மருந்துவாழ் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மருந்துவாழ் மலை (மருத்துவா மலை)

மருந்துவாழ் மலை (Marunthuvazh Malai) அல்லது மருத்துவாமலை என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் பல நிறைந்துள்ள ஒரு மலையாகும்.[1][2].நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடக்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலையில் பல மருத்துவ மூலிகைகள் கிடைப்பதால்[1]இம்மலை மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது. இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்ற போது தமிழ்நாட்டில் விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலையும் ஒன்று என்று இங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மலையில் சுமார் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ள பிள்ளைத்தடம் எனும் குகையில் ஸ்ரீ நாராயணகுரு சில ஆண்டுகள் தவமிருந்து மெய்யறிவு பெற்றார். இது ஒரு கிலோமீட்டர் பரந்தும் 800 அடி உயர்ந்தும் உள்ளது. சுவாமித்தோப்பில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் உள்ளது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையில் தீபம் ஏற்றப்படும்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே அய்யாவழி சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது.[3]

ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம்[தொகு]

இந்த ஊரில் ஸ்ரீ நாராயணகுரு போதித்த சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியில் உருவாக்கப்பட்ட சதயபூஜா சங்கத்தின் நிர்வாகத்தில் 1992 ஆம் ஆண்டில் “ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் எனும் பெயரில் மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.kanyakumari.tn.nic.in/tourist.html
  2. http://www.hindu.com/2004/10/29/stories/2004102904560300.htm
  3. வருடியிருப்பதாலே மருந்து வாழ் மலையில் மருந்து வளரலாச்சே சிவனே அய்யா - சாட்டு நீட்டோலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருந்துவாழ்_மலை&oldid=2385308" இருந்து மீள்விக்கப்பட்டது