மரியா தூர்பகை வசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியா தூர்பகை வசீர் (Maria Toorpakai Wazir பஷ்தூ: ماريه تورپېکۍ وزيره ; உருது: ماریہ تورپیکئی وزیر  ; நவம்பர் 22, 1990 இல் தெற்கு வசீரிஸ்தானில் பிறந்தார், நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்) ஒரு தொழில்முறை பாக்கித்தான் சுவர்ப்பந்து வீரர். செங்கிஸ் கான் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் பெண்ணாக போட்டி விளையாட்டுகளில் பங்கேற்றார். இவர் தனது வாழ்க்கையின் முதல் 16 வருடங்கள் ஒரு பையனைப் போல உடையணிந்தார் .

12 வயதில் பளுதூக்குதலில் சிறுவர்களைத் தோற்கடித்த பிறகு, தூர்பகை சுவர்ப்பந்து விளையாட்டிற்கு மாறினார். இவர் பெண் என்பதற்கான பிறப்புச் சான்றிதழைத் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. சர்வதேச சுவர்ப்பந்து போட்டிகளில் பங்கேற்ற முதல் பழங்குடி பாக்கித்தான் பெண் ஆனார், 2006 இல் தொழில்முறை ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டார். ஆகஸ்ட் 2007 இல், பாக்கித்தான் குடியரசுத் தலைவர் இவருக்கு சலாம் பாக்கித்தான் விருதை வழங்கினார். தலிபான்களால் மிரட்டப்பட்ட இவர், அடுத்த 3 வருடங்களுக்குத் தன் வீட்டிலேயே இருக்க வைக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில், இவர் உலக இளையர் பெண்கள் சுவர்ப்பந்து வாகையாளர் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டில், கனடாவின் ஒன்ராறியோவின் டொராண்டோவுக்கு ஜோனாடன் பவரின் கீழ் பயிற்சி பெற வந்தார். மே 2016 நிலவரப்படி, இவர் உலகின் பெண் வீரர்களில் 56 வது இடத்தில் உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மரியா தூர்பகை நவம்பர் 22, 1990 அன்று ஆப்கானிஸ்தானின் எல்லையிலுள்ள பாக்கித்தானின் வடமேற்கில் உள்ள பழங்குடிப் பகுதியான தெற்கு வசிரிஸ்தானில் பிறந்தார். இவரது பெற்றோர் இப்பகுதியில் தலிபான்கள் இருந்தபோதிலும் பெண்களின் உரிமைகளில் உறுதியாக உள்ள ஆசிரியர்கள் துணையுடன் கற்பித்தல் பணியினை மேற்கொண்டனர். இவரது தந்தை ஷம்சுல் கயும் வாசிர், [1] சில சமயங்களில் ஷம்சுல் கய்யும் வசீர் என அறியப்படுகிறார் [2] தனது இளமைப் பருவத்தில் கிப்பிகளுடன் தனது தன்னியக்கக் கல்வி மற்றும் மகளிர் கல்விக்கான ஆதரவான அணுகுமுறை ஆகியவற்றிற்காக செலவழித்த தனது தந்தையினை இவர் பாராட்டுகிறார். இவருடைய சகோதரி ஆயிஷா குலாலாய் ஒரு பாக்கித்தான் அரசியல்வாதி, பழங்குடிப் பகுதிகளில் பெண்களை மேம்படுத்துவதற்காக வேலை செய்து வருகிறார். [3]

மிகவும் பழமை வாய்ந்த பழங்குடிப் பகுதியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படாவிட்டாலும், குழந்தையாக, தூர்பகை வெளியில் விளையாட விரும்பினார். 4 வயதில், இவருடைய பெற்றோர் இவரை ஆண் சிறுவன் போல் ஆடைகளை அணிய அனுமதித்தனர். 7 வயதில் இவர் ஒரு ஆண் குழந்தை போலவே வாழ்ந்து வந்தார்.

2002 ஆம் ஆண்டில், தூர்பகையின் தந்தை இவளை பெசவரில் பளு தூக்குதலில் கலந்து கொள்ளச் செய்து இவருக்கு செங்கிஸ் கான் என்ற பெயரை அறிமுகப்படுத்தினார். இவள் தன் தந்தையின் வெளிப்படையான ஆதரவுடன் ஒரு ஆண் சிறுவனைப் போல் பயிற்சி பெற்று போட்டியிட்டாள். 12 வயதில் இவள் லாகூரில் ஒரு இளைய வாகையாளர் பட்டத்தினை வென்றார். இவர் பளு தூக்குதல் போட்டிக்குப் பின்னர், சுவர்ப்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தினார். இவருடைய தந்தை இவளை ஒரு சுவர்ப்பந்து அகாதமிக்கு அழைத்துச் சென்றார். இவரது தோற்றத்தின் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு பையனைப் போல பாசாங்கு செய்வதனை இவர் கைவிட்டார். இவருக்கு பயிற்சி கூட்டாளிகள் அல்லது பயிற்சியாளர் கிடைக்காமல் போனது அதனால் பல மணி நேரம் சுயமாகப் பயிற்சி பெற்றார். மற்ற வீரர்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்களால் இவர் துன்புறுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார். [4]

விருதுகள்[தொகு]

ஆகஸ்ட் 2007 இல், பாக்கித்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் , டென்னிஸ் வீரர் அசம் உல் ஹக் குரேசி மற்றும் கால்பந்து வீரர் முஹம்மது எஸ்ஸா ஆகியோருடன் சலாம் பாக்கித்தான் விருதை வழங்கினார். [5]

சான்றுகள்[தொகு]

  1. "Maria Toorpakai: The Pakistani squash star who had to pretend to be a boy". BBC News Magazine. 20 March 2013. https://www.bbc.co.uk/news/magazine-21799703. பார்த்த நாள்: 26 March 2013. 
  2. "Meet the Pakistani squash champion who disguised herself as a boy". Women In The World Media, LLC. 8 May 2016 இம் மூலத்தில் இருந்து 16 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160416151749/http://nytlive.nytimes.com/womenintheworld/2016/04/08/meet-the-pakistani-squash-champion-who-disguised-herself-as-a-boy/. பார்த்த நாள்: 10 May 2016. 
  3. Zahid Gishkori (6 June 2013). "Inspired by Benazir, PTI's Aisha Gulalai seeks empowerment of tribal women". The Express Tribune Pakistan. Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
  4. {{cite AV media}}: Empty citation (help)
  5. Taneeya Hasan (4 December 2012). "Unsquashable: Trading volleys with Maria Toor Pakay". The Express Tribune. http://tribune.com.pk/story/472755/unsquashable-trading-volleys-with-maria-toor-pakay/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_தூர்பகை_வசீர்&oldid=3701714" இலிருந்து மீள்விக்கப்பட்டது