மரியாம் மீர்சாக்கானி
மரியாம் மீர்சாக்கானி | |
---|---|
பிறப்பு | பாரசீக மொழி: مریم میرزاخانی மே 3, 1977 தெகரான், ஈரான் |
இறப்பு | 15 சூலை 2017 | (அகவை 40)
வாழிடம் | கலிபோர்னியா, அமெரிக்கா |
தேசியம் | ஈரானியர்[1] |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | |
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வேடு | Simple geodesics on hyperbolic surfaces and the volume of the moduli space of curves (2004) |
ஆய்வு நெறியாளர் | Curtis T. McMullen[2][3][4] |
விருதுகள் |
|
மரியாம் மீர்சாக்கானி (Maryam Mirzakhani, (பாரசீக மொழி: مریم میرزاخانی;[5] 3 மே 1977 - 15 ஜூலை 2017 ) ஓர் ஈரானிய கணிதவியலாளர். இவர் செப்டம்பர் 1, 2008 முதல் கலிபோர்னியாவில் உள்ள இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராக இருந்தார்[6][7][8]. இவர் 2014 ஆம் ஆண்டுக்கான ஃபீல்டுசு பதக்கத்தை வென்ற நால்வருள் ஒருவர். இவரே ஃபீல்டுசு பதக்க வரலாற்றில் இப்பதக்கத்தை வென்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது[9][10][11][12]
இவருடைய கணித ஆய்வுகளுள் தைச்சுமில்லர் கொள்கை (Teichmüller theory), அதிபரவளைவு வடிவக்கணிதம், எர்கோடியக் கொள்கை (ergodic theory), நுண்பகுப்பிய இடவியல் துறையில் அடங்கும் சிம்பிளைட்டிய வடிவவியல் (symplectic geometry).[5] போன்றவை அடங்கும்.
மீர்சாக்கானி 1994 ஆம் ஆண்டும் 1995 ஆம் ஆண்டும் நடத்தப்பெற்ற அனைத்துலக கணித ஒலிம்பியாடு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று உலகக் கணித ஆர்வலர்கள் அறிஞர்களை ஈர்த்தார்.[13]
கல்வி[தொகு]
மீர்சாக்கானி ஈரானில் தெகரான் நகரில் உள்ள ஃபார்சானேகன் பள்ளி (Farzanegan School), தனிமிகுதிறன் கொண்டவர்களின் வளர்ச்சிக்காக உள்ள தேசிய நிறுவனத்திலும் (National Organization for Development of Exceptional Talents,NODET) பயின்றார். இவர் இளநிலை அறிவியல் பட்டத்தைக் கணிதத்துறையில் தெகரானில் உள்ள சரீஃபு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Sharif University of Technology) இருந்து பெற்றார். பின்னர் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்பொழுது ஃபீல்டுசு பதக்க வெற்றியாளரான கர்ட்டிசு மெக்மியுல்லன் (Curtis McMullen) நெறிகாட்டுதலில் இருந்தார். 2004 ஆம் ஆண்டு ஆய்வுச் சிறப்பாளராக (research fellow) கிளே கணிதக் கழகத்திலும், பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இருந்தார்.[14]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ Mirzakhani, Maryam. "Curriculum Vitae" இம் மூலத்தில் இருந்து 24 November 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051124105510/http://www.claymath.org/fas/research_fellows/Mirzakhani/cv.pdf. பார்த்த நாள்: 13 August 2014.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் மரியாம் மீர்சாக்கானி
- ↑ "Mirzakhani Curriculum Vitae". Princeton University இம் மூலத்தில் இருந்து 29 ஆகஸ்ட் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080829154341/http://www.math.princeton.edu/~mmirzakh/data/cv.pdf. பார்த்த நாள்: 12 August 2014.
- ↑ Jonathan, Webb (2014). "First female winner for Fields maths medal". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-28739373. பார்த்த நாள்: 13 August 2014.
- ↑ 5.0 5.1 "Curriculum Vitæ, Maryam Mirzakhani (older version, at CMI)" இம் மூலத்தில் இருந்து 24 November 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051124105510/http://www.claymath.org/fas/research_fellows/Mirzakhani/cv.pdf. பார்த்த நாள்: 12 August 2014.
- ↑ எஆசு:10.1090/S0894-0347-06-00526-1
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1007/s00222-006-0013-2
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ "Stanford Report, 9 April 2008 – Report of the President to the Board of Trustees". Stanford University. 9 April 2008. http://news.stanford.edu/news/2008/april9/prezreport-040908.html. பார்த்த நாள்: 12 August 2014.
- ↑ எஆசு:10.1038/nature.2014.15686
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ "IMU Prizes 2014". International Mathematical Union இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226060901/https://www.mathunion.org/general/prizes/2014%0A. பார்த்த நாள்: 12 August 2014.
- ↑ Mathis-Lilley, Ben (8 August 2014). "A Woman Has Won the Fields Medal, Math's Highest Prize, for the First Time". Slate. http://www.slate.com/blogs/the_slatest/2014/08/12/first_female_fields_medal_winner_maryam_mirzakhani_of_stanford.html. பார்த்த நாள்: 13 August 2014.
- ↑ Polo, Susana. "Maryam Mirzakhani Becomes First Woman to Earn Fields Medal for Mathematics in Its 78 Year History". The Mary Sue. http://www.themarysue.com/woman-wins-fields-medal-for-first-time. பார்த்த நாள்: 13 August 2014.
- ↑ "மரியாம் மீர்சாக்கானி-இன் முடிவுகள்". http://www.imo-official.org/participant_r.aspx?id=926.
- ↑ மரியாம் மீர்சாக்கானி's publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
வெளியிணைப்புகள்[தொகு]
- Bjorn Carey (12 August 2014). "Stanford's Maryam Mirzakhani wins Fields Medal". Stanford News. http://news.stanford.edu/news/2014/august/fields-medal-mirzakhani-081214.html. பார்த்த நாள்: 13 August 2014.