உள்ளடக்கத்துக்குச் செல்

மரியா கொரினா மச்சாடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியா கொரினா மச்சாடோ
María Corina Machado
2023 இல் மச்சாடோ
மிராண்டா தொகுதிக்கான தேசியப் பேரவை உறுப்பினர்
பதவியில்
5 சனவரி 2011 – 21 மார்ச் 2014
முன்னையவர்இராம் கவிரியா
பின்னவர்ரிக்கார்டோ சான்செசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மரீயா கொரினா மச்சாடோ பாரிசுக்கா

7 அக்டோபர் 1967 (1967-10-07) (அகவை 58)
கரக்கசு, வெனிசுவேலா
அரசியல் கட்சிவெனிசுலாவுக்கு வாருங்கள் (2012 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
ஒற்றையாட்சித் தளம்
சனநாயக ஒற்றுமை வட்டமேசை
சூமாட்டே (2001–2010)
நீதி முதலில் (2010–2012)
பிள்ளைகள்3
கல்விஅந்திரேசு வெல்லோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (இ.அ)
நிர்வாகத்தில் உயர் கல்வி நிறுவனம் (முதுகலை)
விருதுகள்
கையெழுத்து

மரியா கொரினா மச்சாடோ பாரிகா (María Corina Machado Parisca; பிறப்பு: அக்டோபர் 7, 1967) என்பவர் வெனிசுலா (வெனிசுவேலா) நாட்டின் அரசியல்வாதியாகவும், தொழில்துறை பொறியாளராகவும் உள்ளார். அக்டோபர் 2025 இல், இவருக்கு வெனிசுலா மக்களின் மக்களாட்சி உரிமைகளை மேம்படுத்தவும், சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சிக்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்காகவும் போராடுவதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] வெனிசுலா எதிர்க்கட்சியின் ஒரு முக்கிய தலைவரான இவர், 2011 முதல் 2014 வரை வெனிசுலாவின் தேசிய சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.[2]

வெனிசுலா எதிர்க்கட்சியின் வலதுசாரி உறுப்பினரான இவர், தன்னை ஒரு மையவாதியென்றும் தாராளமயவாதி என்றும் விவரித்துள்ளார்.[3][4] வெனிசுலாவில் தேர்தலின்போது வாக்குகளைக் கண்காணிக்கும் அமைப்பான சூமாட்டேவின் நிறுவனராக மச்சாடோ தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் வென்டே வெனிசுலா (வெனிசுலாவுக்கு வாருங்கள்) என்ற அரசியல் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 2012 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியின் அதிபருக்கான முதன்மைத் தேர்தலில் இவர் போட்டியிட்டபோதிலும், என்றி கேப்ரில்சு என்பவரிடம் தோல்வியடைந்தார். 2014 ஆம் ஆண்டு நடந்த வெனிசுலா போராட்டங்களின்போது, ​​மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nobel Foundation(10 October 2025). "Announcement, Nobel Peace Prize 2025". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 10 October 2025.
  2. Asmita Ravi Shankar (அக்டோபர் 10, 2025). "Meet Maria Corina Machado, the Venezuelan leader who won Nobel Peace Prize 2025". https://www.hindustantimes.com/world-news/meet-maria-corina-machado-the-venezuelan-leader-who-won-nobel-peace-prize-2025-101760087477226.html. 
  3. Pinero, Jesus (19 November 2018). "María Corina Machado, la dama de acero" (in es). https://elestimulo.com/climax/perfil/2018-11-19/maria-corina-machado-la-dama-de-acero/. 
  4. Moleiro, Alonso (28 February 2023). "What is in store for María Corina Machado, the 'iron lady' of the Venezuelan opposition?". El País (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 30 June 2023.
  5. Kurmanaev, Anatoly (23 December 2014). "Venezuela Protests Drive Poor to Maduro as Death Toll Mounts". Business Week இம் மூலத்தில் இருந்து 13 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313080046/http://www.businessweek.com/news/2014-03-13/middle-class-protesting-venezuela-shortages-drive-poor-to-maduro. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_கொரினா_மச்சாடோ&oldid=4392391" இலிருந்து மீள்விக்கப்பட்டது