மறுகாலனியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மறுகாலனியாக்கம் என்பது 1990களுக்குப் பிறகு இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட தனியார் மயமாக்கம், தாராள மயமாக்கம், உலக மயமாக்கம் அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளைக் குறிக்க இடதுசாரிக் கட்சிகள் பயன்படுத்தும் சொல் ஆகும்

பின்னணி[தொகு]

1947 இல் பிரித்தானியக் காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் கலப்பு பொருளாதார முறை பின்பற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்ட தொழிற் கொள்கை செயல்படுத்தப்பட்டது. தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் தொடங்குவதும், உற்பத்தியை அதிகரிப்பதும் உரிமங்கள் (licencing), அளவு கட்டுப்பாடுகள் (quota) மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டன. அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்வது பெரிதும் மட்டுறுத்தப்பட்டிருந்தது. பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் 1970களில் தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன. 1980களில் ராஜீவ் காந்தியின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொருளாதார கொள்கைகளின் படி, இந்த கொள்கைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன[சான்று தேவை].

பொருளாதார நெருக்கடி[தொகு]

இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார அமைப்பினுள் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்திய தாராள மயக் கொள்கைகள், 1980களின் பிற்பகுதியில் நிலவிய நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலை இவற்றால் இந்தியாவின் வெளியாட்டு வர்த்தக நிதி பற்றாக்குறை பெரிதும் வளர்ந்தது. 1990ல் சந்திரசேகர் தலைமையிலான அரசாங்கம் நாட்டின் தங்க சேமிப்பை பேங்க் ஆப் இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவின் அன்னிய செலாவணிக் கையிருப்பு உடனடி இறக்குமதி தேவைகளை கூட சந்திக்க முடியாத அளவுக்கு குறைந்தது[சான்று தேவை].

புதிய பொருளாதாரக் கொள்கை[தொகு]

1991 முதல் 1996 வரை மத்தியில் ஆட்சி புரிந்த திரு பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்த ஆரம்பித்தது. அதை முன் நின்று நடத்தியவர் அப்போது நிதி அமைச்சராக பணி புரிந்த மன்மோகன் சிங்.

இந்தியாவின் பணம் ரூபாய் நடப்பு கணக்கில் மாற்றக் கூடியதாக படிப்படியாக மாற்றப்பட்டது. தொழில் துறையில் தனியார் உற்பத்திக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அன்னிய முதலீடுகள் படிப்படியாக பல துறைகளிலும் அனுமதிக்கப்பட்டன[சான்று தேவை].

ஆதரவான வாதங்கள்[தொகு]

கலப்பு பொருளாதார முறையில் பொதுத்துறை நிறுவனங்கள் திறமையுடன் செயல்படுவதில்லை. தொலைபேசி சேவை, கார், இரு சக்கர ஊர்தி போன்ற துறைகளில் நுகர்வோர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. தனியார் தொழில் முனைவோரின் போட்டியிடும் துடிப்பையும், புதிய முயற்சிகளுக்கும் ஊக்கம் இல்லாமல் இருந்தது.

"தாமதமாக வரும் அரசுப் பேருந்து, எரிச்சலுடன் வாடிக்கையாளரை விரட்டும் வங்கிப் பணியாளர், சேவையில்லாமலே தெனாவெட்டாக நடக்கும் தபால் துறை, தருமத்துக்கு நடக்கும் அரசுப் பள்ளிகள், வசதிகளற்ற அரசு மருத்துவமனைகள் இப்படி அன்றாட வாழ்வின் இன்னல்களை முன் வைத்து தனியார் மயம், தாராள மயம், உலக மயமாக்கலை ஆதரிக்கின்றவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்திய பொருளாதாரத்தில் கட்டுப்பாடுகளை நீக்கி தனியார் முதலீட்டையும், அன்னிய முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்த குறைபாடுகளை நீக்கி இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்று புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் வாதிடுகிறார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கை விமர்சனங்கள்[தொகு]

  • கோக், பெப்சி முதல் எண்ணற்ற பன்னாட்டு நுகர்வுப் பொருட்கள் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை அழித்துவிட்டு கால் பதித்தன
  • பங்குச் சந்தை முன்னெப்போதையும் விட பெரிதாக வளர்ந்தது மூலம் அம்பானி போன்ற தனி நபர்கள் பில்லியனில் இலாபம் பார்க்கத் தொடங்கினார்கள்.
  • வளர்ச்சியின் அளவுகோலாக செல்பேசிகளும், வாகனங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தொலைக்காட்சி சீரியல்களும், பேரங்காடிகளும், ஏ.டி.எம்களும் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் முன் இரவுபகலாய் இருந்த நீண்டவரிசை தொடர்ந்து நீடித்தது.
  • ஐந்து இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • கிராமப் புறங்களில் வாழ்விழந்த இலட்சக்கணக்கானோர் உதிரிப் பாட்டாளிகளாய் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
  • அப்பிக் கொண்டனர். பின்தங்கிய மாநிலங்களிலிருந்து நாடோடிகளாய் புலம் பெயருவது வாடிக்கையானது.
  • கல்வியும், சுகாதாரமும் காசு உள்ளவர்களுக்கு மட்டும் என்றானது.

விளைவுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுகாலனியாக்கம்&oldid=2681413" இருந்து மீள்விக்கப்பட்டது