மரீ ழீன் தெ இலாலந்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரீ ழீன் அமேலீ லெ பிராங்காயிசு தெ இலாலந்தே (Marie-Jeanne-Amélie Le Francais de Lalande) (பிறப்பு:ஆர்லே,[1] 1768[2]–நவம்பர் 8, 1832) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவர் வானியலாளராகிய ஜோசப் ஜெரோம் தெ இலாலந்தேவின்(1732-1807) சட்டப்படி ஏற்கபடாத மகளாவார். இவர் அவரது ஒன்றுவிட்ட பங்காளி அல்லது தந்தைவழி மாமனும் வானியலாளரும் ஆகிய மிக்கேல் லெ பிராங்காயிசு தெ இலாலந்தேவை (1776-1839)1788 இல் திருமணம் செய்துக்கொண்டார்.

இவரது தந்தையார் இந்த இளம் இணையருக்கும் வானியலில் கணக்கீடிகளும் நோக்கீடுகளும் செய்ய கற்றுக் கொடுத்தார்.

இவர் தன் தந்தையாருடன் நெருக்கமாகப் பணிஉரிந்து அவரது வெளியீடுகள் பலவற்றுக்குப் பங்களிப்புகள் செய்துள்ளார்.

இவரது அறிவியல் பெண்மணியாக விளங்கியமை கார்ல் பிரீடுரிக் காசுவின் ஓர் எடுத்துரைப்பில் இருந்து தெறியவந்துள்ளது: பிரசிய 1806 ஆம் ஆண்டு படைசார் பரப்புரையில் காசு அவருக்கு "அறிவியலில் பணிபுரிந்த பிரெஞ்சு பெண்மணியாகிய மாதம் லெ பிராங்காயிசு தெ இலாலந்தே தனக்குத் தெரியும் எனக் கூறியுள்லார்"[3]

இவர் 1832 இல் தன் 64 ஆம் அகவையில் இறந்தார். இவரது மகள் கரோலின் கரோலின் எர்ழ்செல் நினைவாகப் பெயரிடப்பட்டார். கரோலின் பிறந்த நாள், 1790 ஜனவரி 20, எர்ழ்செல் பெரிசுவில் இருந்து கட்புல வால்வெள்ளி ஒன்றைக் கண்டுபிடித்த நாளோடு ஒன்றிவிட்டது.[1] இவர் தன் மகனுக்கு அய்சக் நியூட்டன் பெயரை இட்டார்.[4]

பணி[தொகு]

இவர் கணக்கிட்ட Tables horaires de marine எனும் அட்டவணைகள், இவரது தந்தையாரின் Abgrége de navigation historique théorique et pratique avec tables horaires எனும்நூலில் வெளியிடப்பட்டது (1793). இந்த அட்டவணைகள் இவரது தந்தையாருக்கு தகுதிமிகு அறிஞருக்கும் கலைஞருக்குமான இலைசேயி தெசு ஆர்ட்சு (Lycée des Arts) சார்ந்த பதக்கங்களில் ஒன்றைப் பெற வழிவகுத்தது.

இவரது த்ஹந்தையாரின் 1794 முதல் 1806 வரையிலாண ஆண்டு வானியல் அட்டவணைகளில் இவரது பணி வெளியிடப்பட்டது.

இவர் 1799 இல் 10 000 விண்மீன்களுக்கான அட்டவணையை உருவாக்கினார்.

இவரது வானியல் திறமையால் பெயர்பெற்ற வானியலாளராகிய ழீன் தொமினிக் காசினியின் மகனுக்கு பிரான்சுக் கல்லூரியில் (College de France) முதல் நோக்கீட்டை வழிகாட்டும் பொறுப்பை ஈந்தது.

இவர் 1801 இல் இலாலந்தே எழுதிய 'Histoire céleste française எனும் நூலின் இணையாசிரியர் ஆவார். இப்பணி 50,000 விண்மீன்களின் இருப்புகளைக் காட்டுகிறது.

தெ இலாலந்தே குழிப்ப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 வார்ப்புரு:BDWS
  2. Poirier Jean-Pierre, Haigneré Claudie, Histoire des femmes en science en France, Du Moyen Age à la Révolution, Pygmalion, 2002.
  3. Calendrier Astronomes Françaises : du siècle des Lumières à l'ère spatiale, 2010. [French]
  4. வார்ப்புரு:BDWS
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீ_ழீன்_தெ_இலாலந்தே&oldid=2543110" இருந்து மீள்விக்கப்பட்டது