மரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரு என்பது லேபியேட்டீ என்னும் துளசிக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடி. இதன் வேர்த்தண்டு தரைக்குள் படர்ந்து செல்லும். அது பல பருவம் வாழும். ஆண்டுதோறும் அதினின்றும் எழும் தண்டுகள் நேராக நிமிர்ந்து நிற்கும்.இலைகள் சிறியவை.உலக வடிவில் அல்லது உலக ஈட்டி வடிவின.பூக்கள் சிறியவை. சற்றுக் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.அருமையாக வெள்ளை நிறத்திலும் இருக்கும். பூங்கொத்துக்கள் உருண்டையாக இருக்கும். இது மிக்க நறுமணமுள்ள இலைகள் கொண்டது. தென் ஐரோப்பா, ஆசியா,வடஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் விளைகிறது.இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. இச்செடி மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் தைலம் தயாரித்து மருத்துவத்தில் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரு&oldid=2722022" இருந்து மீள்விக்கப்பட்டது