மருத்துவர் முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர் முடிச்சு
இறுக்கப்படுவதற்கு முன் மருத்துவர் முடிச்சு. கீழ்ப்பகுதியில் இரண்டு முறுக்குகளும், மேல்பகுதியில் ஒன்றும் காணப்படுகின்றன.
பெயர்கள்மருத்துவர் முடிச்சு, Ligature knot
வகைபிணைப்பு
வகை #2தொடுப்பு
தொடர்புபாய்ச்சுருக்கு முடிச்சு, இரட்டை நுனி முடிச்சு
ABoK#461, #463, #1209
நைலோன் கயிறொன்றில் முடிந்து இறுக்கப்பட்டுள்ள மருத்துவர் முடிச்சு.

மருத்துவர் முடிச்சு (Surgeon's knot) என்பது பாய்ச்சுருக்கு முடிச்சுக்கு (reef knot) எளிமையான திருத்தம் செய்து உருவாக்கப்பட்டது. இதில் முதல் தடம் போடும்போது கூடுதலாக இன்னொரு முறுக்குச் சேர்க்கப்படுவதன்மூலம் இரட்டை நுனி முடிச்சு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் உராய்வு கூடுதலாக்கப்பட்டு முடிச்சின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. வெட்டுமிடங்களில் தையல் போடும்போது கூடுதலாக இடுவை தேவைப்பட்டால், அறுவை மருத்துவர்கள் இம் முடிச்சைப் பயன்படுத்துவர். இதனாலேயே இம் முடிச்சுக்கு இப்பெயர் ஏற்பட்டது. மருத்துவத்தில் மட்டுமன்றி வீச்சுத் தூண்டில் மீன்பிடித்தலிலும் இந்த முடிச்சுப் பயன்படுகின்றது.

"மருத்துவர் முடிச்சு" ஒரு தொடுப்பு முடிச்சாகவும் பயன்படும் என்பதால் இதனை ஒரு [[தொடுப்பு (முடிச்சு)|தொடுப்பு முடிச்சாகச் சிலர் வகைப்படுத்துகின்றனர். அணிகலன்களின் உற்பத்தியில் இதனைத் தொடுப்பு முடிச்சாகப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவர்_முடிச்சு&oldid=2742671" இருந்து மீள்விக்கப்பட்டது