உள்ளடக்கத்துக்குச் செல்

மரீச் மான் சிங் சிரேஸ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரீச் மான் சிங் சிரேஸ்தா
मरिचमान सिंह श्रेष्ठ
28வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
15 சூன் 1986 – 6 ஏப்ரல் 1990
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
முன்னையவர்நாகேந்திர பிரசாத் ரிஜால்
பின்னவர்லோகேந்திர பகதூர் சந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-01-01)1 சனவரி 1942
காலங்க பஜார், சல்யான், நேபாளம்]]
இறப்பு15 ஆகத்து 2013(2013-08-15) (அகவை 71)
காட்மாண்டு, நேபாளம்
அரசியல் கட்சிசுயேச்சை அரசியல்வாதி
துணைவர்விஷ்ணுதேவி பிஸ்தா
பிள்ளைகள்அனில் சஞ்சயன், ராஷ்மி, ரஞ்சன்

மரீச் மான் சிங் சிரேஸ்தா (Marich Man Singh Shrestha) (நேபாளி: मरिचमान सिंह श्रेष्ठ; 1 சனவரி 1942 – 15 ஆகஸ்டு 2013) நேபாள நாட்டின் 28வது பிரதம அமைச்சராக 15 சூன் 1986 முதல் 6 ஏப்ரல் 1990 முடிய பதவி வகித்தவர்.[1] நேவார் இனத்தைச் சேர்ந்த இவர், சுயேச்சை அரசியல்வாதி ஆவார்.

அரசியல் பணி

[தொகு]

இவர் நேபாளத்தின் பிரதம அமைச்சராவதற்கு முன்னர், நேபாள தேசிய சபையின் சபாநாயகராக பதவி வகித்தார். நேபாளத்தின் மீது 23 மார்ச் 1989 முதல் இந்தியா 16 மாத பொருளாதாரத் தடை ஏற்படுத்தியிருந்த காலத்தில், பல கட்சிகள் அரசியல் ஜனநாயக முறை வேண்டி கடுமையான போராட்டங்கள் நடத்தின. இதனால் மரீச் மான் சிங் சிரஸ்தாவை, மன்னர் பிரேந்திரா பதவி நீக்கம் செய்தார். மக்கள் எழுச்சியின் விளைவாக நேபாளத்தில் ஈரவை முறைமை கொண்ட நாடாளுமன்றம் அமைத்திட நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3]

இறப்பு

[தொகு]

மரீச் மான் சிங் சிரேஸ்தா தமது 71வது அகவையில் உடல்நலக் குறைவால் 15 ஆகஸ்டு 2013 அன்று மறைந்தார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nepal Who's who - Google Books. Books.google.ca. 2008-06-04. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
  2. Taylor & Francis Group (2004). Europa World Year Book 2. Taylor & Francis. p. 3042. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85743-255-X.
  3. "Nepal Information". Archived from the original on 14 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Former Nepal PM Marich Man Singh Shrestha dies". BBC. 15 August 2013. http://www.bbc.co.uk/news/world-asia-23709925. பார்த்த நாள்: 15 August 2013. 
  5. "Former Nepal Prime Minister Shrestha passes away". The Hindu. August 15, 2013. http://www.thehindu.com/news/international/south-asia/former-nepal-prime-minister-shrestha-passes-away/article5025662.ece. பார்த்த நாள்: 15 August 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]
அரசியல் பதவிகள்
முன்னர் நேபாள பிரதம அமைச்சர்
1986 – 1990
பின்னர்
தூதரகப்பதவிகள்
முன்னர் சார்க் அமைப்பின் தலைவர்
1987
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீச்_மான்_சிங்_சிரேஸ்தா&oldid=4060235" இலிருந்து மீள்விக்கப்பட்டது