மருத்துவத்தில் உலோகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவத்தில் உலோகங்கள் (Metals in medicine) நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை நோக்கங்களுக்காக கரிம அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. உலோகப்புரதங்கள் எனப்படும் நொதிகளில் கனிம உறுப்புகள் கூட துணைக்காரணிகளாக செயல்பட்டு உயிரினங்களின் வாழ்க்கைக்கு அவசியமாக உள்ளன. உலோகங்கள் பற்றாக்குறையாக அல்லது உயர் அளவுகளில் இருக்கின்ற நிலை ஏற்படும்போது, சமநிலை அமைக்கப்படுதல் மற்றும் இயற்கை முறைகள் வழியாக உலோகங்கள் அவற்றினுடைய இயல்பான நிலைக்கு திரும்புகின்றன.

நச்சு உலோகங்கள்[தொகு]

உயிரினங்களில் உலோகங்கள் உயர் அளவில் இருந்தால் அவற்றை நச்சு உலோகங்களாகவும் கருதமுடியும். உட்செலுத்துதல் அல்லது தவறான வளர்சிதை மாற்ற வழிமுறைகளில் உலோகங்கள் உயர் அளவை எட்டுவதன் மூலமாக உலோக நச்சு ஏற்படலாம். புகையிலையில் உள்ள காட்மியம், விவசாயத்தில் பயன்படும் ஆர்சனிக் மற்றும் காட்டுத்தீ மற்றும் எரிமலை வெடிப்புகளில் காணப்படும் பாதரசம் உள்ளிட்ட உலோகங்கள் உலோக நச்சுக்கு ஆதார மூலங்களாகும். பல உலோகநச்சுகளை தடைசெய்து உலோகங்களை அபரிமிதமான உயர் அளவுக்கு செல்லவிடாமல் சமநிலைப்படுத்தி, மீண்டும் இயல்பு நிலைக்கே கொண்டு வருவதில் மரங்கள் மற்றும் தாவரங்கள் வடிவில் இயற்கை பெரும்பங்கு வகிக்கிறது. முடிகிறது.

வழக்கமாக நச்சு உலோக நச்சேற்றம் சிலவகை பிணைப்புப் பொருளுடன் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது[1][2]. குறிப்பாக பாதரசம், காட்மியம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்களின் நச்சேற்றம் மிகுந்த கேடு விளைவிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

குறிப்பிட்ட வகைகளுக்கான சில நச்சு உலோகங்களுக்கு எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • தாமிரம்: தாமிரச் சேமிப்பு செயலுடன் தொடர்புடைய புரதமான செம்புப்பிணை நொதிநீர் குறைவு ஏற்படும் போது, வழக்கமாக ஒரு பக்கவிளைவாக தாமிர நச்சேற்ற நோய் உண்டாகிறது. இதனை வில்சன் நோய் என்று அழைக்கிறார்கள். பாலிலா பண்பணு குன்றிய மரபணுப் பிறழ்வு நோய்தான் வில்சன் நோயாகும். இக்குறைபாடு காரணமாக ஏற்படும் மாற்றத்தால் அடினோசின் முப்பாசுபேட்டானது தாமிரத்தை பித்தநீருக்கு கடத்திச் சென்று இறுதியாக செம்புப்பிணை நொதிநீருடன் இணைத்து தவறாக செயல்பட நேர்கிறது.
  • புளூட்டோனியம்: அணுக்கரு காலம் தொடங்கிய நாள் முதலே புளூட்டோனியம் நச்சு ஒரு கடுமையான நச்சாகக் கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக அணு உலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் இவ்வச்சம் சாதாரணமாக நிலவுகிறது. புளூட்டோனியத் தூளை உள்ளிழுத்தல் காரணமாக தீவிரமான ஆல்ஃபா துகள் உமிழ்வு நிகழும் ஆபத்துக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தகைய புளுட்டோனியம் நச்சு பாதித்தவர்கள் சிலரை அறிய முடிகிறது.
  • பாதரசம்: விவசாயம் அல்லது பிற சுற்றுச்சூழல் மூலங்கள் மூலம் உட்செலுத்தப்படும் பாதரசம், சிகிச்சை ஏதும் அளிக்கப்படாமல் இருந்தால் அளவில் அதிகரித்து நரம்பியல் நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
  • இரும்பு: இரும்பின் நச்சுத்தன்மை, இரும்பு நஞ்சாதல், அல்லது அதிகமான இரும்புச்சத்து கேடானது என்பது நன்கு தெரிந்ததுதான். வலிமையான வினையூக்கியாகவும் அடினோசின் முப்பாசுப்பேட்டு உற்பத்திக்கும், இதன்பயனாக விளையும் டி,என்.ஏ. உற்பத்திக்கும் இரும்பு பயனாகிறது என்றாலும், அதிகப்படியான இரும்பு நீண்ட நாட்களுக்கு இருக்க நேர்ந்தால் புற்றுநோய் கண்டறியும் சோதனையான அமெசு சோதனையில் மிகவும் பலவீனமான நேர்மறையான முடிவையே காட்டுகிறது. திசுக்கள் அல்லது இரத்த ஓட்டத்தில் உயர் மட்ட அளவுகளில் உள்ள இரும்பு, பெரும்பாலும் ஆல்சைமர் நோய் முதல் மலேரியா வரையிலான மனித நோய்களுக்கு காரணமாகிறது. சகாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் அரிசி, சோளம், அல்லது கோதுமை போன்ற தாவரங்களின் பாசனத்தில் இரும்பின் இருப்பு கடுமையான பிரச்சினையாக உள்ளது, இப்பகுதி நிலத்தடி நீரில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் பயிர்கள் நஞ்சாகின்றன.
  • ஈயம் மற்றும் காட்மியம்: இரைப்பைக்குடல் வாயுத் தொல்லை, சிறுநீரகம், நரம்பியல் செயலிழப்புகள் முதலான நோய்களுக்கு ஈயம் மற்றும் காட்மியம் அதிகரிப்பு வழிவகுக்கிறது. ஈயம் கலக்காத வண்ணங்கள் மற்றும் வாயுக்களைப் பயன்படுத்துவது இத்தகைய உலோகங்களால் ஏற்படும் நச்சுத்தன்மையை வெகுவாக குறைக்கின்றன.
  • நிக்கல், குரோமியம் மற்றும் காட்மியம்: டி.என்.ஏ மற்றும் உலோக இடைவினை நிகழ்வுகளால் இவ்வுலோகங்கள் புற்றுநோய் ஊக்கிகளாக மாறும் வாய்ப்பு உள்ளது.[2]
  • நிக்கல்: பொதுவாக அல்லது அணிகலன்கள் வழியாக தோலில் நிக்கல் படுவதால் நிக்கல் ஒவ்வாமை ஏற்படுகிறது.
  • துத்தநாகம், மக்னீசியம், குரோமியம், காட்மியம்: இவ்வுலோகங்களின் உலோகப்புகை உட்செல்லுதல் மூலம் சில வகையான மனம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன

மேற்கோள்கள்[தொகு]

  1. Nash, Robert A. “Metals in Medicine.” Alternative Therapies II.4 (2005):18-25.
  2. 2.0 2.1 Lippard, Stephen J. “Metals in Medicine.” Bioinorganic Chemistry. Mill City: University Science Books, 1994. 505-583.