உள்ளடக்கத்துக்குச் செல்

மரோத்ராவ் கண்ணம்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாதாசாகேப் கண்ணம்வர்
2வது முதலமைச்சர், மகாராட்டிரா
பதவியில்
20 நவம்பர் 1962  24 நவம்பர் 1963
முன்னையவர்ஒய். பி. சவான்
பின்னவர்பி. கே. சாவந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சனவரி 1900
சாவோலி, பேரர், இந்தியா
இறப்பு24 நவம்பர் 1963(1963-11-24) (அகவை 63) [1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜிஎம் (தை) கண்ணம்வர்

மரோத்ராவ் சம்ப்சியோ (எம். எசு) கண்ணம்வர் (Marotrao Kannamwar)(10 சனவரி 1900 - 24 நவம்பர் 1963) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 20, 1962 முதல் நவம்பர் 24, 1963 வரை மகாராட்டிராவின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

கண்ணம்வார் 1957ஆம் ஆண்டு பம்பாய் மாநிலத்தில் உள்ள சாவோலி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், 1960 முதல் 1962 வரை மகாராட்டிரா மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] 1962ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சாவோலியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்றத்திற்கு மீண்டும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முதல்வராகப் பதவி வகித்தபோது நவம்பர் 24, 1963 அன்று இறந்தார். [3]

நினைவாக

[தொகு]
  • மும்பையின் விக்ரோலியில் (கிழக்கு) உள்ள கண்ணம்வர் நகர் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
  • நாக்பூரில் உள்ள கே. டி. கே பொறியியல் கல்லூரி இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
  • சந்திராபூரில் உள்ள காங்கிரசு-இல்லம் மகாராட்டிராவின் முன்னாள் முதல்வரின் பெயரில் மாற்றப்பட்டது.
  • மேலும், கோந்தாலிக்கு அப்பால் (நாக்பூரிலிருந்து 50+ கி.மீ) தே. நெ. 6இல், தே. நெ. 6-லிருந்து ஒரு மாற்றுப்பாதையில், கண்ணம்வர் கிராமம் என்ற கிராமம் இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
  • 1982ஆம் ஆண்டு ஸ்ரீராம் தோட் என்பவரால் நிறுவப்பட்ட சந்திராபூர் மாவட்டத்தில் சர்போடி கிராமத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு இவரது பெயரிடப்பட்டது (கர்மவீர் கண்ணம்வார் வித்யாலயா சுர்போடி உயர்நிலைப் பள்ளி).
  • அரசு மருத்துவக் கல்லூரி, சந்திராபூர்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kannamwar". The Indian Express: p. 1. 25 November 1963.
  2. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957/StatRep_Bombay_1957.pdf page=14
  3. "History of Modern Maharashtra". Archived from the original on 2 April 2013. Retrieved 30 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரோத்ராவ்_கண்ணம்வார்&oldid=4334443" இலிருந்து மீள்விக்கப்பட்டது