உள்ளடக்கத்துக்குச் செல்

மர்ரி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மர்ரி மக்கள் (Marri), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் பழங்குடி மக்கள் ஆவர். இம்மக்கள் பலூச்சி மொழி பேசுகின்றனர். மர்ரி மக்கள் வாழும் பகுதிக்கு மேற்கில் சிபி, வடக்கில் காக்கர் மக்கள் மற்றும் லோனி பிரிவு பஷ்தூன் மக்கள், கிழக்கில் கேத்ரான் மக்கள், தெற்கில் புக்தி மக்களும் வாழ்கின்றனர்.[1] பலுசிஸ்தான் விடுதலைப்படையில், பழங்குடி மர்ரி மக்கள் மற்றும் புக்தி மக்களை அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[2]

பிற பலூச்சி பழங்குடி மக்கள் போன்று மர்ரி மக்களும் நாடோடிகளாக கால்நடை மேய்த்தல் தொழிலை பரம்பரையாகச் செய்துவருகின்றனர். [3] இம்மக்களில் பலர் பாகிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் மாகாண அரசுகளில் முக்கியப் பணியிடங்களில் உள்ளனர்.

உட் பிரிவுகள் மற்றும் குலங்கள்

[தொகு]

மர்ரி மக்களின் பிஜாரானி, கஜானி மற்றும் லோகரானி என 3 உட்பிரிவுகளும் மற்றும் பல குலங்களும் உள்ளது. அவைகள் பின்வருமாறு:

  • பிஜாரானி:காலந்தரனி, சலாரானி, சும்ரானி, பிர்தாதானி, மந்தவானி, ராக்கனி, பிர்தானி, கால்வானி, குங்ரானி, சாஹேஜா, பதாவாடி, கைஸ்ரானி, பதேகான்சாய், பெவ்ராக்சாய், குதைசாய், நேகல்லன்சாய் மற்றும் பல குலங்கள்'
  • கஜானி: பாவல்சாய், மகாந்தானி, ஜார்வார், சிகாரி, சூரி, சிங், லோரிகுஷ், திங்ஜியானி, ஆலியானி, நோஸ்பந்தாகனி, முகஹந்தானி,லோதியானி, முர்கியானி, மசாரானி, இஸ்பானி, பதானி, லங்கானி, மெகானி, சாஹானி, முர்கியானி மற்றும் பல குலங்கள்'
  • லோகரானி: குனரானி, செரானி, முகமதானி, குஸ்ரானி, துர்கானி, ஜாலம்பானி, ஜிந்த்வானி, மெலோகர், சராங்கனி மற்றும் பல

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pehrson & Barth 1966, ப. 1–2.
  2. பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் பயணிகளுடன் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?
  3. "Lifestyle of a Nomad", An Element of Luck, The Radcliffe Press, 1993, ISBN 978-1-85043-739-0, retrieved 2021-07-10

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்ரி_மக்கள்&oldid=4230362" இலிருந்து மீள்விக்கப்பட்டது