மருதூர் கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோயில் நுழைவாயில்

மருதூர் கைலாசநாதர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் மருதூர் என்னுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் கைலாசநாதர் ஆவார். மூலவர் திருத்தான்தோன்றீஸ்வரர் என்றும் திருத்தான்தோன்றீஸ்வரமுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி கனகாம்பிகை ஆவார்.

அமைப்பு[தொகு]

கோயிலின் வாயிலின் எதிரே கோயிலுக்கு வெளியே பலி பீடமும் நந்தியும் உள்ளன. வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது முன் மண்டபம் உள்ளது. வலப்புறத்தில் வல்லப கணபதி உள்ளார். திருச்சுற்றில் நடராசர் சபை உள்ளது. பைரவர், நவக்கிரகம், சூரியன் ஆகியோர் உள்ளனர். மூலவர் கைலாசநாதர் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்கு முன்பாக நந்தி உள்ளது. மூலவர் சன்னதிக்கு இடது புறமாக பக்தபுரீசுவரர் சன்னதி உள்ளது. பக்தபுரீசுவரர் சன்னதிக்கு முன்பாக நந்தி உள்ளது. சன்னதி வாயிலின் வட புறத்தில் நாரதர் உள்ளார். கருவறை கோஷ்டத்தில் விநாயர், தட்சிணாமூர்த்தி, ஜோதிர்லிங்கம், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் செவிசாய்த்த விநாயகர், ஐயப்பன், சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக வெளியில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் கனகாம்பிகை என்றழைக்கப்படுகிறார். அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன.

குடமுழுக்கு[தொகு]

கைலாசநாதர் கோயில் 2002இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது.

பெருமாள் கோயில்[தொகு]

கைலாசநாதர் கோயிலுக்கு வெளியே, வலது புறத்தில் வரதராஜப்பெருமாள் கோயில் உள்ளது. கருவறையில் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் உள்ளார்.மூலவரின் வலது புறம் காளிங்க நர்த்தனரும், இடது புறம் அனுமாரும் உள்ளனர். மூலவருக்கு முன்பாக பலிபீடமும், கருடாழ்வாரும் உள்ளனர். இக்கோயில் கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]