மரிய தொமனிகா மசரெல்லோ
புனித மரிய தொமனிகா மசரெல்லோ | |
---|---|
![]() | |
துறவி மற்றும் நிருவுனர் | |
பிறப்பு | மோர்னேசே, அலெசாண்திரியா, இத்தாலி | 9 மே 1837
இறப்பு | 14 மே 1881 மோர்னேசே | (அகவை 44)
,
வணங்கும் திருஅவைகள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 20 November 1938, புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர் by பதினொன்றாம் பயஸ் |
புனிதர் பட்டம் | 24 June 1951, புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர் by பன்னிரண்டாம் பயஸ் |
முக்கிய திருத்தலங்கள் | கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின், இத்தாலி |
திருவிழா | 13 மே |
மரிய தொமனிகா மசரெல்லோ, FMA (9 மே 1837 - 14 மே 1881) ஒரு இத்தாலிய கத்தோலிக்க துறவி ஆவார். இவர் தொன் போஸ்கோவோடு இணைந்து சலேசிய சகோதரிகள் சபையினை நிறுவினார்.
வாழ்க்கை
[தொகு]இவர் வடக்கு இத்தாலியின் அலெசாண்திரியா மாவட்டத்தில் உள்ள மோர்னேசேவில் பிறந்தவர். இவரது பெற்றோர் திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த ஜோசப் மற்றும் மடலீனா கல்காக்னோ ஆவர். இக்குடும்பத்தின் பத்து குழந்தைகளில் இவர் மூத்தவர். தமது பதினைந்தாம் அகவையில், இவர் அமல மரியின் புதல்வியர் சங்கத்தில் சேர்ந்தார். அவ்விடத்தின் பங்கு குரு பணி. டொமினிகோ பெஸ்டரினோவால் வழிநடத்தப்பட்ட இச்சங்கமானது பல பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டது. இச்சங்கமே சலேசிய சகோதரிகள் சபையின் முன்னோடியாக் கருதப்படுகின்றது.[1]
இவரது 23ஆம் அகவையில், டைபாய்டு நோய் ஊரேங்கும் பரவியது. பலர் இறந்தனர். இவருடைய மாமாவும் அத்தையும் கூட நோய்வாய்பட்டனர். மரியா அவர்களையும் அவர்களது குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள முன்வந்தார். ஒரு வாரத்தில் அவர்கள் குணமடைந்தனர். ஆனால் மரியா வீடு திரும்பியபோது, அவருக்கும் டைபாய்டு நோய் தொற்று ஏற்பட்டது. இதனால், இவர் நோயில் பூசுதல் அருட்சாதத்தினைப் பெற்றார். இவர் குணமடைந்தபோதும் நோய்யின் தாக்கத்தால் நலிவுற்ற உடல் நலம் முன்பு போலத் தேரவில்லை. ஆகவே கடின வேலைகளில் அவரால் ஈடுபடமுடியவில்லை.[1] ஆகவே இவர் தையற்கலையினைப் பயின்று அத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
ஓர் அக்டோபர் மாதத்தில், இவர் தனது கிராமத்தின் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு பெரிய கட்டிடத்தையும், பல சிறுமியர் விளையாடி சிரித்துக் கொண்டிருந்த முற்றத்தையும் தன் முன் காட்சியாகக் கண்டதாக நம்பப்படுகின்றது. அப்போது ஒரு குரல் அவரிடம், "நான் இவர்களை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" என்றது.[2]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண் குழந்தைகளின் கல்வி என்பது அடிப்படைத் தேவையாக இருந்தது. மரியா இந்தப் பணிக்காக தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்தார். கிராமப்புறங்களிலிருந்து வந்த பண்ணைப் பெண்கள், அல்லது வேலை செய்யும் பெண்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மற்றும் தெருவில் பொடுட்களை விற்கும் பெண்கள் ஆகியோர் நகரத்தின் தெருக்களில் நிறைந்திருந்தனர்; இவர்கள் அனைவரும் வருமையினால் பால்வினைத் தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை இருந்தது. இதில் இருந்து அவர்களைக் காப்பாற்றவும், அவர்களுக்குக் கல்வி கற்பிக்கவும், ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்பிக்கவும் மரியா விரும்பினார். ஆகவே தன்னுடன் சேர்ந்து பணியாற்ற சில தோழிகளின் உதவியினை நாடினார். பதினைந்து இளம் பெண்கள் இவரோடு இணைந்தனர்.[3] பங்கு குரு பெஸ்டரினோ இவர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருந்தார். இவரின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து துறவியரைப்போல குழும வாழ்வு வாழ்ந்தனர். இதுவே மோர்னேஸில் இத்துறவு சபையின் தொடக்கமாகும். இவர்கள் முதற்கட்டமாக சில இளம் பெண்களைக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு ஆன்ம வாழ்வை பயிற்றுவித்தனர், மேலும் தையற்கலையினையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர்.[2]
சலேசிய சபையில் இணைவதற்காகப் பயிற்சி பெற்று வந்த பணி. பெஸ்டாரினோ, தொன் போஸ்கோவின் இவர்களைப் பற்றிச் சொன்னார். இளம் பெண்கள் குறித்த தனது எதிர்கால திட்டத்தைக் கருத்தில் கொண்டு, போஸ்கோ அவர்களைச் சந்திக்க முடிவு செய்தார். அவர் தனது மையத்திற்கு நிதி திரட்டும் போர்வையில் தனது இளையோர் இசைக்குழுவுடன் மோர்னேசே சென்றார். [2]
கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர் சபை
[தொகு]1867 ஆம் ஆண்டில், அவர்களைச் சந்தித்து, அவர்களின் ஒப்புதலைப்பெற்ற பிறகு, புதிய துறவு சபையின் முதல் விதியை உருவாக்கினார். இச்சபையின் தலைவராக மேரி தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு முப்பது அகவை ஆகியிருந்தது.[4]
பல போராட்டங்கள், தவறான வழிகாட்டல்கள் மற்றும் ஊர் மக்களுடனான சிக்கள்களுக்கு இடையே (ஊர் மக்கள் நிதி திரட்டி கட்டிய ஆண்களுக்கான உரைவிடப்பள்ளியை போஸ்கோ பெண்களுக்காக இவர்களிடம் ஒப்படைத்தார்), இச்சபையின் முதல் துறவற உறுதிஏற்ப்பு நாள் வந்தது. மேரியாவின் தலைமையில் பதினைந்து இளம் பெண்கள், அக்வியின் ஆயர், அவர்களின் ஆன்ம குரு போஸ்கோ மற்றும் பெஸ்டரினோ முன்னிலையில் 1872 ஜூலை 31 அன்று தங்கள் முதல் துறவு உறுதிமொழிகளை ஏற்றனர்.[5]
மறைபரப்பு பணிக்காக இச்சபையின் சகோதரிகள் 1877 இல் உருகுவேவுக்குப் சென்றனர் இத்தாலியின் செனோவாவில் உள்ள துறைமுகம் வரை வந்து அன்னை மசரெல்லோ அவர்களை வழிஅனுப்பி வைத்தார். அங்கிருந்து பிற அருட்சகோதரிகளைப் பார்க்க ஒரு கப்பலில் பிரான்சுக்குச் சென்றார். மார்சேயில் அவர்களின் கப்பல் பழுதடைந்து. பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடும் சகோதரிகளுக்கு தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தாலும், அவர்கள் தூங்குவதற்குக்கூட படுக்கைகள் இல்லாமல் தவித்தனர். மசரெல்லோ இதுபோன்ற நிகழ்வுகளால் சோர்வடையாமல், அவர்கள் கொண்டு வந்த விரிப்புகளை எடுத்து வைக்கோலால் நிரப்பி, படுக்கைகளை உருவாக்கினார். ஆயினும் அந்த இரவின் தாக்கத்தால் மசரெல்லோவின் உடல் நலம் குன்றியது. மறுநாள் காலையில், செயிண்ட் சிரில் உள்ள அவர்களின் துறவு இல்லம் மற்றும் ஆதரவற்ற சிறார்களின் காப்பத்திற்கு பயணிமானார்.

செயிண்ட் சைரில் பணியாற்றிக்கொன்டிருந்த போது அவர் மயக்கம் அடைந்து விழுந்தார். நாற்பது நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது அவளுக்கு ப்ளூரிசி நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தனது துறவு இல்லத்தில் மரிக்க விறும்பி, மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக அவர் இத்தாலிக்குத் திரும்ப முடிவு செய்தார். அயற்சியினால் இப்பயணம் படிப்படியாக நடந்தது. இதன் ஒரு ஒரு நிறுத்தத்தில் போஸ்கோவை கடைசியாக சந்திக்க முடிந்தது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில், மேரி நிஸ்ஸா மான்ஃபெராதோவுக்குத் திரும்பினார். அவரின் உடல் நலம் முன்னேரியதால், தனது துறவு சமூக கடமைகளை செய்ய தொடங்கினார். ஆனால் அது அவரை மீண்டும் வலுவிழக்கச்செய்தது. 1881 மே 14 ஆம் நாள் விடியற்காலையில், அன்னை மசரெல்லோ தனது 44ஆம் அகவையில் இறந்தார். "விடைபெறுகிறேன். நான் இப்போது போகிறேன். நான் உங்களை விண்னகத்தில் பார்ப்பேன்" என்பதே அவரின் இறுதி சொற்களாகும்.
வணக்கம்
[தொகு]இவருக்கு 1938 நவம்பர் 20 ஆம் நாள் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. மேலும் 1951 ஜூன் 24 ஆம் நாள் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இத்தாலியின் தூரினில் உள்ள கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயத்தில் இவரது அழியா உடல் உள்ளது. தென்கிழக்கு உரோமை நகரில் உள்ள ஒரு ஆலயம் இவரது பெயரால் அர்ப்பனிக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Mary Mazzarello". Salesian Sisters of St John Bosco. 1 April 2007. Retrieved 17 November 2016.
- ↑ 2.0 2.1 2.2 "Santa Maria Domenica Mazzarello su santiebeati.it". Retrieved 17 November 2016.
- ↑ https://www.oxfordreference.com/display/10.1093/oi/authority.20110803100142859 "Maria-Domenica Mazzarello", The Oxford Dictionary of Saints, 5th ed. (David Farmer, ed.) OUP, 2011] பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199596607
- ↑ "MARIA DOMENICA Mazzarello, santa in "Dizionario Biografico"". Retrieved 17 November 2016.
- ↑ "MARIA DOMENICA Mazzarello, santa in "Dizionario Biografico"". Retrieved 17 November 2016.