உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா தெரசா உரூசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா தெரசா உரூசு
María Teresa Ruiz
மரியா தெரசா உரூசு, 2015
பிறப்பு24 செப்டம்பர் 1946 (1946-09-24) (அகவை 77)
சாந்தியாகோ தெ சிலி
தேசியம்சிலியர்
அறியப்படுவதுகேலு 1 கண்டுபிடிப்பு

மரியா தெரசா உரூசு (María Teresa Ruiz) (பிறப்பு: 24 செப்டம்பர் 1946) ஒரு சிலி வானியலாளர் ஆவார். இவர் சிலி நாட்டுச் சரிநிகர் அறிவியல் புலங்களுக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் பெண்மணியாவார்.[1]

வாழ்க்கை

[தொகு]

உரூசு 1946 இல் சாந்தியாகோ தெ சிலியில் பிறந்தார். இவர் சிலி பல்கலைக்கழகத்தில் வானியல் பயின்ற முதல் பெண்மணியாவார்.[1] இவர் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். இவர் 1997 இல் சிலி நாட்டுச் சரிநிகர் அறிவியல் புலங்களுக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.[2] இவர் தியெசுத்ரே வான்காணகத்தில் முதுமுனைவர் ஆய்வுக்கும் தேர்வு செய்யப்பட்ட்டுள்ளார். உரூசு மெக்சிகோவில் அமைந்த யூனாம் வானியல் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இவர் குகன்கீம் ஆய்வு நல்கையைப் பெறுவதற்கு முன்பு திரியெசுத்தே, மெக்சிகோ, நியூயார்க் நகரில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவர் கேலு -1 எனும் பழுப்புக் குறுமீனைக் கண்டுபிடித்தார்.[1]

இவர் 2016 மேவில் இருந்து சிலி அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகவும் சிலி பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் உள்ளார்.[3] இங்கு இவர் வானியலைக் கற்பிக்கிறார். இவர் வானியற்பியலுக்கான கெட்டா (CATA ) மைய உறுப்பினர் ஆவார்.[4]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • அறிவியல் தலைமைக் கட்டில், 1996
  • சிலி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதக்கம், 1996
  • அறிவியலுக்கான தேசிய விருது, 1997
  • சிலி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதக்கம், 1998
  • அறிவியல் கல்விக்கழக ஆய்வுறுப்பினர், 1998 இல் இருந்து
  • இலாபார்க்கா தகைமை விருது, 2000
  • அறிவியல் மகளிருக்கான யுனெசுகோவின் உலோரியல் விருது, 2017.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Staff (17 March 2005). "María Teresa Ruiz: Una mente brillante (A Beautiful Mind)". Universia Chile. Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-20. (எசுப்பானியம்),
  2. "Prof. Maria Ruiz, Princeton PhD '75, honored with Loreal-UNESCO For Women in Science Award | Department of Astrophysical Sciences". web.astro.princeton.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-18.
  3. "Scientists to analyze possible red tide-salmon dumping link". Fish Info & Services Co.Ltd. May 17, 2016. Archived from the original on ஆகஸ்ட் 19, 2016. பார்க்கப்பட்ட நாள் May 26, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. ""UN PASEO POR EL UNIVERSO", PROFESORA MARÍA TERESA RUIZ". Chilean Academy of Science (in Spanish). September 7, 2015. பார்க்கப்பட்ட நாள் May 26, 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. Announcement of Laureates of 2017 L’Oréal-UNESCO For Women in Science Awards

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_தெரசா_உரூசு&oldid=3961046" இலிருந்து மீள்விக்கப்பட்டது