மருத்துவ குடுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரிய மருத்துவ குடுவைகள் சிர்கா 1300 காலத்தவை. இலண்டனின் ஃபென்சர்ச் தெருவில் தோண்டப்பட்டது, இது இடைக்கால ஐரோப்பாவிற்கு இஸ்லாமிய பங்களிப்புகளுக்கு எடுத்துக்காட்டு. லண்டன் அருங்காட்சியகம் .
பிரான்சின் பதினான்காம் லூயின் மருந்து கடை, மருத்துவ ஜாடிகளுடன். மியூசியம் நேஷனல் டி ஹிஸ்டோயர் நேச்சர்லே, பாரிஸ்.

மருத்துவ குடுவை (Medicinal jar), மருந்து குடுவை அல்லது அப்போதெக்கரி குடுவை என்பது மருந்தைக் கொண்டிருக்கும் ஒரு குடுவை.

மருத்துவ குடுவைகள் பொதுவாக மருந்து தயாரிப்பாளர்களின் கடைகள் மற்றும் மருத்துவமனைகளில் பொதுவாகப் பயன்பாட்டில் உள்ளன.[1] டெல்ஃப்ட்வேர் என அழைக்கப்படும் பிரபலமான டச்சு மற்றும் இங்கிலாந்து பீங்கான் மருத்துவ ஜாடிகள் ஒரு முக்கிய வகையான மருத்துவக் குடுவையாகும்.[2]

அல்பரெல்லோ என அழைக்கப்படும் ஒரு பிரபலமான மருந்து குடுவை இசுலாமியத் தயாரிப்பாகும்.[3][4]

பெரும்பாலான நவீன மருத்துவக் குடுவைகள் தெளிவான கண்ணாடியால் ஆனவை. மேலும் இவை கண்ணாடி மூடியைக் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் எளிய உருளையாக இருக்கின்றன. சில மாறுபட்ட வடிவமைப்பில், சுழற்சி முறையில் சமச்சீர் வளைவுகளையும் கொண்டிருக்கலாம். சில சமயங்களில் கண்ணாடி வட்டு வடிவ கால் பிரதான உடலிலிருந்து பிரிக்கப்படுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளிலிலிருந்து வந்த பழங்கால மேற்கத்திய அப்போதெக்கரி குடுவைகள் பொதுவாகத் தெளிவான கண்ணாடி உருளைபோன்ற குடுவைகளாகும். இவை ஒப்பீட்டளவில் உயரமாகவும் மெல்லியதாகவும் உள்ளன. இதில் முக்கியமாக மெல்லிய கழுத்து மற்றும் கண்ணாடி தடுப்பானும் கொண்டது. உள்ளடக்கங்களின் கலை காட்சிக்குக் கண்ணாடி பதிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவ_குடுவை&oldid=3136894" இலிருந்து மீள்விக்கப்பட்டது