மரையிடாக் குழல் (சுடுகலன்)
Appearance
குழலின் உட்புறத்தில், மரைகள் வார்க்கப்படாமல் வழுவழுப்பாகவே விடப்பட்டிருக்கும் ஆயுதமே, மரையிடாக் குழல் ஆயுதம் ஆகும். கையடக்க சுடுகலங்களில் இருந்து, சக்திவாய்ந்த கவசவூர்த்தி துமுக்கி மற்றும் பெரிய மோர்டர் பீரங்கிகள் வரை; மரையிடாக் குழல்களின் வகைகள் உண்டு. பெரும்பாலான சிதறு துப்பாக்கிகள் மரையற்ற குழலைத்தான் கொண்டிருக்கும்.
சுடுகலன்களின் வரலாறும் மரையிடுதலும்
[தொகு]முற்கால சுடுகலன்கள் வழுவழுப்பான குழல்களை கொண்டிருந்ததால், சுடப்பட்ட எறியங்கள் குறிப்பிடும்படியான நிலையான சுழற்சியை கொண்டிருக்காது.[1] எறியத்தின் தேவையற்ற புரளுதல், அதை திசைதிருப்பி துல்லியமின்மையை உண்டாக்கும்.
குழலினுள் சுருளை வடிவத்திலோ அல்லது பல்கோண வடிவத்திலோ மரையிடுவதால், எரியத்தின்மீது ஒரு நிலையான சுழற்சியை ஏற்படுத்தும். இதனால் எறியம் பறக்கையில், அதை திசைதிருப்பும் இதர சுழற்சிகள் தவிர்க்கப்படுகின்றன.
மேலும் பார்க்க
[தொகு]- மரையிடுதல்
- Buck and ball
- பொட்டடி துப்பாக்கி / தீபாவளி துப்பாக்கி / பொம்மை துப்பாக்கி
- பொட்டடி இயங்குநுட்பம்
- அக எறியியல்
- மீனியே தோட்டா
- வெடிமருந்து
- பீரங்கி
- வாய்வழி-குண்டேற்ற சுடுகலன்
- சன்னவாய்
- துமுக்கிக் குழல்
- எறியம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fadala, Sam (17 November 2006). The Complete Blackpowder Handbook. Iola, Wisconsin: Gun Digest Books. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89689-390-1.[தொடர்பிழந்த இணைப்பு]