மரியா ரோஸ்ட்வோரோவ்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா ரோஸ்ட்வோரோவ்ஸ்கி
பிறப்புமரியா ரோஸ்ட்வோரோவ்ஸ்கி தோவர்
(1915-08-08)8 ஆகத்து 1915
பாரன்கோ, லிமா, பெரு
இறப்பு6 மார்ச்சு 2016(2016-03-06) (அகவை 100)
லிமா, பெரு
மற்ற பெயர்கள்மரியா ரோஸ்ட்வோரோவ்ஸ்கி தோவர் தெ தயீசு கான்செகோ
பணிவரலாற்றாளர்
பெற்றோர்ஜான் ஜாசெக் ரோஸ்ட்வோரோவ்ஸ்கி, ரீட்டா டோவர் டெல் வாலே
வாழ்க்கைத்
துணை
சிக்மன்ட் புரோயல்- பிளாட்டர் (முதல் கணவர்); 1 குழந்தை
அல்ஜந்த்ரோ தயீசு கோரனெல்-சிகாரா
பிள்ளைகள்கிரிஸ்டியானா

மரியா ரோஸ்ட்வோரோவ்ஸ்கி தோவர் தெ தயீசு கான்செகோ ( María Rostworowski Tovar de Diez Canseco) (8 ஆகஸ்ட் 1915 - 6 மார்ச் 2016) பெரு நாட்டின் பண்டைய கலாச்சாரங்கள் மற்றும் இன்கா பேரரசு பற்றிய விரிவான வெளியீடுகளுக்காக அறியப்பட்ட ஒரு பெருவிய வரலாற்றாசிரியர் ஆவார்.

சுயசரிதை[தொகு]

உரோஸ்ட்வோரோவ்ஸ்கி, பெரு நாட்டின் லிமாவில் உள்ள பாரன்கோ மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜான் ஜாசெக் ரோஸ்ட்வோரோவ்ஸ்கி, ஒரு போலந்து உயர்குடிமகனாவர். இவரது தாயார், ரீட்டா டோவர் டெல் வாலே, புனோவைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, அகஸ்டின் டோவர் அகுய்லர், செனட்டின் தலைவராக இருந்தார் . மேலும் இவரது மாமா, கரோல் ஹூபர்ட் ரோஸ்ட்வோரோவ்ஸ்கி ஒரு நாடக ஆசிரியராக இருந்தார். இவர் போலந்து, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு உறைவிடப் பள்ளிகளில் பயின்றார். அங்கு பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் போலிய மொழி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகத்தில் பெருவியன் வரலாற்றாசிரியர் ரவுல் போராஸ் பர்ரெனிசியாவின் மாணவி ஆவார். [1] பாப்புலர் ஆக்ஷன் என்ற பெருவிய அரசியல் கட்சியின் தொடக்கத்தின் போது, கட்சியில் இவர் பங்கேற்றார்.

1975 முதல் 1980 வரை தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குநராக, தி நேஷனல் அகாடமி ஆஃப் ஹிஸ்டரியின் (அகாடமியா நேஷனல் டி ஹிஸ்டோரியா) துணைத் தலைவராக பணியாற்றினார். மேலும் லிமாவில் உள்ள பெருவியன் ஆய்வுகள் நிறுவனத்தில் முதன்மை குடியுரிமை அறிஞராகவும் இருந்தார். [2] ஆகஸ்ட் 2015 இல் இவர் 100 வயதை எட்டினார் . [3]

இறப்பு[தொகு]

6 மார்ச் 2016 அன்று தனது 100வது வயதில் இறந்தார். [4]

சான்றுகள்[தொகு]

  1. "María de los Andes" பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், interview by Nelson Manrique, at Cyberayllu, 1988. Retrieved 6 March 2016.
  2. "Silencio, la maestra ha muerto: María Rostworowski nos dejó", lamula.pe, 6 March 2016. Retrieved 6 March 2016.
  3. "Maria Rostworowski: sus 100 años y su vida dedicada a investigar la historia del Perú" (in es). La República. 8 August 2015 இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150814011851/http://larepublica.pe/cultural/359272-maria-rostworowski-sus-100-anos-y-su-vida-dedicada-investigar-la-historia-del-peru. பார்த்த நாள்: 10 August 2015. 
  4. Elcomercio.pe, Redacción (6 March 2016). "Falleció María Rostworowski, destacada historiadora peruana". El Comercio.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_ரோஸ்ட்வோரோவ்ஸ்கி&oldid=3680390" இலிருந்து மீள்விக்கப்பட்டது