புரியிடுதல் (சுடுகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மரையிடுதல் (சுடுகலன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
90மி.மீ. எம்75 பீரங்கியின் வழக்கமான புரியிட்ட குழல் (தயாரிக்கப்பட்ட வருடம் 1891, ஆஸ்திரியா-அங்கேரி
105மி.மீ. ராயல் ஆர்டினன்சு எல்7 கவசவூர்த்தி துமுக்கியில் வார்க்கப்பட்டிருக்கும் மரை

புரியிடுதல் / மரையிடுதல் என்பது, எறியதிற்கு ஓர் சுழற்சியை அளிப்பதற்கு, சுடுகலனின் குழலில் சுருளை வடிவ பள்ளங்களை குடைவதே ஆகும். இந்த சுழற்சி எறியத்தின் காற்றியக்க நிலைத்தன்மையையும் துல்லியத்தையும் மேம்படுத்தும்.

ஒரு முழு சுழற்சியை பூர்த்தி செய்ய தேவைப்படும் தூரத்தை தான் திருகு விகிதம் என்பர். திருகு விகிதம் தான் புரியிடுலை விவரிக்கும். உதாரணமாக: "10 இன்ச்சில் 1 சுழற்சி" (1:10 இன்ச்சு), அல்லது "254மி.மீ.-ல் 1 சுழற்சி" (1:254 மி.மீ.). எந்த அளவிற்கு தூரம் குறைகிறதோ, அந்த அளவிற்கு திருகுதல் "வேகாமாகும்" - இதன் பொருள், நிர்ணயிக்கப்பட்ட திசைவேகத்திற்கு அதிகமான சுழற்சி இருக்கும். 

இரு பள்ளத்திற்கு இடையில் உள்ள உயர்ந்த இடைவெளியை 'மேடு' என குறிப்பிடுவர்.

சில வகைகளில், புரியிடுதலின் திருகு விகிதம், சீராக அதிகரித்து, சன்னம் வெளியேறும் முனையில் அதிகபட்சமாக இருக்கும், இதை பெருக்கத் திருகு என்பர்.[1][2]

வரலாறு[தொகு]

9 மி.மீ. கைத்துப்பாக்கியின் குழலின் இருக்கும் புரி/மரை.

மசுகெத்துகள் மரையிடாக் குழல் உடையவை. ஒரே அளவிலான குண்டுகளை உற்பத்தி செய்ய இயலாமையும், சன்னவாய் வழியாக குண்டேற்றுவதை எளிதாக்கவும்; குண்டுகள் குழலில் பொருந்தாமல் அலைமோதும் வகையில் இருக்கும். இதனால், சுடும்போது குண்டு குழலினுள் முட்டிமோதி, குழலைவிட்டு வெளியேறிய பின் தறிகெட்டுப் பாயும்.

15-ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜெர்மனியின் ஔசுபூர்கில் குழற் புரியிடுதல் கண்டுபிடிக்கப்பட்டது.[3] 1520-ல் நியூரம்பெர்க்கை சேர்ந்த ஆகஸ்ட் கோட்டர், என்ற கவசக் கொல்லர் இதை மேம்படுத்தினார். உண்மையில் புரியிடுதல் 16-ஆம் நூற்றாண்டில் கண்ண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், 19-ஆம் நூற்றாண்டில் தான் இது அனைவருக்கும் பரிச்சியமானது.

அண்மைய மேம்பாடுகள்[தொகு]

பல்கோண புரியிடுதல் [தொகு]

வழக்கமான புரி (இடது) பல்கோண புரி (வலது). இரு வகைகளும் சுருளை வடிவில்தான் இருக்கும்.
அறுகோணம் கொண்ட சுருளை வடிவ மரையிடுதல். Hill=மேடு; Valley=பள்ளம்

நவீன புரியிடுதலில், கூரான விளிம்புகள் உடைய பொளிவாய் (பள்ளம்) வெட்டப் படுகிறது. அண்மையில், பல்கோண புரியிடுதல் முந்தைய புரி வகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. பல்கோண குழல்கள் அதிக காலம் உழைக்கும், காரணம் - கூரான பள்ளம் இதில் இல்லாததால், குழலில் தேய்மானம் குறைகிறது.

பெருக்கத் திருகு புரி [தொகு]

திருகு விகிதம் [தொகு]

திருகு விகிதத்தை விவரித்தல்[தொகு]

திருகு விகிதத்தை விவரிக்கும் வழி பின்வருமாறு:

திருகு விகிதத்தை விவரிக்க, எறியம் ஒரு முழு சுழற்சியை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

இங்கே:

  • T = குழல் விட்டத்தைக்கொண்டு திருகு விகிதம் 
  • L = எறியம், ஒரு முழு சுழற்சியை முடிக்க தேவையான திருகு நீளம். (மி.மீ./இன்ச்சு)
  • Dbore = குழல் விட்டம் (மேட்டின் விட்டம், மி.மீ./இன்ச்சு)

சன்ன சுழற்சி [தொகு]

புரியிட்ட குழலில் இருந்து சுடப்படும் சன்னம், நிமடத்திற்கு 300,000-கும் மேலான சுழற்சியை (5 kHz) கொண்டிருக்கும்.
சுழற்சி 'S' என்பது கீழ்வருமாறு விவரிக்கபடும்,சுழற்சி 'S' என்பது கீழ்வருமாறு விவரிக்கபடும்,

இங்கே, = சன்னவாய் திசைவேகம்; L = திருகு விகிதம் [4]

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "gain twist". MidwayUSA GunTec Dictionary. Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2016-12-30.
  2. Dan Lilja. "What makes a barrel accurate?". Archived from the original on 2007-08-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-30.
  3. W. S. Curtis. "Long Range Shooting: A Historical Perspective".
  4. "Calculating Bullet RPM". 3 June 2008. பார்க்கப்பட்ட நாள் 4 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரியிடுதல்_(சுடுகலன்)&oldid=3564215" இலிருந்து மீள்விக்கப்பட்டது