மரு ஊமத்தை
மரு ஊமத்தை | |
---|---|
மருளூமத்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Xanthium |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/XanthiumX. strumarium
|
இருசொற் பெயரீடு | |
Xanthium strumarium லி. | |
Subspecies | |
see text | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
மரு ஊமத்தை அல்லது மருளூமத்தை (Xanthium strumarium, rough cocklebur, clotbur, common cocklebur, large cocklebur, woolgarie bur) என்பது சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டுத் தாவர இனமாகும். [2] இது வட அமெரிக்காவில் தோன்றி உலகின் வேறு இடங்களுக்கு பரவி இருக்கலாம் எனப்படுகிறது. [3] [4]
துணை இனங்கள்
[தொகு]இதில் பின்வரும் கிளையினங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: [1]
- Xanthium strumarium subsp. brasilicum (Vell.) O.Bolòs & Vigo
- Xanthium strumarium subsp. strumarium
இனப்பெருக்க உயிரியல்
[தொகு]இதன் காய்கள் நீரில் மிதக்ககூடியதாக இருப்பதால், நீர் வழியாக எளிதில் பரவுகிறது. மேலும், இதன் காய்களில் உள்ள பற்று முட்கள் பாலூட்டிகளின் முடியில் சிக்கிக் கொண்டு அதன் மூலமும் வேறு இடங்களுக்கு பரவுவுகின்றன.
நச்சு அல்லது மருத்துவ தாவர வேதியியல்
[தொகு]இந்த தாவரம் சில மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கலாம் [5] மேலும் இது தெற்காசியாவில் பாரம்பரிய மருத்துவத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது . தெலுங்கில் இந்த செடியை மருள மாதங்கி என்று அழைக்கின்றனர்.
இதில், முதிர்ந்த தாவரங்களின் பகுதிகளை குறைந்த அளவில் உட்கொள்ளலாம். இதன் விதைகளையும் நாற்றுகளையும் அதிக அளவில் உண்ணக்கூடாது. ஏனெனில் அவற்றில் மிகவும் நச்சுத்தன்மையுள்ள இரசாயனமான கார்பாக்சிட்ராக்டைலோசைட்டின் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முதிர்ந்த தாவரத்தில் குறைந்தத அளவு நச்சுகள் உள்ளன. [6]
- இந்த்த் தாவரங்களை சாப்பிட்ட பிறகு விலங்குகளும் இறந்துவிடுகின்றன.
- காங் எர் ஜி வான் (苍耳子丸) எனப்படும் காக்ல்பர் அடங்கிய பாரம்பரிய சீன மருந்தை உட்கொண்ட நோயாளிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. [7]
- 2007 ஆம் ஆண்டு வங்காளதேசத்தின், சில்ஹெட் மாவட்டத்தில் குறைந்தது 19 இறப்புகள் மற்றும் 76 பேருக்கு நோய் ஏற்பட இது காரணமாக இருந்தது. மழை வெள்ளத்தின் போது பட்டினி கிடந்த மக்கள், வேறு தாவரங்கள் கிடைக்காததால் , காக்ரா ஷக் என்று அழைக்கப்படும் தாவரங்களை அதிக அளவில் சாப்பிட்டனர். இதன் அறிகுறிகளில் வாந்தியெடுத்தல் மற்றும் மன நிலை பிறழ்வு, அதைத் தொடர்ந்து சுயநினைவின்மை அடைதல் ஆகியவை அடங்கும். [8]
பூர்வீக அமெரிக்கர்களால் பயன்படுத்தப்படுதல்
[தொகு]சூனி மக்கள் பல நோக்கங்களுக்காக கனடென்ஸ் வகை தாவரத்தை பயன்படுத்துகின்றனர். கற்றாழை சடங்கிற்கு முன் மெல்லப்பட்ட இதன் விதைகளை உடலில் தேய்க்கின்றனர். இதன் விதைகளின் கலவை காயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது அல்லது கட்டிகளுக்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்படுகிறது. [9] விதைகளும் அரைக்கப்பட்டு, சோள மாவுடன் கலந்து, வேகவைத்து ரொட்டி செய்யப்படுகிறது. [10] [11]
படக்காட்சியகம்
[தொகு]-
காய்
-
இலைகள்
-
நாற்று
-
காய்ந்த காய்கள்
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Xanthium strumarium L." Plants of the World Online. Board of Trustees of the Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 2 April 2021.
- ↑ Weeds in South Texas and Northern Mexico. Texas Tech University Press. 2007.
- ↑ "Xanthium strumarium". Atlas of Florida Plants. Institute for Systematic Botany, University of South Florida.
- ↑ "Xanthium strumarium L." Calflora. Taxon Report 8367.
- ↑ Kamboj Anjoo; Saluja Ajay Kumar (2010). "Phytopharmacological review of Xanthium strumarium L. (Cocklebur)". International Journal of Green Pharmacy 4 (3): 129–139. doi:10.4103/0973-8258.69154.
- ↑ "Ethnobotanical, phytochemical and toxicological studies of Xanthium strumarium L". Bangladesh Medical Research Council Bulletin 35 (3): 84–90. Dec 2009. doi:10.3329/bmrcb.v35i3.3658. பப்மெட்:20922910.
- ↑ "Muscle spasm associated with therapeutic use of Cang Er Zi Wan.". Clinical Toxicology 48 (4): 380–4. May 2010. doi:10.3109/15563651003610161. பப்மெட்:20521353.
- ↑ "Fatal outbreak from consuming Xanthium strumarium seedlings during time of food scarcity in northeastern Bangladesh.". PLOS ONE 5 (3): e9756. 2010. doi:10.1371/journal.pone.0009756. பப்மெட்:20305785. Bibcode: 2010PLoSO...5.9756G.
- ↑ Stevenson, Matilda Coxe (1915). "Ethnobotany of the Zuni Indians". SI-BAE Annual Report 30: 62–63.
- ↑ Stevenson (1915).
- ↑ Castetter, Edward F. (1935). "Ethnobiological Studies in the American Southwest I. Uncultivated Native Plants Used as Sources of Food". University of New Mexico Bulletin 4 (1): 1–44, 54.