உள்ளடக்கத்துக்குச் செல்

மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண. ம. சே. கருணாரத்தினம் அடிகள்
Rev Father M. X. Karunaratnam
பிறப்பு(1951-04-12)ஏப்ரல் 12, 1951
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புஏப்ரல் 20, 2008(2008-04-20) (அகவை 57)
வன்னி இலங்கை
பணிமதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர், தலைவர், வடகிழக்கு மனித உரிமைச் செயலகம்

வண. மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம் அடிகள் (Rev. Father Mariampillai Xavier Karunaratnam; ஏப்ரல் 12, 1951 - ஏப்ரல் 20, 2008) இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுருவும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் வடகிழக்கு மனித உரிமைச் செயலகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். 2008 ஏப்ரல் 20 இல் இவர் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியினர் என நம்பப்படும் நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.[1][2][3][4]

வாழ்க்கைச் உருக்கம்

[தொகு]

கருணாரத்தினம் அடிகளார் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இலங்கை வங்கி பணியாற்றிய பின்னர் 1989 ஆம் ஆண்டில் கத்தோலிக்க திருச்சபையின் மதகுருவானார். இவர் வடகிழக்கு மனித உரிமைச் செயலகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்து செயல்பட்டார். யாழ்ப்பாணத்தின் அரசுசார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பின் தலவராகவும் பணியாற்றினார். இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போர், மற்றும் சுனாமியினால் இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுப் பணிகளில் தீவிரமாக இருந்து செயல்பட்டார்.[5][6] வடக்கு கிழக்கு பகுதிகளில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க வருமாறு ஐக்கிய நாடுகள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தார்.[3][7][8]

படுகொலை

[தொகு]

இவர் வன்னியில் ஞாயிறு ஆராதனையை முடித்து விட்டு திரும்பும் வழியில், மல்லாவி-வவுனிக்குளம் வீதியில் கிளைமோர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தார். இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியினரே இத்தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[3][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NESOHR Condemns Father Karunaratnam's Assassination" (PDF). Archived from the original (PDF) on 2012-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-05-02.
  2. Prominent priest killed in Sri Lanka blast
  3. 3.0 3.1 3.2 NESoHR Chairman Fr. Karunaratnam killed in DPU attack
  4. Targeted Killing of Rev. M. X. Karunaratnam is a War Crime
  5. SRI LANKA Catholic Priest Killed Returning From Sunday Mass
  6. "Rev. Fr. Karunaratnam of Jaffna Diocese Killed in a claymore blast". Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2014-05-02.
  7. Appeal to UN on Bindunuwewa
  8. Sri Lanka: Killing of human rights defender Reverend Father M X Karunaratnam
  9. Sri Lanka :of human rights defender Rev. Fr. M X Karunaratnam
  10. 2008 Report on International Religious Freedom - Sri Lanka

வெளி இணைப்புகள்

[தொகு]