உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவம்சார் உரைப்படியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவம்சார் உரைப்படியாக்கம் (Medical Transcription) என்பது, ஒரு சுகாதார துணைத் துறையாகும். இது மருத்துவர்கள் மற்றும்/அல்லது பிற நலம்பேணல் துறையினர் கூறும் குரல்-பதிவு அறிக்கைகளை உரை வடிவத்திற்கு மாற்றுவதைக் கையாளுகிறது.

வரலாறு[தொகு]

உரைப்படியாக்கத்தின் பரிணாமம் 1960கள் வரை பின்னோக்கிச் செல்கிறது. இந்த வழிமுறை உற்பத்தித்துறை நிகழ்முறையில் உதவி செய்யும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டதாகும். இந்த நிகழ்முறையில் 1975 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதல் உரைப்படியாக்கம் உற்பத்தி ஆதார திட்டமிடல் (Manufacturing Resource Planning) ஆகும். இதனைத் தொடர்ந்து உற்பத்தி ஆதார திட்டமிடல் 2 என்னும் இன்னொரு மேம்பட்ட பதிப்பு வந்தது. ஆனால் இவை எதுவும் மருத்துவம்சார் உரைப்படியாக்கத்தில் அனுகூலத்தைக் கொண்டுவரவில்லை.

ஆயினும், கையாலடிக்கும் தட்டச்சுப்பொறிகளில் இருந்து மின் தட்டச்சுப்பொறிகளாகவும் பின் சொற்செயலிகளாகவும் பின் கணினிகளாகவும், நெகிழி வட்டுக்கள் ஆகவும் மற்றும் காந்தப் பட்டிகளில் இருந்து நாடாப்பேழைகள் மற்றும் எண்மியப் பதிதட்டுகளாகவும் உரைப்படியாக்கச் சாதனங்கள் படிப்படியான மாற்றம் கண்டுள்ளன. இன்று, தொடர் பேச்சறிதல் (Continuous Speech Recognition) என்றும் அழைக்கப்படும் பேச்சறிதல் (Speesh Recognition) அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் பேச்சறிதல் முழுமையாக மருத்துவம்சார் உரைப்படியாக்கத்தை இடம்பெயர்ப்பதும் உண்டு. இயல்பு-மொழிச் செயலி (Natural Language Processor) “தன்னியக்க” உரைப்படியாக்கத்தை இன்னுமொரு படி முன்னே எடுத்துச் செல்கிறது. இது பேச்சறிதல் மட்டும் வழங்க முடியாத (மருத்துவம்சார் உரைப்படியாக்குனர்கள் வழங்குகின்றனர் எனினும்) பொருள்விளக்கமளித்தல் செயல்பாட்டையும் வழங்குகிறது.

கடந்த காலத்தில், இந்த மருத்துவ அறிக்கைகள் வெகு சுருக்கமாக கையால் எழுதப்பட்ட குறிப்புகளைக் கொண்டிருந்தன. அவை நோயாளியின் கோப்பில் சேர்க்கப்படும். அதனை சிகிச்சைக்கு பொறுப்பான முதன்மை மருத்துவர் பொருள்புரிந்து கொள்வார். இறுதியில், கையெழுத்து குறிப்புகள் அதன்பின் தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கைகள் என இருந்த குழப்பங்களை எல்லாம் நீக்கி ஒன்றுபடுத்தி ஒற்றை நோயாளிக் கோப்பாக ஆக்கப்பட்டது. இந்த கோப்பு மருத்துவ ஆவணங்கள் துறையின் ஆவணப்படுத்தும் உறைகள் கொண்ட அலமாரியில் ஆயிரக்கணக்கான மற்ற நோயாளிகளின் ஆவணங்களுடன் சேர்த்து காகித வடிவில் பாதுகாக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட நோயாளியின் ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டிய தேவை எப்போதெல்லாம் எழுகிறதோ, அப்போது எல்லாம் அந்த கோப்பு அலமாரியின் உறையில் இருந்து எடுக்கப்பட்டு கோரும் மருத்துவருக்கு வழங்கப்படும். மனிதரால் கையாளப்படும் இந்த நிகழ்முறையை மேம்படுத்த, பல மருத்துவ ஆவணங்களும் கார்பன் நகல் கொண்டு இரண்டோ அல்லது மூன்றோ பிரதியெடுத்துக் கொள்ளப்பட்டன.

சமீப வருடங்களில், மருத்துவ ஆவணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாறியுள்ளன. இன்னும் பல மருத்துவர்களும் மருத்துவமனைகளும் காகித ஆவணங்களைத் தான் பராமரிக்கின்றனர் எனும்போதிலும், மின்னணு ஆவணங்களுக்கு மாறும் ஒரு நிகழ்வு இயக்கத்தில் இருக்கிறது. கோப்பக அலமாரிகள் எல்லாம் சக்திவாய்ந்த வழங்கன் கணினிகளுடன் இணைப்பு கொண்டுள்ள மேஜைக் கணினிகளுக்கு வழிவிட்டு அகன்று விட்டன. நோயாளிகளின் ஆவணங்கள் பரிசீலிக்கப்படுவதும் காப்பகத்தில் சேமிக்கப்படுவதும் எண்மருவிமுறையில் நிகழ்கிறது. நோயாளி விவரங்களை ஆய்வு செய்ய அதிகாரமுற்ற எந்த மருத்துவரும் உடனடியாக தொலைநிலை வழியில் அணுகுவதற்கு இந்த எண்மருவி வடிவமைப்பு வழிவகை செய்கிறது. அறிக்கைகள் மின்னணு முறையில் சேகரிக்கப்பட்டு தேவை எழும்போது தெரிவு செய்து அச்சிடப்படுகின்றன. பல மருத்துவம்சார் இடைப்படியாக்க நிபுணர்களும் இப்போது மின்னணு குறிப்புதவிகளுடனான தனிநபர் கணினிகளைப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் இணையத்தை இணைய ஆதாரங்களுக்காக மட்டுமன்றி தொழில்முறை இயங்குதளமாகவும் பயன்படுத்துகின்றனர். இன்று பல ஆரோக்கிய சேவையாளர்களும் கையடக்க கணினி அனுகூலங்களை அனுபவிக்கின்றனர். உரைவாசிப்புக்கு அவற்றில் இருக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

சுருக்கம்[தொகு]

நோயாளிக்கு உரிய, மிக சமீபத்திய, ரகசிய விவரங்கள் ஒரு மருத்துவம்சார் உரைப்படியாக்குநர் (MT) மூலம் எழுத்துவடிவ உரை ஆவணமாக மாற்றப்படுகிறது. இந்த உரை அச்செடுத்து நோயாளியின் ஆவணப் பதிவேட்டில் ஒட்டி வைக்கப்படலாம் மற்றும்/அல்லது அதன் மின்னணு வடிவத்தில் மட்டும் பராமரிக்கப்படலாம். மருத்துவம்சார் உரைப்படியாக்கம் செய்பவர்கள் ஒரு மருத்துவமனையில் ஊழியர்களாக இருக்கலாம் அல்லது வீட்டில் இருந்து கொண்டு மருத்துவமனையின் தொலைவழி ஊழியர்களாக பணியாற்றும் ம.உ. பணியாளர்களாக இருக்கலாம். ஒப்பந்த அடிப்படையில் ஒரு மருத்துவமனை, மருத்துவர் குழு அல்லது பிற ஆரோக்கிய சேவை வழங்குநருக்கு இன்னொரு தொலைதூர இடத்தில் அமர்ந்து ஆற்றப்படும் ஒப்பந்த சேவைக்கு தொலைவழி ஊழியர்களாக அல்லது தனிநபர் ஒப்பந்ததாரர்களாக சேவையாற்றும் ம.உ.க்களாக இருக்கலாம்; அல்லது பணிநிகழ்விடத்திலோ அல்லது ஊழியர்களாய் அல்லது ஒப்பந்ததாரர்களாய் தொலைவழியிலோ சேவை வழங்குநர்களுக்காக (மருத்துவர்கள் அல்லது அவர்களின் குழுக்கள்) நேரடியாகப் பணியாற்றும் ம.உ.க்களாக இருக்கலாம். மருத்துவமனை நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அதனுடன் இணைந்த காகித ஆவணங்களின் அளவைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகள் பெரும்பாலும் மருத்துவ ஆவணங்களை மின்னணு வடிவத்தில் சேமிப்பதையே விரும்புகின்றன. நோயாளியின் அன்றைய தேதி வரையான பராமரிப்பு, முந்தைய அல்லது தற்போதைய மருந்துவகைகள் பற்றிய குறிப்பு, ஒவ்வாமைகள் பற்றிய குறிப்பு ஆகிய விடயங்கள் பின்னாள் சேவை வழங்குநர்களுக்கு அணுகல் கிடைக்க அவர்களின் தரவுத்தளத்தின் மின்னணு சேகரிப்பு வழி செய்கிறது. அத்துடன் நோயாளியின் வரலாற்றை பராமரிப்பதன் மூலம் புவியியல் ரீதியாக அமைவிடம் அல்லது தூரம் ஒரு பொருட்டாக அல்லாமல் நோயாளி இருக்குமிடத்தில் அவருக்கு ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் கிடைக்கச் செய்கிறது.

பொதுவாக அழைக்கப்படும் பெயரான உரைப்படி அல்லது “அறிக்கை” என்கிற பெயர், மருத்துவ உரைப்படியாக்க நிகழ்முறையில் இருந்து உருவாக்கப்படும் ஆவணத்தின் (மின்னணு அல்லது காகித வடிவம்) பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஒரு நோயாளியுடன் ஒரு மருத்துவத் துறை நிபுணர் குறிப்பிட்ட சேவைத் தேதியில் சந்திக்கும் சமயத்தில் இந்த உரைப்படியாக்க நிகழ்முறை நிகழ்கிறது. இந்த அறிக்கையை ”மருத்துவ ஆவணம்” என்றே பலரும் அழைக்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட உரைப்படியாக்க அறிக்கை அல்லது ஆவணமும், அதன் குறிப்பிட்ட சேவை தேதியுடன் சேர்த்து, ஒன்றுசேர்க்கப்பட்டு பெரியதொரு நோயாளி ஆவணத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்படுகிறது. இந்த ஆவணம் நோயாளியின் மருத்துவ வரலாறு என பொதுவாக அழைக்கப்படுகிறது.

மருத்துவம்சார் உரைப்படியாக்கம் என்பது உரைப்படியாக்க நிபுணரைச் சுற்றி செயல்படுவதாகும். நிறுவப்பட்ட வகை அல்லது வடிவத்திற்கேற்ற வகையில் ஆவணத்தை தட்டச்சு செய்வது மற்றும் நோயாளியின் ஆரோக்கியம் குறித்த விவரங்கள் குறித்து கூறப்படும் வார்த்தைகளை எளிதில் வாசிக்கத்தக்க எழுத்துவடிவிலான வடிவத்திற்கு மாற்றுவது ஆகியவை இவர்களது அத்தியாவசியப் பணி. அனைத்து பதங்கள் மற்றும் வார்த்தைகளையும் சரியாகப் பிழையின்றி எழுதுவது, மற்றும் (அவ்வப்போது) மருத்துவ வார்த்தைப் பிரயோகத்தை அல்லது உரைவாசிப்புப் பிழைகளைத் திருத்துவது ஆகியவை ம.உ.க்கு அவசியமாகும். ம.உ.க்கள் தட்டச்சு செய்த ஆவணங்களை திருத்துவதோடு, முடித்து விட்ட ஆவணங்களை அச்செடுத்து காலத்தே திருப்பித் தருகின்றனர். அனைத்து படியாக்க அறிக்கைகளும் மருத்துவவியல் அக்கறைகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், மற்றும் நோயாளியின் அந்தரங்கம் பாதுகாப்பது குறித்த சட்டங்கள் ஆகியவற்றுக்கு இணங்கியிருக்க வேண்டும்.

ஒரு மருத்துவருக்கு அல்லது மருத்துவர் குழுவுக்கு நேரடியாய் படியாக்கம் செய்யும்போது, அந்த மருத்துவர்(களின்) பயிற்சி நிபுணத்துவம் சார்ந்த குறிப்பிட்ட அறிக்கை வடிவமைப்புகளும் வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் வரலாறு, உடல் ஆய்வுகள் அல்லது ஆலோசனைகள் தான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில தனியார் குடும்ப மருத்துவர்கள் ஒரு மருத்துவம்சார் உரைப்படியாக்க பணியாளரைப் பயன்படுத்துவதில்லை. நோயாளி பற்றிய குறிப்புகளை கையெழுத்து வடிவத்தில் பராமரித்துக் கொள்கின்றனர். ஆயினும் எல்லா குடும்ப மருத்துவர்களும் அப்படி இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.

இன்று, பெரும் எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள், குரல் அல்லது பேச்சறிதல் என்னும் உரைப்படியாக்க வழிமுறையைப் பயன்படுத்தி, எண்மருவி குரல் கோப்புகளாக தங்கள் உரைவாசிப்பை அனுப்பி வருகின்றனர். பேச்சறிதல் என்பது இன்னும் அரும்புநிலையில் தான் இருந்து வருவதால், பெரும்பகுதி மொழிபெயர்ப்பில் இழந்து விடுவதாய் இருக்கிறது. வாசிப்பவர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்தும் முன்னதாக, அவர்கள் பேசும் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் அந்த நிரலைப் பயிற்றுவிக்க வேண்டும். வாசிப்பு தரவுத்தள வார்த்தைகளுடனான ஒப்பீட்டில் புரிந்துகொள்ளப்படுகிறது. பேசும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் அந்த நிரல் தொடர்ந்து “கற்றுக் கொள்கிறது.”

சரியாக பேசத் தெரியாமலிருப்பது, மற்றும் கனமான வெளிநாட்டு உச்சரிப்பை பயன்படுத்துவது, முழுங்கிப் பேசுவது இவையெல்லாம் இந்த நிகழ்முறையில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இத்தகைய ஒரு அறிக்கையை ஒரு ம.உ. பணியாளர் புரிந்துகொள்ள முடியாததென “குறி”யிட்டு வைக்கலாம், ஆனால் பேச்சறியும் மென்பொருள் புரிந்துகொள்ளமுடியாத வார்த்தைகளையும் “கற்றுக்கொண்ட” மொழியின் இருக்கும் தரவுத்தளத்தில் உள்ள வார்த்தைகள் கொண்டு படியாக்கம் செய்து விடுகிறது. விளைவு பெரும்பாலும் தொலைந்து போன உரையாக இருக்கும். ஒரு மோசமான அறிக்கையை நிராகரித்து அதனை ஒரு தரமான வாசிப்புக்கு திருப்பி அனுப்பும் வகையில் ஒரு வரம்புநிலையை அமைக்கலாம் என்றாலும் இந்த அமைவுகள் எல்லாம் தன்னிச்சையானவை. ஒரு அமைவு செய்யப்பட்ட சதவீத விகிதத்திற்கு கீழிருந்தால், தவறான படியாக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுகிறது. ஒரேசமயத்தில் ம.உ.வும் கேட்கிறார், படிக்கிறார், சரியான பதிப்பைத் “திருத்து”கிறார். இந்த நிகழ்முறையில் ஒவ்வொரு வார்த்தையும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த வேலையில் செலவிடப்படும் நேரம் இதன் நேரமிச்ச ஆதாயங்களை இல்லாது செய்துவிடுகிறது என்பது தான் இந்த தொழில்நுட்பத்தின் குறைபாடாக இருக்கிறது. பேச்சறி தரம் அற்புதம் என்பதில் இருந்து பரிதாபம் என்பது வரை வேறுபடலாம். அறிக்கையில் இருந்து மொத்த வார்த்தைகளும் வாக்கியங்களும் கூட தொலைந்து போகலாம். எதிர்மறை சுருக்கங்களையும் “not" என்கிற வார்த்தையையும் கூட மொத்தமாய் விட்டுவிடுவது என்பதும் அவ்வப்போது நிகழ்கிறது. இந்த குறைபாடுகள் எல்லாம் நடப்பு தொழில்நுட்பம் நோயாளி பாதுகாப்பில் எதிர்மறையான விளைவுகளைக் கொணரலாம் என்கிற கவலைகளைத் தூண்டுகின்றன.

பேச்சறி மென்பொருள் ம.உ. கட்டண விகிதங்களில் கீழ்நோக்கிய திருத்தங்கள் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் மொத்த செலவுகளில் முடிந்த அளவு சேமிக்க முயல்வார் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆயினும் உற்பத்தித்திறனைக் கூட்டி ஆதாயத்தைப் பெருக்க எண்ணும் வழங்குநர் ம.உ.க்களுக்கு தீங்கிழைக்கின்றனர். ம.உ.க்களுக்கு புதிய திருத்த திறன்கள் அவசியமாயிருக்கிற சமயத்தில், பேச்சறி துறையில் அளிக்கப்படும் ஊதியங்கள் குறிப்பிடத்தக்க அளவு சரிந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இத்துறையில் உற்பத்தித்திறன் அதிகரிப்பு சராசரியாக 30%-50% வரம்பில் இருப்பதாக நம்பிக்கையான துறை தகவல்கள் தெரிவிக்கின்றன; ஆயினும் இது வழிமுறையில் அடங்கிய பல்வேறு பிற காரணிகளையும் சார்ந்திருக்கும் ஒன்றாகும்.

செயல்பாட்டு ரீதியாக, பேச்சறி தொழில்நுட்பம் (SRT) ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும். மேக்ரோக்கள் போன்ற நிரலாக்க கருவிகள் கொண்டு நேரத்தை சேமிக்கும் ம.உ.வின் முந்தைய திறனை புதிய மென்பொருள் இடம்பெயர்த்து விடுகிறது. தொலைநிலை ம.உ. பணியாளர்கள் தங்களது பாணி தெரிவில் ஒருவருக்கொருவர் எதிர்திசையில் செல்ல தலைப்பட்டால், அவர்களும் பேச்சறி பொறியும் கட்டுப்பாடு மீதான ஒரு மோதலுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடலாம். ம.உ. சுதந்திரம் பேச்சறி அனுகூலங்களைக் கடந்து செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்வது பேச்சறி நுட்பப் பிரிவு மேலாளரின் பொறுப்பாகும்.

ஒரு மருத்துவர் நோயாளியின் ஆவணத்துக்கு அணுகல் கொண்ட மற்ற ஆரோக்கிய சேவை நிபுணர்களுடன் தெளிவுற தொடர்பு கொள்வதற்கும், நோயாளியின் ஆரோக்கியம் மற்றும் அவர்களது கடந்த கால/தற்போதைய சிகிச்சையின் நிலை குறித்து அவர்களுக்கு ஆலோசனை கூறவும், பராமரிப்பின் தொடர்ச்சியை உறுதியளிப்பதற்கும் முதன்மையான இயங்குமுறையாக இப்போதும் மருத்துவம்சார் உரைப்படியாக்கம் தான் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் சட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, ஒரு மருத்துவ மசோதா தாக்கல் செய்வதற்கோ அல்லது தொழிலாளர் இழப்பீடு அல்லது காப்பீட்டு ஆதாயங்களுக்கு விண்ணப்பிப்பதற்கோ ஒரு எழுத்துமூலமான அறிக்கை (IME) அவசியமாகி இருக்கிறது.

ஒரு தொழிலாக[தொகு]

மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட சூழலில் ஒரு மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் பணி புரிந்து கொண்டிருக்கிறார்.

மருத்துவம்சார் உரைப்படியாக்கம் செய்யும் ஒரு தனிநபர் ஒரு மருத்துவம்சார் உரைப்படியாக்க பணியாளர் (மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்) அல்லது ம.உ. (MT) என்று அழைக்கப்படுகிறார். ஒரு நோயாளியின் மருத்துவ ஆவணங்களை கையெழுத்து வடிவத்தைக் காட்டிலும் தட்டச்சு செய்த வடிவத்திற்கு மாற்றுவது ஒரு ம.உ. பணியாளரின் பொறுப்பாகவே இருக்கிறது. கையெழுத்து வடிவத்தில் மற்ற ஆரோக்கிய சேவை நிபுணர்கள் தவறாகப் பொருள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. படியாக்க சாதனம் என்பது உரைப்படியாக்கம் செய்ய பயன்படும் மின்னணு சாதனத்தைக் குறிப்பிடுகிறது. 1990களின் பிற்பகுதியில், மருத்துவ மொழி சிறப்பு நிபுணர்கள் அல்லது ஆரோக்கிய விவர மேலாண்மை (HIM) துணைநிபுணர்கள் போன்ற பட்டங்களைக் கொண்டும் ம.உ.க்கள் அழைக்கப்பட்டனர்.

ஒரு மருத்துவம்சார் உரைப்படியாக்குனர் ஆவதற்கான ”முறையான” கல்வித் தகுதிகள் என்று எதுவும் இல்லை. கல்வியும் பயிற்சியும் பாரம்பரிய கல்வி முறையிலோ, சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்புகள் மூலமோ, தொலைநிலைக் கல்வி வழியிலோ, மற்றும்/அல்லது சில மருத்துவமனைகளில் வழங்கப்படும் வேலை மூலமான பயிற்சி வழியிலோ அளிக்கப்படுகின்றன. ஆயினும் சில நாடுகள் இப்போது 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறப்பு படிப்பாக ம.உ. பயிற்சி படித்தவர்களை பணியமர்த்துகின்றன. ம.உ. துறையில் பணியாற்றுவது மருத்துவ பதப் பிரயோகம் மற்றும் திருத்தத்தில் தேர்ச்சிக்கு இட்டுச் செல்வதோடு, ஒரே சமயத்தில் கேட்டுக் கொண்டே தட்டச்சு செய்வதற்கான ம.உ. திறன், ம.உ. எந்திரத்தில் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல், மற்றும் வாசிப்புகளை இயக்குவதற்கும் சரிசெய்வதற்கும் தக்க வகையில் கால் மிதிவிசைகளைப் பயன்படுத்துவது மற்றும் இவை எல்லாவற்றையுமே சீராக செயல்பட்டுக் கொண்டே பராமரிப்பது ஆகிய திறன்களை அளிக்கிறது.

மருத்துவம்சார் உரைப்படியாக்கத்துக்குக் கட்டாயமான பதிவோ அல்லது சான்றிதழோ கட்டாயமில்லை. எனினும் தனிநபர் ம.உ.க்கள் தனிப்பட்ட அல்லது தொழில்முறை காரணங்களுக்காக அவசியப்பட்டால் பதிவு/சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு ம.உ. பயிற்சித் திட்டத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருந்தால் அது பட்டய ம.உ. நிபுணர் (CMT) பட்டத்தைப் பயன்படுத்துவதற்கு போதுமான தகுதி அல்ல. ப.ம.உ. பட்டம் முழுமையாய் ஆரோக்கிய பராமரிப்பு ஆவணப்படுத்தல் மற்றும் ஒருங்கமைவுக்கான கழகம் (AHDI) மூலம் நடத்தப்படும் ஒரு சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிட்டும். இந்த அமைப்பு முன்னர் அமெரிக்க மருத்துவம்சார் உரைப்படியாக்க கழகம் (AAMT) என இருந்தது. பதிவுசெய்த மருத்துவ உரைப்படியாக்குனர் (RMT) என்னும் சான்றிதழ் பட்டத்தையும் இக்கழகம் வழங்குகிறது. இக்கழக வரையறைப்படி பதிவு.ம.உ. ஒரு ஆரம்ப நிலை பட்டம், பட்டய ம.உ. உயர் நிலைப் பட்டம் ஆகும். அங்கீகாரம் பெற்ற ம.உ. பள்ளிகளின்[1] பட்டியல் ஒன்றையும் இக்கழகம் பராமரிக்கிறது.

எந்த பயிற்சி திட்டம் ஒரு ம.உ. பணியாளரை துறைக்கு[2] மிகச் சரியாக தயாரிப்பு செய்கிறது என்பது பெருமளவு விவாதத்திற்குரிய ஒன்றாகும். ஒருவர் மருத்துவ உரைப்படியாக்கத்தை இணைய வழி படித்திருந்தாலும் சரி, சமுதாயக் கல்லூரியில் படித்திருந்தாலும் சரி, உயர்நிலைப் பள்ளி இரவுப் படிப்பாய் படித்திருந்தாலும் சரி, அல்லது ஒரு மருத்துவரின் அலுவலகம் அல்லது மருத்துவமனையில் வேலை மூலமான பயிற்சியாக படித்திருந்தாலும் சரி, ஒரு ம.உ. அறிவுத் திறன்வாய்த்தவராய் இருந்தால் அவர் மிகுந்த மரியாதை பெற்றுத் திகழ்கிறார். பல்தரப்பட்ட ஆவண வேலைகளை துல்லியமாகவும் சீராகவும் படியாக்கம் செய்கிற, அதனைத் தட்டச்சு செய்து திருப்பியளிக்கும் காலத்திற்குள் (TAT) அறிக்கைகளைத் திருப்பியளிக்கிற ம.உ.க்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஒரு சேவை வழங்குநரால் நிர்ணயிக்கப்படும் அல்லது ம.உ. பணியாளரால் ஒத்துக் கொள்ளப்படும் திருப்பியளிக்கும் காலம் பொருத்தமானவையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் நோயாளியின் ஆவணத்திற்கு காலத்தே ஆவணத்தை திருப்பியளிக்க அவசியப்படும் தேவை இருப்பதுடனும் இணங்கியிருக்க வேண்டும்.

மார்ச் 7, 2006 நிலவரப் படி, ம.உ. தொழில் அமெரிக்காவின் தொழிலாளர் துறை பணிப்பயிற்சி உதவி பெறுவதற்கு தகுதியுடையதாய் இருக்கிறது. இது கடும் பராமரிப்பு வசதி (மருத்துவமனை) வேலையில் கவனம் குவிக்கும் 2 ஆண்டு பயிற்சித் திட்டமாகும். 2004 மே மாதத்தில், வெர்மான்ட்டில் குடியிருப்போருக்கான ஒரு முன்னோடி பயிற்சித் திட்டம் துவக்கப்பட்டது. இதில் 20 வகுப்பறை இடங்களுக்கு 737 பேர் விண்ணப்பித்தனர். இதன் நோக்கம் பயிற்சி பெறுபவர்களுக்கு குறுகிய காலத்தில் ம.உ.க்களுக்கான பயிற்சியை வழங்குவதாகும்.

கல்விரீதியான அவசியப்பாடுகள், திறன்கள் மற்றும் செயல்திறம்[தொகு]

 • மருத்துவ வார்த்தைப் பிரயோகங்கள் குறித்த அறிவு.
 • சராசரிக்கும் கூடுதலான எழுத்து, இலக்கணம், தகவல்தொடர்பு மற்றும் நினைவுகூரும் திறன்கள்.
 • எண்களை துல்லியமாக அடுக்குவதற்கு, சரிபார்ப்பதற்கு, எண்ணுவதற்கு, மற்றும் சோதிப்பதற்கான திறன்.
 • அடிப்படை அலுவலக சாதனங்கள்/கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் செயல்பாட்டில் திறன் கொண்டிருப்பது, கண்/கை/கால் ஒருங்கிணைந்து செயலாற்றும் திறன்.
 • வாய்வழி மற்றும் எழுத்துமூலமான உத்தரவுகளைப் பின்பற்றும் திறன்.
 • ஆவணப் பராமரிப்பு திறன் அல்லது செயல்திறம்.
 • தட்டச்சு திறனில் நல்ல அல்லது சராசரிக்கு மேலான திறன்.

அடிப்படை மருத்துவம்சார் உரைப்படியாக்க அறிவு, திறன்கள் மற்றும் திறமைகள்[தொகு]

 • அடிப்படையான வார்த்தைகள் முதல் முன்னேறிய வார்த்தைகள் வரை மருத்துவ வார்த்தைப் பிரயோகங்கள் குறித்த அறிவு.
 • உடலியல் மற்றும் பகுப்பியல் குறித்த அறிவு.
 • நோய் நிகழ்முறைகள் குறித்த அறிவு.
 • மருத்துவ பாணி மற்றும் இலக்கணம் குறித்த அறிவு.
 • சராசரி மொழித் தொடர்பு திறன்கள்.
 • சராசரிக்கு மேலான நினைவுத் திறன்கள்.
 • எண்களை துல்லியமாக அடுக்குவதற்கு, சரிபார்ப்பதற்கு, எண்ணுவதற்கு, மற்றும் சோதிப்பதற்கான திறன்.
 • அடிப்படை அலுவலக சாதனங்கள்/கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் செயல்பாட்டில் நிரூபணமுற்ற திறன்.
 • வாய்வழி மற்றும் எழுத்துமூலமான உத்தரவுகளைப் பின்பற்றும் திறன்.
 • ஆவணப் பராமரிப்பு திறன் அல்லது செயல்திறம்.
 • சராசரிக்கு மேலான தட்டச்சு திறன்.
 • இலக்கணத்தை முறையாக உபயோகிக்கும் அறிவு மற்றும் பயன்பாடு.
 • சரியான உச்சரிப்பு மற்றும் தலைப்பெழுத்து விதிகளை உபயோகிக்கும் அறிவு மற்றும் பயன்பாடு.
 • பன்முக அறிக்கை வகைகள் மற்றும் பன்முக நிபுணத்துவ பிரிவுவகைகளில் நிரூபணமான ம.உ. செயல்திறம்.

கடமைகள் மற்றும் பொறுப்புகள்[தொகு]

 • பெயர், மருத்துவ ஆவணம் அல்லது சமூக பாதுகாப்பு எண் போன்ற நோயாளியை அடையாளம் காணத்தக்க விவரங்களை துல்லியமாய் படியாக்கம் செய்தல்.
 • சரியான உச்சரிப்பு எழுத்து, இலக்கணம், மற்றும் நிறுத்தற்குறியைப் பயன்படுத்தி படியாக்கம் செய்தல், மற்றும் சீரற்று இருப்பவற்றைத் திருத்துதல்.
 • மருத்துவ நடைமுறைகள் மற்றும் பதப் பிரயோகங்களுக்கு குறிப்புதவிகளைப் பராமரித்தல்/ஆலோசித்தல்.
 • ஒரு படியாக்க பதிவேட்டை பராமரித்தல்.
 • அயல்நாட்டு ம.உ. பணியாளர்கள் அடுக்கலாம், நகலெடுக்கலாம், தயாரிக்கலாம், ஒன்றுபடுத்தலாம், மற்றும் ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை கோப்புகளாக்கலாம். (ஆயினும் அமெரிக்காவில் வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை கோப்புகளாக்குவது பெரும்பாலும் மருத்துவமனைகள் அல்லது மருத்துவ செயலர்கள் அலுவலகங்களில் உள்ள மருத்துவ ஆவணப்பதிவுகள் தொழில்நுட்பம் பயின்றவர்களிடம் அளிக்கப்படுகிறது).
 • படியாக்கம் செய்த அறிக்கைகளை விநியோகித்தல் மற்றும் வாசிப்பு நாடாக்களை சேகரித்தல்.
 • மருத்துவரின் விட்டுப்போன மற்றும்/அல்லது தாமதப்பட்ட வாசிப்பை பின்தொடர்தல்.
 • தர உறுதிப்பாட்டு பரிசோதனையை மேற்கொள்ளுதல்.
 • பொருத்தமான புள்ளிவிவர தரவுகளை சேகரிக்கலாம், அட்டவணைப்படுத்தலாம், மற்றும் அறிக்கைகளை உருவாக்கலாம் (அமெரிக்காவில், பொதுவாக ம.உ. மேற்பார்வையாளர் செய்கிறார்).

மருத்துவம்சார் உரைப்படியாக்க நிகழ்முறை[தொகு]

நோயாளி ஒரு மருத்துவரை சந்திக்கும் போது, அவருடன் நேரம் செலவிடும் மருத்துவர் அவரது கடந்த கால வரலாறு மற்றும்/அல்லது பிரச்சினைகள் உள்பட அவரது மருத்துவ பிரச்சினைகளை விவாதிக்கிறார். உடல் ஆய்வினை மேற்கொள்ளும் மருத்துவர் பல்வேறு ஆய்வக அல்லது நோயறி சோதனைகளுக்கு கோரலாம்; அதன்பின் நோயறிதல் முடிவை அல்லது பல்வேறுபட்ட நோயறிதல்களை மேற்கொள்வார். பின் நோயாளிக்கான சிகிச்சைக்கான ஒரு திட்டத்தின் மீது முடிவு செய்கிறார். அது நோயாளியிடம் விவாதிக்கப்படுகிறது. விளக்கிக் கூறப்படுகிறது. போதிய வழிகாட்டல்கள் வழங்கப்படுகிறது. நோயாளி அலுவலகத்தை விட்டு அகன்றதும், நோயாளியுடனான சந்திப்பு குறித்த தகவலை பதிவு செய்ய மருத்துவர் ஒரு குரல்-பதிவு சாதனத்தைப் பயன்படுத்துகிறார். இந்த தகவல் ஒரு கையடக்க பதிவுக் கருவி கொண்டு பதிவு செய்யப்படுகிறது. அல்லது ஒரு வழக்கமான தொலைபேசி கொண்டு மருத்துவமனை அல்லது படியாக்க சேவை அலுவலகத்தில் அமைந்துள்ள ஒரு மைய வழங்கன் கணினிக்கு அழைத்து பதிவு செய்யப்படுகிறது. இந்த அறிக்கை அதன்பின் ஒரு ம.உ. பணியாளரால் அணுகப்படுகிறது. ஒரு குரல் கோப்பாக அல்லது கருவிப் பதிவாக அதைப் பெறும் அவர் வாசிப்பைச் செவிமடுத்து அதனை தேவையான வடிவமைப்பில் மருத்துவ ஆவணத்திற்காக படியாக்கம் செய்கிறார். இதில் மருத்துவ ஆவணம் ஒரு சட்டப்பூர்வ ஆவணமாக கருதப்படுகிறது. அடுத்த முறை நோயாளி மருத்துவரைச் சென்று பார்க்கும் போது, மருத்துவர் அந்த மருத்துவ ஆவணம் அல்லது நோயாளின் மொத்த வரைபடத்தையும் வரவழைத்துப் பார்ப்பார். இவை முந்தைய சந்திப்புகளின் போதான அனைத்து அறிக்கைகளையும் கொண்டிருக்கும். மருத்துவ ஆவணத்தை மட்டும் பார்த்துக் கூட நோயாளிக்கான மருந்துகளை மீண்டும் நிரப்பித் தர மருத்துவரால் முடியும் என்றாலும், பொதுவாக நோயாளியிடம் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்பதைச் சோதிக்காமல் மருந்து பரிந்துரைகளை நிரப்பித் தருவதை மருத்துவர்கள் விரும்புவதில்லை.

மருத்துவம்சார் உரைப்படியாக்க ஆவணம் முறையாக வடிவமைக்கப்பட்டதாக, திருத்தப்பட்டதாக, மறுஆய்வு செய்யப்பட்டதாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு ம.உ. பணியாளர் எதிர்பாராதவிதமாய் ஒரு தவறான மருந்தை அல்லது தவறான நோயறிதலை தட்டச்சு செய்து விட்டிருந்து, மருத்துவர் (அல்லது அவர் பொறுப்பில் நியமித்தவர்) அந்த ஆவணம் சரியாக உருவாகியிருக்கிறதா என்பதை மறுஆய்வு செய்யாது விட்டிருந்தால், அது நோயாளிக்கு அபாயமானதாகி விடும். படியாக்கம் செய்த வாசிப்பு சரியாக துல்லியமாக இருக்கிறது என்பதை உறுதி செய்வதில் மருத்துவர், ம.உ. பணியாளர் இருவருமே ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகின்றனர். மருத்துவர் குறிப்பாக மருந்துகளை அல்லது நோய் மற்றும் நிலைமைகளின் விவரத்தை வாசிப்பு செய்யும்போது மெதுவாகவும் துல்லியமாகவும் பேச வேண்டும். அதேபோல் ம.உ. பணியாளர் துல்லியமாய் செவிமடுக்க வேண்டும். மருத்துவ அறிவு படைத்திருக்க வேண்டும். நல்ல எழுத்து வாசிப்பு அறிவையும் சந்தேகம் எழுகையில் குறிப்புதவிகளைச் சரிபார்த்துக் கொள்ளும் திறனும் படைத்திருக்க வேண்டும்.

ஆயினும், சில மருத்துவர்கள் படியாக்கம் செய்த அறிக்கைகள் துல்லியமாய் இருக்கிறதா என மறுஆய்வு செய்வதில்லை. கம்ப்யூட்டர் அறிக்கை “வாசிப்பு செய்யப்பட்டிருக்கிறது ஆனால் வாசிக்கப்படவில்லை” என்ற ஒரு கைதுறப்பு அறிக்கையுடனான மின்னணு கையொப்பத்தை இணைக்கிறது. இந்த மின்னணு கையொப்பம் சட்டப்பூர்வ அர்த்தத்தில் உடனடியாய் ஏற்கத்தக்கதாய் இருக்கிறது. ம.உ. பணியாளர் வார்த்தை மாறாமல் (சொன்னதை அப்படியே) மாற்றங்களின்றி படியாக்கம் செய்யும் பொறுப்புடையவராவார். ஆனாலும் அவருக்கு அறிக்கை சீரற்று இருப்பதாய் குறியிடும் தெரிவு இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், மருத்துவர்கள் தெளிவாகப் பேசுவதில்லை, அல்லது குரல் கோப்புகள் சிதறுண்டு இருக்கும். துரதிர்ஷ்டவசமாக சில மருத்துவர்களுக்கு கால அவகாசம் குறைவாக இருக்கும் என்பதால் அவர்கள் அறிக்கைகளை துரிதமாய் வாசிப்பு செய்ய வேண்டியதிருக்கும். இது தவிர, ஏராளமான பிராந்திய அல்லது தேசிய (தவறான) உச்சரிப்பு வகைகளுடனும் ம.உ.பணியாளர் போராட வேண்டியதிருக்கும். சிக்கலான மருத்துவ வார்த்தைகள், மருந்துகள் சரியாக எழுதப்பட்டுள்ளதா, வாசிப்புப் பிழைகள் உள்ளனவா என்பதைக் கண்ணுறுவதும், சந்தேகமிருந்தால் ஒரு அறிக்கையை ”குறி”யிடுவதும் ம.உ. பணியாளருக்கு கட்டாயமானதும் அவரது வேலையில் ஒரு பெரும் பகுதியும் ஆகும். ஒரு அறிக்கையில் “குறி” இடப்பட்டிருந்தால், மருத்துவர் (அல்லது அவர் நியமித்த பொறுப்பு அலுவலர்) முடிந்த அறிக்கையில் இருக்கும் ஒரு காலி புலத்தை நிரப்ப வேண்டும். அதன்பின் தான் அது நிறைவுற்றதாய் கருதப்படும். ஊகங்கள் செய்வதற்கோ, அல்லது ஒரு அறிக்கை படியாக்கத்தில் ’சும்மா எதையேனும் போட்டு நிரப்புதற்கோ’ படியாக்குநர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், மருந்தும் தொடர்ந்து மாறுகிறது. அன்றாடம் புதிய சாதனங்களும், புதிய மருத்துவ கருவிகளும், புதிய மருந்துகளும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவம்சார் உரைப்படியாக்குநர்கள் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதோடு இந்த புதிய வார்த்தைகளைக் காண்பதற்கு விடாமுயற்சியுடன் ஆராய்ச்சியும் செய்ய (துரிதமாக) வேண்டும். ஒரு சரியாக உச்சரிக்கப்பட்ட வார்த்தைக்கு துரிதமாய் பொருத்திப் பார்க்கும் வசதியுடனான மிகச் சமீபத்து நூலகத்திற்கான அணுகலையோ, அல்லது அதனை நினைவகத்திலோ ஒரு படியாக்குநர் கொண்டிருக்க வேண்டும்.

மருத்துவம்சார் உரைப்படியாக்க ஒப்பந்த சேவை அமர்த்தம்[தொகு]

மருத்துவ ஆவணங்களை காப்பகப்படுத்த தேவை பெருகி வந்ததை அடுத்து, மருத்துவ படியாக்க சேவைகளை நாடுகள் ஒப்பந்த சேவையாக அமர்த்தத் துவங்கின. அமெரிக்காவில், ம.உ. துறை வர்த்தகம் ஆண்டிற்கு US$10 to $25 பில்லியன் மதிப்புடையதாய் இருப்பதோடு ஒவ்வொரு ஆண்டும்[மேற்கோள் தேவை] 15 சதவீத வளர்ச்சியைப் பெற்று வருகிறது. வளரும் நாடுகளில் மலிவு உழைப்பு கிட்டுவதாலும், அவர்களது நாணய விகிதங்கள் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் மலிவாக இருப்பதினாலும் உண்டாகும் செலவினக் குறைப்பு அனுகூலம் தான் ஒப்பந்த சேவை அமர்த்தத்திற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

மருத்துவம்சார் உரைப்படியாக்கம் ஒப்பந்த சேவையாய் அமர்த்தப்பட வேண்டுமா என்பது குறித்த உணர்ச்சிமிகுந்த சர்ச்சை நிலவுகிறது. அதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானவையாக உள்ளன:

 1. இப்போது படியாக்குநர்களில் மிகப் பெரும்பான்மையினர் மருத்துவமனைகளை விடவும் தங்களது வீட்டு அலுவலகங்களில் இருந்து தான் பணிபுரிந்து வருகின்றனர். “தேசிய” படியாக்க சேவைகளுக்காக நிகழ்விடம் அல்லாத ஒரு இடத்தில் இருந்து அவர்கள் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் இந்த தேசிய சேவைகள் தான் அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் படியாக்குநர்களுக்கு இந்த வேலையை ஒப்பந்த சேவையாக அமர்த்திக் கொள்ள அதிகமாய் முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு அமெரிக்காவிற்கு வெளியிலான குறைந்த தகுதியுடைய குறைவான ஊதியம் பெறுகிற படியாக்குநர்களுக்கு வேலைகளை ஒப்பந்த சேவையாக அமர்த்திக் கொள்கிற சமயத்தில், மலிவான ஒப்பந்த சேவை வழங்குநர்களிடம் மொத்தமாய் வர்த்தகத்தை இழந்து விடக் கூடாது என்கிற அச்சத்தில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க படியாக்குநர்களையும் மலிவான ஊதியங்களைப் பெற்றுக் கொள்ள இந்த தேசிய சேவைகள் நிர்ப்பந்திக்கலாம். அமெரிக்க படியாக்குநர்கள் மீது திணிக்கப்படும் குறைவான ஊதிய விகிதங்கள் தவிர, அமெரிக்க படியாக்குநர்கள் சுதந்திரமான ஒப்பந்ததாரர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது; இதனால் தேசிய சேவைகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு மற்றும் ஆதாயங்கள் மற்றும் இன்ன பிற சேவைகள் வழங்குவதில் இருந்து நிறுவனங்கள் தப்பித்துக் கொள்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவில் சுகாதார பராமரிப்பு தொடர்பான நிர்வாக செலவுகளைப் பொறுத்த வரையில், தேசிய சேவைகள் கடந்த காலத்தில் உயர்ந்த கல்வித் தகுதிகள் கொண்ட அமெரிக்க படியாக்குநர்கள் மூலம் செய்த போது நிர்ணயித்த அதே விகிதத்திலேயே மருத்துவமனைகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் அந்த வேலையை அமெரிக்காவிற்கு வெளியிலான படியாக்குநர்களுக்கு ஒப்பந்த பணியாக கொடுத்து, மிஞ்சும் தொகையை அதிகரித்த லாபமாக எடுத்துக் கொள்கின்றன.
 2. நோயாளி இருக்கும் ஒரு நாட்டில் இருந்து அந்தரங்கமான அறிக்கைகள் நோயாளியின் அந்தரங்கம் மற்றும் ரகசியத் தன்மை குறித்த சட்டங்கள் பற்றி அறிந்துமிராத ஒரு நாட்டிற்கு செல்வது குறித்த கவலைகளும் இருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உரைப்படியாக்க வேலையை இப்போது ஒப்பந்த சேவைக்கு அளிக்கும் நாடுகளாகவும் பிலிப்பைன்ஸ், இந்தியா, பாகிஸ்தான், கனடா மற்றும் பார்படோஸ்[3] ஆகிய நாடுகள் ஒப்பந்த சேவையை பெறும் நாடுகளாகவும் உள்ளன.
 3. உரைப்படியாக்குநர்களின் தரமும் ஒரு கவலையாக இருக்கிறது. ஒப்பந்த சேவையில் பணியமர்த்தப்படும் பல உரைப்படியாக்குநர்களும் இந்த வேலையை போதுமான துல்லியத்துடன் செய்வதற்கு அவசியமாக இருக்கும் அடிப்படைக் கல்வித் தகுதியையோ, கூடுதலாக தொழில்-சார்ந்த பயிற்சியையோ பெற்றிருப்பதில்லை. ஆங்கிலம் பேசத் தெரிந்த பல வெளிநாட்டு உரைப்படியாக்குநர்களும் அமெரிக்க பேச்சு வெளிப்பாடுகளுடன் பழக்கமுடையவர்களாகவோ மற்றும்/அல்லது அமெரிக்க மருத்துவர்கள் பல சமயங்களில் பயன்படுத்தும் பேச்சுவழக்குகளை அறிந்தவர்களாகவோ இருப்பதில்லை என்பதோடு அமெரிக்க பெயர்கள் மற்றும் இடங்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்காதவர்களாக இருக்கக் கூடும். இந்த சூழ்நிலைகளின் கீழ் நிச்சயமாக ஒரு ம.உ. திருத்துநர் தான் இந்த நாடுகளில் உரைப்படியாக்கம் செய்யப்படும் அனைத்து வேலைகளுக்கும் பொறுப்பானவர்களாய் ஆகிறார். இந்த ஒப்பந்த சேவை உரைப்படியாக்குநர்கள் அமெரிக்காவில் உரைப்படியாக்குநர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒரு சிறுதொகையைத் தான் பெறுகிறார்கள். அத்துடன் அமெரிக்க உரைப்படியாக்குநர்கள் பெறும் ஊதிய விகிதங்களும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஆயினும், சில நிறுவனங்கள், அமெரிக்க உரைப்படியாக்குநர்களின் வேலைத் தரம் மேம்பட்டதாய் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பணியமர்த்திக் கொள்கின்றன.[4]

ஒப்பந்த சேவை பெறும் நாடுகளில், பிலிப்பைன்ஸ் தான் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து வரும் வேலைகளில் பெருகிய அளவை ஈர்க்கும் நாடாக இருக்கிறது. இதன் காரணம், இந்நாட்டில் ஃபிலிபினோ மொழி தவிர, ஏறக்குறைய அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளிலும் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருக்கிறது என்பதோடு ஆங்கில மொழியில் இந்நாட்டில் எழுத்தறிவு விகிதமும் அதிகமாக உள்ளது. அத்துடன் ஒரு சராசரி ஃபிலிபினோவுக்கு மருத்துவ உரைப்படியாக்கத்தில் பயன்படுத்தப்படும் அமெரிக்க சொற்றொடர்கள், பேச்சுவழக்குகள் மற்றும் பிரதேச வழக்கினை புரிந்து கொள்ளும் திறன் நன்கு இருக்கிறது. இது அமெரிக்க உரைப்படியாக்குநர்களுக்கு கவலையளிக்கும் ஒரு அம்சமாய் ஆகியிருக்கிறது.

மருத்துவம்சார் உரைப்படியாக்கத்தின் எதிர்காலம்[தொகு]

தொழில்நுட்ப வளர்ச்சி, பயிற்சி வேலைப்பாய்வு, கட்டுப்பாடுகள் போன்ற பல பங்களிக்கும் காரணிகளின் அடிப்படையில் மருத்துவம்சார் உரைப்படியாக்கத் துறை தொடர்ந்து உருமாற்றத்தைச் சந்திக்கும். நிர்ணயங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் அல்லது தனிநபர் விருப்பங்களின் வழியாக ஆவணப்படுத்தும் பழக்கங்கள் காலப்போக்கில் மாறும் என்பதை மின்னணு நோயாளி ஆவணத்தின் பரிணாமம் விளங்கப்படுத்துகிறது. சமீப காலம் வரையில், மருத்துவம்சார் உரைப்படியாக்குநர்களும் அவர்களது நிறுவனங்களும் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்ணயங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. சட்டத்தை அறியாமலோ அல்லது அதனை மறுக்கும் வகையிலோ, பல உரைப்படியாக்குநர்களும் நிறுவனங்களும் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் துறையில் தங்களது வழக்கமான பாதையிலேயே மாற்றமின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அணுகல் கட்டுப்பாடுகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள், மற்றும் நோயாளி விவரத்துக்கான அணுகலின் தணிக்கைகள் போன்ற குறிப்பிட்ட அவசியப்பாடுகளில் பலவற்றையும் உரைப்படியாக்கத் துறையின் பெரும்பாலான நிறுவனங்களால் பூர்த்தி செய்ய இயலாது என்று பல்வேறு சேவை வழங்குநர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அவசியப்பாடுகளுக்கு இணங்க செயல்படுவது குறித்த அறிவோ அல்லது வள ஆதாரங்களோ இல்லாத நிலையில், துறையில் பல நிறுவனங்களும் தாங்கள் இணக்கமுற்றிருப்பதாகக் கூறிக் கொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமலே வர்த்தகக் கூட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன. பல நிறுவனங்களும் இது குறித்து அறியாமலேயே உள்ளன. மற்றும் சிலர் இந்த மாற்றங்களுக்கு உரைப்படியாக்க உலகம் தகவமைத்துக் கொள்ள முடியாது என்கிற நம்பிக்கையில் தெரிந்தே அவ்வாறு இருக்கின்றனர்.

குறிப்புதவிகள்[தொகு]

 1. Approved Medical Transcription Education Programs பரணிடப்பட்டது 2009-07-18 at the வந்தவழி இயந்திரம், by the Association for Healthcare Documentation Integrity (AHDI)
 2. The MT school wars பரணிடப்பட்டது 2009-08-23 at the வந்தவழி இயந்திரம், by the MT Exchange
 3. "Barbados Looks to Become Medical Transcription Capital". Caribbean Press Releases. 2009-01-28. Government is repositioning Barbados to become the medical transcription capital of the Caribbean. This was disclosed yesterday by Prime Minister, David Thompson, as he revealed plans to boost training in this area and to woo more businesses desirous of setting up additional facilities here.
 4. "White-collar Jobs Once Outside the Global Economy are Heading Overseas". Archived from the original on 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-01-28.

வெளி இணைப்புகள்[தொகு]