மருத்துவர் பாயல் தடுவா தற்கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாயல் தடுவா தற்கொலை (Suicide of Payal Tadvi) என்பது மகாராஸ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் அமைந்துள்ள டொப்பிவாலா மருத்துவக்கல்லூரில் இரண்டாம ஆண்டு படித்துவந்த பாயல் தடுவா எனற மருத்துவர் சாதி ரீதியான அடக்குமுறையினால் தற்கொலைசெய்து கொண்டது ஆகும். இவருடன் தங்கியிருந்த உயர் இனப் பெண்கள் மூவர் இவரை சாதிரீதியாக அடக்குமுறை செய்ததால் இவர் 22 மே 2019 அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[1]

பின்னணி[தொகு]

இவர் மகாராஸ்டிரா மாநிலத்தில் வாழும் பில் எனப்படும் பழங்குடி இனமக்களிலேயே முதன் முதலில் மருத்துவருக்கு படித்த முதல் பெண் ஆவார். இவர் பெண்களுக்கான முக்கியமான மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல் என்ற படிப்பைப் படித்துவந்தார்.

இடைநீக்கம்[தொகு]

இவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மூன்று மருத்துவ மாணவிகள் பக்தி மெஹாரே, அன்கிதா கன்டேல்வால், மற்றும் ஹேமா அகுஷா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு இவர்களின் மருத்துவ உரிமம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]