உள்ளடக்கத்துக்குச் செல்

மர மிதிவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லித்துவேனியாவின் வில்னியஸில் உள்ள மார்செலியூகேஸ் கிளேடிஸ் உணவகத்தின் கூரையிலிருந்து தொங்கும் ஒரு பழங்கால மர மிதிவண்டி. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.
ஒரு நவீன மரக்கிளை மிதிவண்டி
நவீன மரச் சமநிலை மிதிவண்டிகள்

மர மிதிவண்டி (Wooden bicycle) என்பது பெரும்பாலும் அல்லது முழுமையாக மரத்தால் உருவாக்கப்பட்ட மிதிவண்டி ஆகும்.[1][2] மிதிவண்டிகளின் ஆரம்ப காலங்களில் மரமே முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டது. இன்றும், குறிப்பாக குழந்தைகளுக்கான சமநிலை மிதிவண்டிகளில் மரம் பயன்படுத்தப்படுகிறது. மரம் திடமாகவோ அல்லது நெகிழித் தாள் பூசப்பட்டதாகவோ (லாமினேட்) இருக்கலாம்.[3][4]

வரலாறு

[தொகு]

1817ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட ஆரம்பகால மிதிவண்டிகள் (வெலோசிபீடு, டாண்டி ஹார்ஸ், ஹாபி ஹார்ஸ் என்று அழைக்கப்பட்டவை) மரத்தால் தயாரிக்கப்பட்டன.[5][6]

நவீன காலம்

[தொகு]

சமீபத்திய ஒட்டும் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு முறைகளின் முன்னேற்றத்தால், மரம் மீண்டும் மிதிவண்டி தயாரிப்பில் பயன்படுத்தப்படக்கூடியதாக மாறியுள்ளது. மர மிதிவண்டி கட்டமைப்புகளில் சில நேரங்களில் எஃகு அல்லது கலவை பொருட்களால் செய்யப்பட்ட இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மரக் குழாய்களை இணைக்கவும், பிற பகுதிகளை பொருத்தவும் உதவுகிறது. இத்தகைய கட்டமைப்புகள் பிளைவுட், கடினமரங்கள் அல்லது மூங்கில் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் சில நிறுவனங்கள் மர மிதிவண்டிகளை தயாரித்து வருகின்றன.[7]

Wooden balance bicycle for children
குழந்தைகளுக்கான மரச் சமநிலை மிதிவண்டி

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sophie Hurcom (15 Jul 2013). "Wooden bikes from Flat Frame Systems..." Cycling Weekly. Retrieved 2013-07-16.
  2. Matei (26 June 2013). "This Wooden Bicycle Is Beautifully Impractical". Gizmodo. Retrieved 2013-07-16.
  3. Peter Suciu (Oct 19, 2012). "The $70,000 wooden bicycle". BikeRadar. Archived from the original on 2016-08-06. Retrieved 2013-07-16.
  4. Shea Gunther. "11 awesome bikes made of wood". Mother Nature Network. http://www.mnn.com/green-tech/transportation/photos/11-awesome-bikes-made-of-wood/a-green-life-cycle. பார்த்த நாள்: 2013-07-16.
  5. Wilson, David Gordon; Jim Papadopoulos (2004). Bicycling Science (Third ed.). The MIT Press. pp. 377–378. ISBN 0-262-73154-1.
  6. Bess Liebenson (July 8, 2001). "A State Story on Two Wheels". The New York Times. https://www.nytimes.com/2001/07/08/nyregion/a-state-story-on-two-wheels.html. பார்த்த நாள்: 2013-07-16. "Mr. Lallement's first conception, a crude wooden bicycle"
  7. "Home". htechbikes.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர_மிதிவண்டி&oldid=4519356" இலிருந்து மீள்விக்கப்பட்டது