசன் (வரதர்), கா. மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச. பஞ்சாட்சரசர்மா, க. இ. சரவணமுத்து ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1948 வரை 24 இதழ்கள் வெளியாகின. மறுமலர்ச்சி இதழில் வெளியான சிறுகதைகள் செங்கை ஆழியானால் தொகுக்கப்பட்டு மறுமலர்ச்சிச் சிறுகதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளன.

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுமலர்ச்சி_(இதழ்)&oldid=1896152" இலிருந்து மீள்விக்கப்பட்டது