மர்ம கோட்டையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்ம கோட்டையகம்

மர்ம கோட்டையகம் (Mystery Castle) என்பது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ் நகரில் சவுத் மவுண்டன் பூங்கா மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கட்டடம் ஆகும். இது 1930 இல் பாய்ஸ் லூதர் கல்லி என்பவரால் அவருடைய மகள் மேரி லூ என்பவருக்காக கட்டப்பட்டது. லூதர் கல்லி தனக்கு காச நோய் இருப்பதை அறிந்து, சியாட்டில் இருந்து பீனிக்ஸ் பகுதிக்கு குடிபெயர்ந்து, இந்த வீட்டை மலிவான பொருட்களைக் கொண்டு கட்டத் தொடங்கினார். அவர் 1945 இல் இறந்தார். அதன்பிறகு மேரி லூவும் அவரது தாயாரும் தங்கள் மரபுரிமைப்படி மர்மக் கோட்டையின் உரிமையாளர்களாயினர்.

பாய்ஸ் லூதர் கல்லியிடம் அவருடைய ஐந்து வயது மகள் மேரி லூ, ஒரு கோட்டை வேண்டும் என ஆசையாக கேட்டதால், தன் மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காகக் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் தன் அன்றாடப் பணிகளைக் கவனித்துக்கொண்டே 18 அறைகள் கொண்ட இந்தக் கோட்டையை லூதர் கட்டினார்.[1] இந்தக் கதை A Life Magazine story என்ற பெயரில் (ஜனவரி 26, 1948) [2] என்ற தலைப்பில் பத்திரிக்கையில் வெளியானது அதில் மேரி லூவும் அவரது தாயாரின் படங்களும் இடம்பெற்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. ரேணுகா (10 பெப்ரவரி 2018). "காதல் சொல்லும் கட்டிடங்கள்". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/society/real-estate/article22712111.ece. பார்த்த நாள்: 15 பெப்ரவரி 2018. 
  2. Life Magazine. https://books.google.com/books?id=p0gEAAAAMBAJ&lpg=PP1&pg=PA117. பார்த்த நாள்: 5 February 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்ம_கோட்டையகம்&oldid=3577985" இருந்து மீள்விக்கப்பட்டது