மருளூமத்தை எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருளூமத்தை எண்ணெய் (Cocklebur Oil) என்பது மருளூமத்தை விதைகளை அழுத்துவதன் மூலம் பெறப்படும் எண்ணெய் வகை ஆகும். மருளூமத்தையின் தாவரவியல் பெயர் சாந்தியம் இசுட்ருமேரியம் (Xanthium strumarium) ஆகும். இது வேளாண்மையில் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கால்நடைகளுக்குத் தீங்கு செய்யக்கூடும். இந்த எண்ணெய் கசகசா எண்ணெய் போல் இருக்கும். வெளிர் மஞ்சள் நிறம் உடைய இந்த எண்ணெய் சுவை மற்றும் மணத்தில் சூரியகாந்தி எண்ணெயைப் போன்றது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. N. Maximov (1963). "Physico-Chemical Investigation of Cocklebur Oil". Comptes Rendus (Akademiia nauk SSSR): 381-. https://books.google.com/books?id=dSRPAAAAIAAJ. 
  2. J. S. McHargue (April 1921). "Some Points of Interest Concerning the Cocklebur and Its Seeds". Ecology (Ecological Society of America) 2 (2): 110–119. doi:10.2307/1928923. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருளூமத்தை_எண்ணெய்&oldid=3507034" இலிருந்து மீள்விக்கப்பட்டது